தீவிர வலதுசாரி பேட்டியை ஒளிபரப்பியதால் ஸ்கை நியுஸ் ஒளிபரப்பை தடை செய்த ஆஸ்திரேலிய அரசு

/files/detail1.png

தீவிர வலதுசாரி பேட்டியை ஒளிபரப்பியதால் ஸ்கை நியுஸ் ஒளிபரப்பை தடை செய்த ஆஸ்திரேலிய அரசு

  • 0
  • 0

-தமிழில் V.கோபி 

தீவிர வலதுசாரி தேசியவாதியான பிளேர் காட்ரலின் பேட்டியை ஒளிபரப்பிய காரணத்தினால், 24 மணி நேர செய்தி அலைவரிசையான ஸ்கை நியுஸ், மெல்போர்ன் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து நீக்குமாறு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில போக்குவரத்து துறை அமைச்சர் ஜெசிந்தா ஆலன் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஆலன், “அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் ஸ்கை நியுஸ் சேனலை நீக்குமாறு உத்தரவிட்டுள்ளேன். வெறுப்பிற்கும் இனவாதத்திற்கும் நமது சமூகத்திலும் தொலைக்காட்சியிலும் ஒருபோதும் இடம் இல்லை”.
குடியேறிகள் மற்றும் வெளிநாட்டு சிந்தனைகளிலிருந்து நாட்டை பாதுகாத்தல் குறித்தான நிகழ்ச்சியில் காட்ரல் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பேட்டி குறித்து பார்வையாளர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ள நிலையில், காட்ரல் பேட்டியை ஒளிபரப்பியது தவறுதான் என ஸ்கை நியுஸ் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் ஒளிபரப்பிய சில மணி நேரங்களில் பல்வேறு இணையதளங்கள் மற்றும் மறுஒளிபரப்பிலிருந்து இந்நிகழ்ச்சியை நீக்கியுள்ளது.

இதுபற்றி அமைச்சர் ஆலன் கூறுகையில், “இந்த பேட்டியை ஏற்றுகொள்ளவே முடியாது. அதுமட்டுமின்றி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது தவறுதான் என ஸ்கை நியுஸ் தொலைக்காட்சியே ஒப்புகொண்டுள்ளது. இதுபோன்ற அதிச்சிகரமான செய்தியை, உள்ளடக்கத்தை பயனிகள் பார்வையில் படாமல் தடுப்பதற்கு போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் எனக்கு கடமை உள்ளது” என்றார்.
ஆஸ்திரேலியாவின் பல மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள திரைகளில் ஸ்கை நியுஸ் ஒளிபரப்பாகிறது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் பற்றி ஸ்கை நியுஸின் அரசியல் நிருபர் லாரா ஜேயஸ் கூறுகையில், “கோட்ரல் பேட்டி ரயில் நிலைய திரைகளில் ஒளிபரப்பாகவில்லை என்பதை எங்களால் உறுதியாக கூற முடியும். மறுபடியும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதவாறு அவரை முதன் முதலில் தடை செய்தது ஸ்கை நியுஸ் மட்டுமே. ஆனால் மற்ற செய்தி தொலைக்காட்சிகள் அவரை தொடர்ந்து தங்களது நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றன. இதை யாரும் குறை சொவதில்லை” என்கிறார்.

ஸ்கை நியுஸை நீக்கியது தணிக்கை செயல் அல்ல என கூறும் ஆலன், வீட்டில் இருக்கும் போதோ அல்லது தங்களது தனிப்பட்ட நேரத்திலோ இந்நிகழ்ச்சியை மக்கள் தாராளமாக பார்க்கலாம். ஆனால் போக்குவரத்து துறை அமைச்சராக, அரசுக்கு சொந்தமான இடங்களில் என்ன வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன என உறுதிபடுத்தும் கடமை தன்னிடம் உள்ளதாக கூறுகிறார். மேலும் ஸ்கை நியுஸிற்கு பதிலாக வேறு எந்த நிகழ்ச்சியை மெட்ரோ நிலையங்களில் ஒளிபரப்பலாம் என்பதை ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

“ஸ்கை நியுஸ் மீதான நடவடிக்கை சற்று அதிகப்படியானதோ என நினைக்க தோன்றுகிறது” என்கிறார் எதிர்கட்சி தலைவர் மேத்யு கய்.

 நன்றி  THE GUARDIAN

Leave Comments

Comments (0)