சுய தணிக்கைக்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் மன்றம் (Indian Writers Forum) அறிக்கை வெளியீடு

/files/detail1.png

சுய தணிக்கைக்கு எதிராக இந்திய எழுத்தாளர்கள் மன்றம் (Indian Writers Forum) அறிக்கை வெளியீடு

  • 0
  • 0

-V.கோபி 

நமது குழுவினரை “கலாச்சார குண்டர்கள்” மறுபடியும் தாக்க தொடங்கியுள்ளனர். தனது குடும்பத்தினர் மீது தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதால்,, மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவரும் தனது மீசா (தமிழில்: மீசை) நாவலை நிறுத்துவதாகவும் சரியான சூழல் அமையும் போது நாவலை வெளியிடுவதாகவும் மலையாள எழுத்தாளர் ஹரிஷ் தெரிவித்துள்ளார். இதுவே இவரது முதல் நாவலாகும். இதற்குமுன் சிறுகதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள ஹரிஷ். 

மீசா நாவலின் முதல் மூன்று பாகங்கள் மாத்ருபூமி இதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதன்பிறகே வலது சாரி அமைப்புகள் ஹரிஷை அச்சுறுத்த தொடங்கினர். சமீப காலங்களில் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர் கதையாகியுள்ளது.

“மத உணர்வை காயப்படுத்தியதாகவும்”, “இந்துக்களை பற்றி அவதூறாக எழுதியதாகவும்” ஹரிஷ் மீது குற்றம்சாட்டப்படுகிறது. இதற்காக அவரது கையை வெட்டி அவருக்கு “பாடம் புகட்ட வேண்டும்” என வெளிப்படையாக அச்சுறுத்துகின்றனர். மேலும் அவரது குடும்பத்தினரை சமுக வலைதளத்தில் இழிவாக விமர்சித்து வருகின்றனர். மாத்ருபூமி வார இதழின் பிரதிகள் தீயிட்டு கொளுத்தப்படுகின்றன. ‘இலக்கியம்’ மரண கும்பலால் எரியூட்டப்படுவதாக இதழின் ஆசிரியர் டிவிட்டரில் வருந்துகிறார்.

மீசா நாவலில் உள்ள கதாபாத்திரம் ஒன்று பெண்கள் கோயிலுக்குள் செல்வது பற்றி கூறியதற்கே ஹரிஷ் இந்த அளவிற்கு தாக்கப்படுகிறார். மேலும் இது ஆசிரியரின் கூற்றும் அல்ல; நாவலில் வருகின்ற கதாபாத்திரம் பேசுவதே. அதுவும் நாவலின் தொடர் இப்போதுதான் வெளியாகியுள்ளது, இன்னும் கதாபாத்திரம் கூட முழுதாக வெளிப்படவில்லை. அப்படியிருக்கையில் இதுபோன்ற சிதறுண்ட வாசிப்பினால், நாளை அனைத்து இலக்கியங்களும், சினிமாவும், கலையும் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகும். நாவலின் கருத்தோடு உடன்படவில்லை என்பதற்காக அச்சுறுத்துவதோ, அவமானப்படுத்துவதோ ஏற்புடைய செயல் அல்ல. நமது பல் கலாச்சார வெளிப்பாடுகளை தாக்கும் இக்குண்டர்களால், நாம் மேலும் ஒரு நாவலை இழந்து நிற்கிறோம்.

ஏற்கனவே கேரளாவின் பல எழுத்தாளர்கள் ஹரிஷிற்கு ஆதரவளித்துள்ளனர். ஜனநாயக நாட்டில் வாழும் எழுத்தாளர்களும் வாசகர்களுமாகிய நாம், “சரியான சூழல்” வரும்வரை காத்திருக்க முடியாது. எழுத்தாளரும் கலைஞர்களுமாகிய நாமே கலாச்சார சூழலை உருவாக்க வேண்டுமே தவிர வகுப்புவாத அரசியல்வாதிகள் அல்ல. பல்வேறு சமுகத்தினை வெளிகாட்டுவதற்கு நமது உணர்வுகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவது அவசியமான ஒன்று என்பதை நாம் வலியுறுத்த வேண்டும்.

தொடர் தொல்லைகளால் தனக்குள் இருந்த எழுத்தாளன் இறந்து விட்டதாக பெருமாள் முருகன் கூறியது போல் மீண்டும் யாருக்கும் ஏற்படக்கூடாது. சமீபத்தில் கூட கேரள கவிஞர் குரீபுலா ஸ்ரீகுமார் தாக்கப்பட்டுள்ளார். இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. எங்களது தோழமை கலாச்சார குழுவினரை நாங்கள் கேட்டுகொள்வது ஒன்றுதான்: வலது சாரி குழுக்களின் அச்சுறுத்தலுக்கு அடிபணியாமல் எதிர்த்து போராடுங்கள். மேலும் இச்சமயத்தில் எழுத்தாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் தங்கள் பணிகளை செய்திட பாதுகாப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி தருமாறு மத்திய, மாநில அரசை கேட்டு கொள்கிறோம்.

எழுத்தாளர்களை அமைதிபடுத்தினால் எந்த ஜனநாயகமும், எந்த கலாச்சாரமும் தளைக்காது. ஆகவே எழுத்தாளர்களை சுய தணிக்கை செய்யமாறு தொல்லை கொடுக்கும் இத்தகைய குண்டர்களை நம்மிடம் உள்ள அத்தனை வார்த்தைகளை கொண்டும் எதிர்க்க வேண்டும். 

நன்றி  http://indianculturalforum.in/2018/07/23/writers-against-self-censorship/

Leave Comments

Comments (0)