ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவிற்கு செல்லவில்லை?

/files/detail1.png

ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவிற்கு செல்லவில்லை?

  • 14
  • 0

- V.கோபி 

ஜூலை 20,1969-ம் ஆண்டு மனிதன் முதல் முறையாக நிலவில் காலடி எடுத்து வைத்தான். கடைசி முறையாக மனிதன் நிலவிற்கு போனது டிசம்பர் 11,1972. அதன்பிறகு, நாஸா தனது அப்போலோ திட்டத்தை நிறுத்திக் கொண்டது. ஏன் இந்த 45 வருடங்களில் மறுபடியும் மனிதன் நிலவுக்கு செல்லவில்லை? கடந்த நான்கு தசாப்தங்களில் வின்வெளி பந்தயங்கள் குறித்தான கவனம் மாற்றம் அடைந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.

ஏன் மனிதனை நிலவிற்கு அனுப்பினோம் என்பது நன்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து பனிப்போர் தொடங்கிய சமயத்தில், அமெரிக்காவிற்கும் சோவியத் யுனியற்கும் இடையில் பலத்த ஆயுத போட்டி நிலவியது. இதில் ஒருவொருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்தனர்.

இந்த போட்டியின் உச்சநிலையாக, உலகத்தின் மறுபக்கம் வரை தாக்கும் ஏவுகணைகளை இருவரும் தயாரித்தனர். இதிலிருந்து அனுகூலம் பெறுவதற்கு இருவரும் போராடி வந்த நிலையில், இரு நாடுகளும் தங்கள் பார்வையை முதலில் பூமியின் கீழ் சுற்றுவட்ட பாதையை நோக்கியும், இதன் அடுத்தகட்ட உயர்நிலையாக கருதப்படும் நிலவை நோக்கியும் திருப்பின. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் விண்வெளி கப்பலில் மனிதனை அனுப்பும் ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கியது.

தங்கள் முதல் செயற்கைக்கோளை செலுத்திய சில மாதங்களுக்கு பிறகு, 1961-ம் ஆண்டு யுரி கேகரினை வின்வெளியில் இறக்கியது சோவியத் யுனியன். இரு நாடுகளுக்கும் இடையில் பதட்டம் அதிகரித்த நிலையில், சோவியத்தின் ஆராய்ச்சியை நெருக்கமாக பின் தொடர்ந்த அமெரிக்காவிற்கு இது மேலும் அந்தஸ்து பிரச்சனையாக உருவெடுத்தது.

எனினும், 1966-ம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையிலான வின்வெளி பந்தயம் உச்சத்தில் இருந்தபோதும், அமெரிக்க அரசின் பட்ஜெட்டில் 4.5 சதவிகிதமே நாஸாவிற்கு ஒதுக்கபட்டது. இன்றைய மதிப்பில் இது 182 மில்லியன் டாலர். சிக்கனமான நிதியிலேயே அமெரிக்கா விண்வெளி திட்டத்தில் பல சாதனைகள் படைத்தது. இதை ஒப்பீடு செய்து பார்க்கும்போது, 1982-ம் ஆண்டு அமெரிக்க பட்ஜெட்டில் விண்கல திட்டத்திற்கான செலவினம் வெறும் முக்கால் சதவிகிதமே. அதுவும் 2000 வருடங்களில் சர்வதேச வின்வெளி நிலையத்திற்கான செலவினம் மிகவும் சிறிய சதவிகிதமே.

1969-ம் ஆண்டு அப்பல்லோ விண்கலம் நிலவில் இறங்கியதும், அப்பல்லோ திட்டத்திற்கான அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவு குறையத் தொடங்கியது. 1973-ல் ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியை தொடர்ந்து அமெரிக்கர்கள் நிதி கையாள்வதில் எச்சரிக்கையாக இருந்ததன் விளைவாக, முன்னுரிமைகள் மாறின. இந்த சமயத்தில் வின்வெளி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும், பொறுப்புடன் நிதியை செலவழிக்க வேண்டியதாகயிருந்தது.

இதனால் அறிவியல் ஆராய்ச்சிகளில் மட்டும் தன்னை மட்டுப்படுத்திக் கொண்ட நாஸா, வான் ஆராய்ச்சிகூடம் மற்றும் விண்கல திட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தது. பூமியின் புவியீர்ப்பு விசையை தகர்க்கும் மிகப்பெரும் Saturn V ராக்கெட்கள் தயாரிப்பதை நிறுத்திக்கொண்ட நாஸா, தன்னிடமுள்ள உபயோகப்படுத்தப்படாத ராக்கெட்களை அருங்காட்சியக பார்வைக்கு அனுப்பியது. அதிகளவில் மனிதர்கள் நிலவில் இறங்குவதற்கு தேவையான இயற்பியல் மற்றும் தொழில்நுட்ப கட்டுமானங்கள் மறையத்தொடங்கின. எனினும், விண்கல திட்டங்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் செயல்பட்டது. 

மறுபயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும் என்று கருதப்பட்ட விண்வெளி கப்பல்கள் – அப்பல்லோ திட்டத்தை விட விலை குறைவாக இருக்கும் என்ற நோக்கில் – எல்லா தேவைகளும் கட்டி முடித்த பிறகே, இந்த விண்லகன் புதுப்பிப்பதற்கு சிரமமானதும் விலை அதிகமானது என்றும் தெரியவந்தது.
சேலஞ்சர் விண்கலம் 1986-ம் ஆண்டு வெடித்து சிதறி அதில் இருந்த அனைவரும் இறந்ததால், விண்கல திட்டத்தில் இரண்டரை வருட தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு நாஸா-வால் தொடங்கப்பட்ட விண்கல திட்டங்கள் மிகவும் கவனத்தோடு கையாளப்படன.

1990-களில் சோவியத் யுனியன் சிதறுண்டதும் பனிப்போர் முடிவிற்கு வந்தது. இதனால் புதிதாக தொடங்கப்பட்ட ரஷ்ய பெடரல் ஸ்பேஸ் ஏஜென்சியில், குறைந்த நிதி ஆதாரத்தை கொண்டு பழமையாகிப் போன விண்வெளி நிலையம் மற்றும் 1960-ல் இருந்த அதே பழைய சோயஸ் விண்கலத்தையே ரஷ்யா உபயோகிக்க வேண்டியதாக இருந்தது.

விண்வெளி நிலையம் ஒன்று நாஸாவிற்கு எப்போதும் தேவையாக இருந்தாலும், விண்கல திட்டம் அதிக செலவை இழுப்பதால் அதனை செயல்படுத்த முடியாமல் இருந்தனர். பனிப்போர் முடிந்த பிறகு, ரஷ்யா மற்றும் இதர நாடுகளோடு இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை கட்டுவதற்கும் அதற்குண்டான செலவினங்களை ஒவ்வொரு நாடுகளும் பிரித்துக்கொள்ளவும் அமெரிக்க யோசனை கூறியது. 

சர்வதேச விண்வெளி வீர்ர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்வதால் நாடுகளுக்கு இடையில் நல்ல நட்புறவை பேணுவதற்கு உதவிகரமாக இருக்கும். 2000-ம் ஆண்டு முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீர்ர்கள் அடங்கிய குழுவினர் சென்றனர். இந்த நிலையத்தை 2024-ம் ஆண்டுவரை பயன்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளனர்.

சமீப வருடங்களில் மறுபடியும் விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பூமியின் சுற்றுப்பாதையும் தாண்டி செவ்வாய் கிரகத்திற்கு ஓரியான் என்ற விண்கலத்தை அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறது நாஸா. அதுமட்டுமின்றி, Space X போன்ற நிறுவனங்கள் குறைந்த செலவில் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி இத்துறையில் பெரும் பாய்ச்சலை உண்டாக்கியுள்ளது. ஆகவே மறுபடியும் நாம் நிலவுக்கு செல்லும் காலம் வரப்போகிறது.

நன்றி: thevintagenews 

Leave Comments

Comments (0)