அச்சுறுத்தலால் நம்மை மௌனமாக்க முடியாது

/files/detail1.png

அச்சுறுத்தலால் நம்மை மௌனமாக்க முடியாது

  • 0
  • 0

-V. கோபி

 

(என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எனது அறிக்கை - உமர் காலீத் )

தொடர்ந்து எனக்கு வரும் கொலை மிரட்டல்களாலும், கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு செயற்பாட்டாளர்களும் கொலை செய்யப்படுவதை பார்த்து வருவதாலும், ஒருநாள் என்னை நோக்கியும் அந்த துப்பாக்கி திரும்பும் என்பதை தெரிந்தே வைத்துள்ளேன். தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் என கொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அதற்காக நானும் தயார் என கூற முடியுமா? இதுபோன்ற முடிவை நிஜத்தில் ஏற்க தயார் என யாராலும் கூற முடியுமா? நிச்சியமாக இல்லை. 
சுதந்திர தினத்திற்கு இரு நாட்களுகு முன்பு, அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் யாரும், அவர்கள் இந்நாட்டின் குடிமக்களாக இருந்தாலும் இறப்பதற்கு தயாராக இருக்க வேண்டுமென்றால், உண்மையில் ‘சுதந்திரம்’ என்பதற்கு என்ன அர்த்தம். இதில் உள்ள முரண் என்னவென்றால், “அச்சத்திலிருந்து விடுதலை” என்ற தலைப்பிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்லும்போதே என்னை கொல்ல முயற்சி செய்துள்ளனர்.

சுதந்திர தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, அதுவும் அதிக பாதுகாப்பு பகுதிகள் கொண்ட தேசிய தலைநகரத்தில், பகல் நேரத்தில் ஆயுதம் ஏந்தி ஒருவன் தாக்க வருகிறான் என்றால், இந்த ஆட்சியில் சிலர் தண்டனையிலிருந்து தப்பித்து வருவதையே இது நமக்கு உணர்த்துகிறது. என்னை கொல்ல வந்தவன் யார் என்றோ, அவனுக்கு பின்னால் உள்ள இயக்கம் என்னவென்றோ எதுவும் எனக்கு தெரியாது. காவல்துறையினரே அதை விசாரிக்க வேண்டும். ஆனால் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன், நேற்று ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் அல்லது நாளையோ மற்றொரு நாளோ நடந்தால், “அடையாளமற்ற கொலையாளியை” பொறுப்பாக்கும் எண்ணத்தை இப்போதே கைவிடுங்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு வெறுப்பையும் அச்சுறுத்தும் சூழலையும் ஏற்படுத்துபவர்களே  உண்மையான குற்றவாளிகள். கொலையாளிகளையும் கும்பல் கொலைகாரர்களையும், தண்டனையிலிருந்து தப்பிக்கும் சூழலை உருவாக்குபவர்களே உண்மையான குற்றவாளிகள். ஆளும் கட்சியின் செய்தி தொடர்பாளர்களும், “பிரைம் டைம்” தொலைக்காட்சி நிகழ்ச்சி நடத்துனர்களும், பொய்களின் அடிப்படையில் கும்பல் கொலைகார்ர்கள் தாக்குவதற்கு வசதியாக என்னை தேச விரோதி என கூறிய தொலைக்காட்சி அலைவரிசைகளே உண்மையான குற்றவாளிகள். இப்போது என் வாழ்க்கையே மிகவும் பாதுகாப்பற்ற நிலைமையில் உள்ளது.

இன்று காவல்துறையினர் 307வது பிரிவு மற்றும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு செய்த பிறகும், கொலை முயற்சி தாக்குதல் எதுவும் நடைபெறவில்லை என்றும் நானே திட்டமிட்டு நட்த்திய நாடகம் எனவும் பாரதிய ஜனதா எம்பி மீனாட்சி லேகியும் இதர காவி கோஷ்டிகளும் கூறி வருகின்றனர். நான் இதுவரை யாரையும் கைகாட்டாத நிலையில், ஏன் இவர்கள் தானாகவே வந்து நடந்த சம்பவத்தை மாற்றி கூறுகிறார்கள்? அவர்களது குற்றவுணர்ச்சி தான் இப்படியெல்லாம் கூற சொல்கிறதா? உதாரணத்திற்கு கவுரி லங்கேஷ் கொலையை எடுத்து கொண்டால் இதுவரை கைது செய்யபட்டவர்கள் அனைவரும் தீவிரவாத இந்துத்துவ இயக்கங்களோடு தொடர்புடையவர்கள். ஆகவே “அடையாளமற்ற கொலையாளி” என நாம் கூறும்போது, இந்த தீவிரவாத செயலுக்கு பின்னால் இருந்து இயங்குபவர்களையும் நாம் கண்டுபிடிக்க வேண்டியது முக்கியமானதாகும்.

எந்த ஆதாரமும் இல்லாமல் வெறும் பொய்களால் மட்டுமே கடந்த இரண்டு வருடங்களாக என் மீதான வெறுபு பிரச்சாரம் நடந்தேறி வருகிறது. இங்கு எந்த குற்றப்பத்திரிக்கையும் கிடையாது, எல்லாம் ஊடகமே விசாரித்து முடிவு செய்து விடும். இங்கு எந்த விவாதமும் கிடையாது, கொலை மிரட்டல் மட்டுமே. கடைசியில் தற்போது துப்பாக்கியில் வந்து நிற்கிறது. ஏன் என் பெயருக்கு முன்னால் “Tudke, Tudke” என்ற ஹேஷ்டாக் போடுகிறார்கள், அதே சமயத்தில் குறிப்பிட்ட திரைப்படம் வெளியாகும் போது “Tudke, Tudke” என கூறுவோர்களை ஏன் பாரதிய ஜனதா தலைவர்கள் ஆதரிக்கிறார்கள்? ஏன் நான் நாட்டிற்கு எதிரானவன் என்று கூறி ஊடகங்கள் அனைத்தும் விசாரணை செய்து வருகிறது. இதற்கு முடிவே இல்லையா? அதேசமயத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லி போலீஸ் முன்னிலையில் அரசியலமைப்பு சட்டத்தை எரித்தவர்கள் மீது எந்தவித சினமும் யாரும் கொள்வதில்லை. நாட்டில் வெறுப்பை வளர்த்து, சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக மக்களை ஒருமுகப்படுத்துபவர்களும், கும்பல் கொலைகாரர்களை மாலையிட்டு வரவேற்பவர்களும் ஏன் மதிக்கப்படுகிறார்கள். சமூகத்தை ஜாதியின் பெயரால் பிரிப்பவர்களையும் தலித் மக்களை தாக்குபவர்களையும் -- உதாரணமாக சம்பாஜி பிண்டே, இவரை பிரதமர் மோடி மகா புருஷர் என கூறுகிறார் -- நாட்டை துண்டாக்குபவர்கள் என ஏன் குறை கூற முடியவில்லை. ஆனால் வெறுப்பிற்கு எதிராக பேசும் நாங்கள் வில்லன்கள். ஏழைகளை கணக்கில் கொள்ளாமல் இந்த நாட்டை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எழுதி கொடுக்கும் ஆட்சியில் இருப்பவர்களை தேசபக்தர்கள் என்றும் அவர்களை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்றும் ஏன் அழைக்கிறார்கள்?. இதெல்லாம் இன்றைய காலத்தில் அவசியமான கேள்விகள்.

இது போன்ற அச்சுறுத்தல்களால் நம்மை மௌனமாக்கி விடலாம் என அவர்கள் நினைத்தால் அது அவர்களின் தவறு. கவுரி லங்கேஷின் சிந்தனையும் ரோகித் வெமுளாவின் சிந்தனையும் நீண்ட காலம் நிலைத்திருக்கும். சிறையில் அடைத்தோ துப்பாக்கி குண்டு வைத்து மிரட்டியோ எங்களை மௌனமாக்க முடியாது. 

நேற்றே இதை நாங்கள் நிரூபித்துவிட்டோம். என் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், “அச்சத்திலிருந்து விடுதலை” நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது. நஜீப்பின் தாய் பாத்திமா நபீஸ், அலிமுதின் ( இவரை கொன்றவரை தான் மத்திய அமைச்சர் ஜெயந்த் ஷா மாலையிட்டு வரவேற்றார்) மனைவி மரியம், ரயிலில் எரித்து கொல்லப்பட்ட 16 வயது இளைஞன் ஜுனைத்தின் அம்மா பாத்திமா, டாக்டர்.கபீல் கான், பிரசாந்த் புஷன், பேராசிரியர் அபூர்வான்ந்த், தராபுரி, மனோஜ் ஜா என பலரும் நிகழ்சியில் கலந்து கொண்டு வெறுப்பிற்கு எதிராகவும், கும்பல் கொலைகளுக்கு எதிராகவும், காவி பயங்கரவாதத்திற்கு எதிராகவும் பேசினர். இதுவே எங்கள் எதிர்ப்பின் பண்பு.

என் மீது தொடர்ந்து கொலை முயற்சி தாக்குதல்கள் நடைபெறுவதால் டெல்லி போலீசார் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மறுபடியும் கேட்டு கொள்கிறேன். கடந்த இரண்டு வருடங்களில், எனக்கு பாதுகாப்பு வழங்குமாறு இரு முறை டெல்லி போலீசாரிடம் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களிடத்தில் எனக்கு கிடைத்தது இரக்கமற்ற பதிலே. இதற்கு முன் பல தடவை எனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளன. தினமும் சமூக வலைதளத்தில் எனக்கு கொலை மிரட்டல் விடப்படுகிறது. நேற்று நடந்த சம்பவத்திற்கு பிறகும், ஏன் டெல்லி காவல்துறை இன்னும் காத்து கொண்டிருக்கிறது? எனக்கு பாதுகாப்பு வழங்க டெல்லி காவல்துறைக்கு அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து ஜனநாயக இயக்கங்களையும் இந்த சமயத்தில் கேட்டு கொள்கிறேன். போதிய பாதுகாப்பு இல்லாமல் என்னால் இனி வெளியே எங்கும் செல்ல முடியாது.

இந்த சமயத்தில் என்னோடு துணை நின்ற அனைத்து நலம் விரும்பிகளுக்கும், நீதிக்காக போராடு இணை போராளிகளுக்கும், என் மீது தொடுக்கப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை கண்டித்து பேசிய அனைவருக்கும் என நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஜன்நாயகத்திற்காக நாம் அனைவரும் இணைந்து போராடும் இந்த போராட்டத்தில், சாவர்கர் மற்றும் கோட்சேயின் தொண்டர்களை நாம் நிச்சியம் வெற்றி கொள்வோம். நாளை இதைவிட அதிகமான பொய் குற்றச்சாட்டை நம்மீது செங்கோட்டையில் இருபவர்கள் கூறலாம். ஆனால் உண்மையான சுதந்திரமும், கௌரவமும் கிடைக்கும் வரை, பகத் சிங், பாபாசாகேப் அம்பேத்கர் கனவுகளை நிஜமாக்கும் வரை நமது போராட்டம் தொடரும்.

ஜெய் பீம், லால் சலாம்

 

உமர் காலீத்

 

Leave Comments

Comments (0)