வருங்காலத்தில் இந்துத்துவாவிற்கும் இந்துயிஸத்திற்கும் இடையே போராட்டம் தொடங்கும்

/files/detail1.png

வருங்காலத்தில் இந்துத்துவாவிற்கும் இந்துயிஸத்திற்கும் இடையே போராட்டம் தொடங்கும்

  • 3
  • 0

-V. கோபி 

கடந்த ஐம்பது வருடங்களாக RSS இயக்கத்தை ஆய்வு செய்து வரும் ஒரே ஆய்வாளர் வால்டர் ஆண்டர்சன். RSS இயக்கத்திற்குள் அவ்வுளவு சீக்கிரத்தில் யாரும் உள்நுழைந்து விட முடியாது என அறிஞர்கள் வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. RSS இயக்கத்தின் உள்நபரோ அல்லது அதன் கொள்கை மீது பிடிப்பு உள்ளவர்கள் தவிர்த்து அதன் செயல்பாடுகள் பற்றி யாரும் அறிந்து கொள்ள முடியாது. ஆகவே தான் ஸ்ரீதர் டாம்ளேவுடன் இணைந்து ஆண்டர்சன் எழுதியுள்ள THE RSS: A VIEW TO THE INSIDE என்ற நூல் முக்கியத்துவம் பெறுகிறது. (இவர்கள் இருவரும் இணைந்து BROTHERHOOD IN SAFFRON என்ற நூலையும் எழுதியுள்ளனர்). அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகம், ஷாங்காயின் தோங்ஜி பல்கலைகழகம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார்.

அவரது பேட்டி உங்களுக்காக….
 

RSS பற்றி எப்போது ஆய்வு செய்ய தொடங்கினீர்கள்? என்ன காரணம்?

சிகாகோ பல்கலைகழகத்தில் பிஹெடி மாணவராக இருந்தபோது, மாணவர்கள் அரசியலை ஆய்வு செய்ய இரண்டு வருட நல்கையில் இந்தியாவிற்கு வந்தேன். ஆனால் நான்கு வருடங்கள் இங்கு இருந்தேன். 1960ல் இந்தியாவிற்கு வந்த நான் 1970 வரை இங்கு இருந்தேன். ஆரம்பத்தில் இந்தியாவின் சிறந்த ஆய்வாளர்களான லாய்ட் மற்றும் சுசேன் ருடால்ப் இருவருமே எனது ஆலோசகர்கள். ஏன் மாணவர்கள் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்ற திட்டத்தோடு அலகாபாத், பழைய டெல்லி, கேரளா பகுதிகளில் கவனம் செலுத்தினேன். அந்த சமயத்தில் தான் RSS அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்தி அமைப்பை (ABVP) சந்தித்தேன்.

ABVP அமைப்பு எப்போது தோற்றுவிக்கப்பட்டது? முதன் முதலாக அமைக்கப்பட்ட பிரிவில் ABVPயும் ஒன்று என உங்கள் நூலில் குறிப்பிட்டுள்ளீர்கள்?

1930 காலகட்டத்தில் முதல் பிரிவாக ராஷ்ட்ரிய சேவிகா சங் என்ற பெண்கள் அமைப்பே தொடங்கப்பட்டது. அதன் பிறகே ஜன சங்கம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னர் தொழிலாளர் அமைப்பான பாரதிய மஸ்தூர் சங் மற்றும் ABVP ஆரம்பிக்கப்பட்டது. RSSன் ஒவ்வொரு பிரிவும் பிரச்சாரக் என்பவரால் வழிநடத்தப்படும். சியாம் பிரசாத் முகர்ஜி இறந்த பிறகு, தீனதயாள் உபாத்யா ஜன சங்கத்திற்கும், தட்டோபத்யா தெனாடி, மஸ்தூர் சங்கத்திற்கும் தலைமை ஏற்றனர். ABVP அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட போது தெனாடி முக்கிய பங்கு வகித்தார். நான் இந்தியாவிற்கு வந்திருந்த போது டெல்லி பல்கலைகழகத்தில் ABVP முக்கியமான அமைப்பாக வளர்ந்திருந்த்து. அப்போது RSS இயக்கத்தை பற்றி அறிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் தான் மிகச்சிறந்த மனிதரான ஏக்நாத் ரானாடேவை சந்தித்தேன்.

ஏக்நாத் என்ன பதவி வகித்தார்?

மூத்த பிரச்சாரக்காக டெல்லியில் இருந்தார். மேலை நாட்டு தத்துவத்தின் மீது அவருக்கு விருப்பம் இருந்தது. லியோ ஸ்ட்ராஸ் என்பவர் சிகாகோ பல்கலைகழகத்தில் எனது ஆலோசகராக இருந்தார். அவரது சிந்தனைகள் பற்றி ரானாடே என்னிடம் கேட்பார். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை நாங்கள் இருவரும் RSS தலைமையகத்தில் சந்தித்து கொள்வோம். எனக்கு இந்திய தத்துவத்தை கற்றுகொடுத்த ரானாடே, என்னிடமிருந்து ஸ்ட்ராஸ் சிந்தனையை தெரிந்து கொண்டார். ஒருமுறை RSS இயக்கத்தின் தலைவரான கோல்வல்கரை சந்திக்க உங்களுகு விருப்பமா என என்னிடம் கேட்டார். நானும் சரி என்றேன். நானும் டெல்லி பல்கலைகழகத்தின் மாணவர் ஒருவரும் கோல்வால்கரை பார்ப்பதற்காக மும்பைக்கு ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயனம் செய்தோம். அன்று இரவு சித்பவன் பிராமணர்கள் வசிக்கும் பகுதியில் இருந்தோம். அடுத்த நாள் மற்றொருவர் வந்து அதே மூன்றாம் வகுப்பில் என்னை நாக்பூர் அழைத்து சென்றார். இறுதியாக RSS தலைமையகத்தில் வைத்து கோல்வல்கரை சந்தித்தேன். தன்னை சந்திப்பதற்கு எனக்கொரு கால அட்டவனையை கொடுத்தார். அதாவது தினமும் ஐந்து நட்களுக்கு காலை சாப்பாட்டு வேளையில் இருவரும் இணைந்து பேசுவதாக ஏற்பாடு. அவர் எழுதிய BUNCH OF THOUGHTS நூலை பற்றியும் எனிடம் பேசினார். அதை அவரது பேச்சுக்கள் (உரைகள்) அடங்கிய தொகுப்பாக கூறலாம்.
 

அனைவரும் வாசித்துள்ள அவரது மற்றொரு நூலான WE OR OUR NATIONHOOD DEFINED பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அதை பற்றி எதுவும் என்னிடம் அவர் பேசியதில்லை. அது அவரது நூல் அல்ல என்பதை பின்பு நான் கண்டுபிடித்தேன். எல்லாருக்கும் இருந்த கருத்தொற்றுமை என்னவென்றால், அந்நூலில் அவர் பெயர் இருந்தாலும் அதை அவர் எழுதவில்லை.

நீங்கள் குறிப்பிடும் கருத்தொற்றுமை ஆய்வுலகத்தில் மட்டும்தானா அல்லது இந்து தேசிய குழுக்களிடமும் இது இருந்ததா?

அவரது இயக்கத்தினருக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரியாது. இது எனது மதிப்பீடாக இருந்தாலும் பல இந்து தேசியவாதிகளின் கருத்தை அடிப்படையாக வைத்தே நான் கூறினேன். WE OR OUR NATIONHOOD DEFINED என்ற நூல் இந்தியாவின் சிறுபாண்மையினர்கள் பற்றிய கடுமையான ஆவணம்.

கோல்வால்கரோடு உங்களது சந்திப்பு எதனை வெளிப்படுத்தியது?

இந்துத்துவாவை பற்றி நான் நன்கு அவரிடம் தெரிந்து கொண்டேன். கோல்வால்கர் ஆண்மீகவாதியாக இருந்தாலும் பக்திமான் அல்ல. அவர் மத சடங்குகளை பின்பற்றுபவர் அல்ல. தனது A BUNCH OF THOUGHTS நூலில் கூறியபடி அவருக்கு இந்திய நாடே வாழும் கடவுள். இந்த சிந்தனை 19ம் நூற்றாண்டின் ஐரோப்பிய தேசியவாதிகளின் -– கடவுளுக்கு அல்லாமல் தேசத்திற்கே நமது பக்தியை செலுத்த வேண்டும் – என்ற கருத்தை ஒத்துருந்தது. RSS என்பது பக்தி இயக்கம் அல்ல. ஆகவேதான் அடுத்த சர்வசங்கசல்க் தியோரஸ், இஸ்லாமியர்களும் RSS இயக்கத்தில் சேரலாம் என்றார். இந்தியாவில் உள்ள பெரும்பாண்மையான இஸ்லாமியர்கள் இந்துவிலிருந்து மாறியவர்களே, அவர்கள் வெளிநாட்டினர் அல்ல என்பதே அவரது வாதமாக இருந்தது. இவரது இந்துத்துவ சிந்தனை எல்லைகளை தாண்டிய ஒன்றாக இருந்தது. சொல்லப்போனால், இது சாவர்கரின் யோசனையும் கூட.
ஆனால் இது சிக்கலான சில விஷயங்களை எழுப்புகிறது. இந்தியாவில் பிறந்தாலும் இஸ்லாமியர்கள் (கிறிஸ்துவர்களும்) இந்தியர்களாக/இந்துக்களாக கருத முடியாது என சாவர்கர் கூறுகிறார். அவர் இந்துத்துவாவில் வகுத்துள்ள மூன்று வரைமுறைகளில் – பூமி (இந்திய நாடு), பித்ருபூமி (தந்தை நாடு), புன்யபூமி (மத்த்தின் தாய்நாடு)—இதில் இரண்டு தான் இஸ்லாமியர்களுக்கு பொருந்துகிறது. சீக்கீயர்கள், ஜெயின்கள், புத்தர்களுக்கு பொருந்துவது கூட -- இஸ்லாமியர்களுக்கு அவர்களது மதம் இந்தியாவில் பிறகவில்லை. ஆகவே அவர்கள் உண்மையான இந்தியர்கள்/இந்துக்கள் அல்ல என சாவர்கர் கூறுகிறார்.

RSS இயக்கத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவித்த பின் இப்பிரச்சனையை தியோரஸ் எவ்வாறு கையாண்டார்?

சாவர்கர் ஒரு கடவுள் மறுப்பாளர். அவர் ஆண்மீகவாதி அல்ல. அவர் நாட்டை கலாச்சார பார்வையில் – ஒரு குறியீடாக, மரபு வழியாக, நாம் அடையாளம் கண்டு கொள்ளும் கதைகளாக – பார்த்தார். என்ன இருந்தாலும் கடைசியில் நிலப்பகுதி சார்ந்தே RSS இயக்கம் சென்றது. அதற்காக RSS இயக்கத்தின் கலாச்சார விழுமியங்கள் மறையவில்லை. இதற்கு மாறாக தியோரஸை பொறுத்தவரை இந்தியாவில் வாழும் அனைவரும் இந்துக்கள். அனைவரும் இந்துக்கள் என முதன்முதலாக குறிப்பிட்டு அழைத்த்து இவரே. (தற்போதைய சர்சங்கசல்க் கோகன் பகவத் கூட இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரும் இந்துக்களே என கூறுபவர்) ஜாதி அமைப்பிற்கும் தீண்டாமைக்கும் எதிராக இருந்தார் தியோரஸ். கோல்வால்கர் ஒருபோதும் வெளிப்படையாக ஜாதி அமைப்பிற்கு எதிராக பேசியதில்லை. மூன்று வருட பயிற்சிக்கு பிறகு பெறும் உயரிய பிரச்சாரக் பதவிக்கு பிராமணர் அல்லாதோரையும் நியமிக்க வேண்டும் என தியோரஸ் கோரினார்.

இன்று 6,000 பிரச்சாரக்கர்கள் உள்ளார்கள் என உங்கள் நூலில் கூறியுள்ளீர்கள். என்ன உறுதிமொழியை அவர்கள் எடுப்பார்கள்?
துறவு கொள்வதாக உறுதிமொழி ஏற்பார்கள்: பொன், பொருள், ஆசைகளை, குடும்பங்களை விட்டு விலகி, RSS இயக்கத்தில் இணைவார்கள்.

திருமணம் செய்து கொள்வார்களா?

சிலர் செய்து கொள்கிறார்கள். பலர் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார்கள். ஜாதியற்ற இந்து துறவற மடமாக இதை சிலர் கூறுகிறார்கள். பல துணை அமைப்புகளில் இவர்கள் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள். எனது பார்வையில் இதுவே RSS இயக்கத்தை ஒரு குடும்பமாக இணைகிறது.
 

2015ம் ஆண்டின்படி, 36 துணை அமைப்புகள் இருப்பதாக உங்கள் நூலில் கூறியுள்ளீர்கள்?

அதன் கூடவே புதிதாக பெண்கள் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு ஸ்த்ரி சக்தி என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் நூற்றுக்கனக்கான அமைப்புகள் RSS ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

பஜ்ரங் தள் இயக்கம் முறையான ஒப்புதல் பெற்ற துணை இயக்கம் தானா?

இது VHP அமைப்பின் பிரிவாகும். ஆனால் VHP அமைப்பு RSS இயக்கத்தின் துணை பிரிவாகும்.
 

எல்லா சர்சங்கசல்க்குடனும் நீங்கள் சந்திக்க முடிந்ததா? அனைவரோடும்  உரையாடல் நிகழ்த்தியுள்ளீர்களா?

சுதர்சனை தவிர அனைவரோடும்.

ஒருவர் எவ்வாறு சர்சங்கசல்க் ஆக முடியும்?

பதவியில் இருப்பவர் அடுத்த தலைவரை தேந்தெடுப்பார். தேர்தல் முறை கிடையாது.

RSS செயல்பாடுகளில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளது? ஒருவருடைய பண்புக்கூறுகளை வளர்த்தெடுப்பதாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் தற்போது அரசிலும் கொள்கை முடிவுகளிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்த விரும்புவதாக உங்கள் நூலில் கூறியுள்ளீர்கள்?

ஆரம்பத்தில் சமூக மாற்றத்திற்கு அடிப்படையாக தினசரி சகாக்கள் மூலம் தனிப்பண்புகள் வளர்த்தெடுக்கப்பட்டன. துணை அமைப்புகள் பெருகியதும், அரசின் முடிவுகளில் தாக்கம் செலுத்த ஆரம்பித்தது. அதனுடைய தொழிலாளர் பிரிவு, விவசாய பிரிவு, பக்தி பிரிவான VHP என அனைத்தும் அரசோடு பேச ஆரம்பித்தன. இயக்கத்தின் துணை பிரிவான பாரதிய ஜனதா அரசை ஆண்டாலும் அதன் தாக்கம் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. உதாரணமாக அந்நிய நாட்டு முதலீடு விஷயத்தில் RSS இயக்கத்திற்கு நேர்மாறாக அதனை ஊக்குவித்த்து, மேலும் மோடி அரசாங்கம் இந்த விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறது. ஆக பன்புக்கூறுகளை வளர்த்தெடுப்பது இப்போதும் முக்கியமாக இருந்தாலும், அரசின் திட்டங்களில் தனது தாக்கத்தை செலுத்த RSS முனைப்பாக உள்ளது.

பிரிவுகளுக்கு இடையே சச்ரவுகள் வந்தால் RSS என்ன செய்யும்?

நடுநிலையாக, சமரசம் செய்பவராகவே RSS இயங்கும். பிரச்சனை தீரவில்லையென்றால், முடிவெடுப்பதை சற்று காலம் தள்ளிவைக்கும். உதாரணமாக, அந்நிய நாட்டு முதலீடு மீது RSS எதிர்ப்பு கொண்டிருந்த்து. ஆனால் பாஜக அரசோ தொழில்நுட்பம், வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற காரணம் காட்டி அந்நிய முதலீட்டை ஆதரித்தது. அதன் பின் RSS தனது எதிர்ப்பை குறைத்து கொண்டது. வாஜ்பாயி ஆட்சியில் அந்நிய முதலீட்டை கடுமையாக எதிர்த்த RSS, மோடியின் ஆட்சியில் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.

மோடியின் பொருளாதாரம், குறிப்பாக வெளிநாட்டு பொருளாதார கொள்கை, பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றில் RSS பார்வை என்ன?

மோடியின் வளர்ச்சிக்கு RSS காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. மோடியின் பொருளாதார கொள்கை மீது RSS நம்பிக்கையின்மையே கொண்டுள்ளது. RSS விருப்பத்தை விட அந்நிய நாட்டு முதலீடு மற்றும் வெளிநாடு வணிகம் போன்றவற்றில் மோடி மிகவும் வெளிப்படையாக உள்ளார். அவரது பணமதிபிழப்பு நடவடிக்கை RSS இயக்கத்தின் அடிப்படை ஆதாரமான சிறு வணிகர்களை மிகவும் பாதித்த்து. ஆனால் இது பற்றி எந்த தீர்மாணத்தையும் RSS நிறைவேற்றவில்லை.

மொழி அரசியலை பொறுத்தவரை, RSS ஹிந்திக்கே முன்னுரிமை அளிக்கும். தற்போது தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் விரிவாக்கம் செய்கிற நிலையில், ஹிந்திக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இனியும் தொடருமா?

அதுபோல் செய்யாது, செய்யவும் முடியாது. ஒருபக்கம் தெற்கு கிழக்கு பகுதிகளில் விரிவாக்கம் இருந்தாலும், பள்ளி கல்வியில் கற்பிக்கும் மொழியும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். RSS பள்ளிகளில் இந்தி மொழி கற்று கொடுக்கப்பட்டாலும் தாய் மொழியிலேயே பாடம் கற்பிக்கப்படுகிறது. மற்றொரு முக்கியமான மாற்றம் ஆங்கில மொழி குறித்தும் ஏற்பட்டுள்ளது. RSS இயக்கத்தை ஆதரிக்கும் நடுத்தர வர்க்கம் ஆங்கில மொழியை கற்க மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது. ஆகவே உலகளவில் நமது பலத்தை காண்பிக்க ஆங்கிலம் தேவையாக உள்ளது. அதனால் இந்தி மொழியை இனி தனியாக முன்னிலை படுத்த முடியாது.

ஜாதி குறித்து பல கேள்விகள் உள்ளது. உடன்பாடான முடிவு குறித்து பார்வை என்ன?

2015ம் ஆண்டு பீகார் தேர்தலின் போது, ஜாதி அடிப்படையை மாற்ற சரியான நேரம் வந்துள்ளதாக மோகன் பகவத் கூறினார். நீண்ட காலமாக இதனை RSS கூறிவருகிறது. ஆனால் அரசியல் புயலால் மோகன் பகவத் தனது கருத்தில் பின்வாங்கினார். மோகன் பகவத்தின் அறிக்கையினால் பாஜகவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என ஒரு தோற்றம் உண்டானது. ஆகவே இதை நிறைவேற்ற RSS முடிவெடுத்தாலும் இந்திய அரசியல் சூழலில் மிகவும் ஆபத்தானது என்பதை அறிந்தே வைத்துள்ளது.

கீழ் ஜாதியினரையும் அரவணைத்து கொள்ள விரும்பினால் எந்த வழியை RSS பின்பற்ற வேண்டும்? சமஸ்கிருதமாக்குதலா (பிராமணிய செயல்பாடுகளை அறிவுறுத்துவது) அல்லது வேறு ஏதாவதா?

சமஸ்கிருதமாக்குதல் கோல்வால்கர் பின்பற்றியது. ஆனால் ஜாதி அமைப்பிற்கு எதிராக தியோரஸ் தாக்குதல் ஏற்படுத்திய பிறகு இந்த முறை முக்கியத்துவம் இழந்துவிட்டது. சமத்துவ உரிமையை சிறந்ததாக தீன தயாள் உபாத்யா எழுத்துக்கள் கூறுகிறது.

பின்பு ஏன் ஒரு தலித்தோ பிற்பட்ட வகுப்பினரோ சர்சங்கசல்க் ஆக முடியவில்லை? ராஜேந்திர சிங்கை தவிர்த்து அனைத்து சர்சங்கசல்க்கு பிராமனர்களே?

தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பிரச்சாரக் உள்ளார்கள். பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மோடி ஒரு பிரச்சாரக் தான். அதற்கு இன்னும் காலம் கனியவில்லை.
அம்பேத்கர் பற்றி RSS பார்வை என்ன?

அம்பேத்காரால் வடிவமைக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தையும் இந்து குடும்ப சட்ட்த்தையும் RSS தீவிரமாக எதிர்த்து வருவதையும் நாங்கள் அறிவோம்.
கடந்த காலங்களில் எப்படியோ, இப்போது அம்பேத்கர் ஒரு நாயகர்.
ஆனால் அம்பேத்கர் ஒரு இந்து மத எதிர்ப்பாளர். இந்துஸித்தின் மையமே ஜாதி தான் என தனது எழுத்துக்கள் மூலம் நிரூபித்தவர். தனது இறப்பிற்கு முன்னால் இந்து மத்த்தை விட்டு வெளியேறியவர்?

இதனால் தான் இந்துத்துவாவிற்கும் இந்துயிசத்திற்கும் இடையே ஒரு போர் இருப்பதாக நான் நம்புகிறேன். இதற்கு உதாரனம் ஒன்று கூறுகிறேன். சமத்துவ சிந்தனையை பின்பற்றி, RSS சிந்தனையாளரும் முன்னாள் பத்திரிக்கை ஆசிரியருமான தருன் விஜய், சில தலித்களை அழைத்து கொண்டு அவர்கள் உள்ளே நுழையாத கோயிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் இந்த செயலுக்காக கடுமையாக தாக்கப்பட்டார். சிலர் அவருகு ஆதரவாக பேசினாலும் RSS எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் RSS இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்: சமத்துவ இந்து சமூகத்தை நோக்கி நாம் போகும்போது, நமது அமைப்பை எவ்வாறு சேதமுறாமல் பாதுகாப்பது?
நிறைவான இந்து பெண்மனியை பற்றி RSS பார்வை என்ன?

நல்ல தாயாகவும் மனைவியாகவும் இருப்பதே சிறந்த பெண்ணின் பண்பாக கோல்வால்கர் தனது எழுத்துகளில் வலியுறுத்துகிறார். அதே சமயத்தில் 1857ம் ஆண்டு ஆங்கிலேய அரசிற்கு எதிராக வீரத்துடன் போராடிய ஜான்சி ராணியையும் சிறந்த பெண்மனியாகவே கருதுகிறார்கள்.

தனது திருமணத்தில் சந்தோஷம் கொள்ளாத பெண், விவாகரத்து பெற உரிமை உண்டா?

விவாகரத்து பெற்ற RSS பெண்மனிகளை எனக்கு நன்கு தெரியும். ஆனால் குடும்பத்தில் பெண்களின் பங்கு என்ன என்பதை வலியுறுத்த வேண்டிய கட்டாயத்தில் RSS உள்ளது என்பதில் சந்தேகமே இல்லை.

சிந்தனையில் வளர்ச்சி இருந்தாலும், கோல்வால்கரின் புரிதலுக்கே மீண்டும் மோடி திரும்புகிறார்?

இது பொதுப்படையான பிரச்சனை. RSS இயக்கத்தில் இஸ்லாமியர்கள் சேர்ந்து கொள்ளலாம் என விரும்புகிறவர்கள் கூட வரலாற்றுப்பூர்வமான இந்திய கலாச்சாரத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என நினைக்கிறார்கள்.
 

ஆனால் இந்தியாவின் கலாச்சார – கலை, மொழி, தினசரி பழக்கவழக்கம், கவிதை, கட்டிடகலை, இசை – என எல்லாவற்றிலும் இஸ்லாமியர்களின் பங்கு உள்ளதே?

நான் இதை ஒத்துகொள்கிறேன். ஆனால் தென்னிந்திய இஸ்லாமியர்கள் அல்லது இந்தோனேசிய இஸ்லாமியர்களே உண்மையான இஸ்லாமியர்கள் என அவர்கள் வாதாடுகிறார்கள். தென்னிந்திய இஸ்லாமியர்கள் பிராந்திய மொழியை பேசுகிறார்கள்; இஸ்லாமிய நாடான் இந்தோனேசியாவில் ராமாயனம் தேசிய காவியம்.
இதை வைத்து பார்க்கும் போது வட இந்தியவில் பரவலாக பேசப்படும் உருது மொழி இந்திய மொழி கிடையாதா? இதை ஏற்றுகொள்ள முடியவில்லை, உருது மொழி மத்திய கிழக்கு நாடுகளில் பிறக்கவில்லை. ஆம் கொள்கை அளவில் இஸ்லாமியர்களை RSS மற்றும் பாரதிய ஜனதா சேர்த்து கொண்டாலும், 2014ம் ஆண்டு நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில், அம்மாநிலத்தில் 19% உள்ள இஸ்லாமியர்களுக்கு ஏன் ஒரு இடம் கூட பாரதிய ஜனதா கட்சி ஒதுக்கவில்லை? 

வெற்றி பெற வாய்ப்புள்ளவர்களையே தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏன் இஸ்லாமிய வேட்பாளர்களை நிற்க வைப்பதில்லை என பாரதிய ஜனதா தலைவர்களிடம் நான் பலமுறை கேட்டுள்ளேன். அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்பதே அவர்களது பதிலாக இருக்கும்.

இறுதியாக, RSS மற்றும் பாரதிய ஜனதா எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் என்ன?

அவர்கள் மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். முதலாவதாக, இந்துத்துவா இந்துயிசத்திற்கு இடையே நடைபெறும் போராட்டம், இரண்டாவது, குற்றச்செயல்களை எவ்வாறு கையாள்வது, இறுதியாக, இந்திய அரசியல் பொருளாதாரத்தில் பிளவுபட்டுள்ள கிராமப்புற – நகர வித்தியாசங்களை எவ்வாறு கையாளப் போகிறார்கள். கிராமப்புறங்கள் முழுவதும் மிகவும் கஷ்ட்த்தில் உள்ளது.

நன்றி: indianexpress.com


 

Leave Comments

Comments (0)