மறைந்திருந்து கொல்லும் பூச்சிகொல்லி மருந்துகள்

/files/detail1.png

மறைந்திருந்து கொல்லும் பூச்சிகொல்லி மருந்துகள்

  • 0
  • 0

- தமிழில் V.கோபி 

அதிகளவிலான பூச்சிகொல்லி மருந்து எச்சங்கள் இருந்த காரணத்தினால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பாஸ்மதி அரிசிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. சமீபகாலமாக இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

alt text

ஜனவரி 2014 லிருந்து மே 2017 வரையிலான காலகட்டத்தில் மட்டும் அமெரிக்காவிற்கு அனுப்பிய பாஸ்மதி அரிசிகள் அனுமதிக்கப்பட்ட அளவையும் தாண்டி பூச்சிகொல்லி மருந்தின் எச்சங்கள் இருந்த காரணத்திற்காக 444 முறை திருப்பி அனுப்பபடுள்ளன. ஏற்றுமதி சரக்கிற்கே இத்தகைய நிலமை என்றால் உள்நாட்டு சந்தையில் விற்பனையாகும் உணவுப்பொருளின் தரத்தை நாம் நினைத்து பார்த்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நச்சுத்தன்மை நிறைந்த உணவுகளால் நமக்கு ஏற்படக்கூடிய உடல்நல கோளாறுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

அரசாங்கத்தின் தேசிய அளவில் பூச்சிகொல்லி எச்சங்களை சரிபார்த்து (MPRNL) வெளியிடும் தரவுகளுக்கும் சுயாதீனமான ஆய்வுகளுக்கும் இடையில் மிகப்பெறும் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக MPRNL அய்வுகள் அதிகப்படியான எச்சங்களின் அளவுகளைவிட(MRL) 2 முதல் 2.5 சதவிகித மாதிரிகள் மட்டுமே அதிகமாக உள்ளதாக கூறுகிறது. இது மற்ற ஆய்வுகள் கணக்கிட்டதை விட மிகவும் குறைவானதாகும். மேலும் MRL சம்மந்தமாக -- உணவு பதுகாப்பு அளவீட்டை சோதிப்பது முறையானதா இல்லையா?-- என்னும் தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்றும் உள்ளது. ஆனால் இதையெல்லாம் நமது அரசு கவனத்தில் எடுப்பதேயில்லை.

இதற்கிடையில் இந்த பூச்சிகொல்லி எச்சங்கள் நமது உணவிலும் தண்ணீரிலும் கலந்திருப்பதால் நமக்கு உண்டாகும் உடல்நல பிரச்சனைகள் மட்டுமல்ல, மொத்த சூழலே இதனால் விஷமாகி உள்ளது. சென்ற ஆண்டு விதர்பாவில் பூச்சிகொல்லி மருந்துகளின் பாதிப்பினால் பலர் இறந்த சம்பவம் நாடு முழுவதும் விவாதத்தை எழுப்பியது. 2015-16ம் ஆண்டில் 16 பேரும், 2016-17ம் ஆண்டில் 57 பேரும், 2017-18ல் 64 பேரும் பூச்சிகொல்லி மருந்தின் பாதிப்பினால் இறந்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறப்பை ஏற்று கொள்ளவே முடியாது. இது அரசியலமைப்பில் கூறப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும். 

சுற்றுச்சூழலுக்கும் மனித உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என தெரிந்த பின்பும் ரசாயன பூச்சிகொல்லிகளின் உபயோகம் இந்தியாவில் அதிகரித்தே வருகின்றது. ஆனால் நுகர்வோர்களிடம் விழிப்புணர்வு அதிகரித்து வருவது நல்ல விஷயம். சமீபகாலங்களில் இயற்கை உணவுகள் மீது மக்கள் விருப்பம் கொண்டிருப்பதை வைத்து இதை உணர்ந்து கொள்ளலாம். 

இயற்கை விவசாயத்தினால் செலவுகளையும் கடன் தொல்லைகளையும் குறைக்க முடிவதோடு லாபத்தையும் அதிகரிக்கலாம். இயற்கை விவசாயம் செய்யும் எந்த விவசாயியாவது இந்தியாவில் தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தியை நாம் இதுவரை கேட்டிருக்கோமா?. ரசாயன உரங்கள் உபயோகத்திற்கும் குறிப்பிட்ட பகுதிகளில் மிகுதியான விவசாய தற்கொலைகள் நடைபெறுவதற்கும் இடையிலான தொடர்பை இதுவரை எந்த அரசாவது ஆய்வு செய்துள்ளதா? 

ரசாயன உரங்கள் உபயோகிக்காமல் பல பயிர்களில் அதிகப்படியான விளைச்சல்கள் கிடைத்துள்ளதற்கு நம்மிடம் சான்றுகள் உள்ளன.
இதில் பிரச்சனைக்குரிய அம்சம் என்னவென்றால், தங்கள் பகுதிக்குள் பூச்சிலொல்லி மருந்துகளை விற்பனை செய்வதையோ உபயோகப்படுத்துவதையோ மாநில அரசால் சட்டப்படி தடை செய்ய முடியாது. கடந்த காலத்தில் மாநில அரசிற்கு இருந்த உரிமையை மறுத்து யாருக்கும் தெரியாமல் சட்டத்தில் செய்த மாற்றமே இதற்கு காரணமாகும்.

குறைந்தபட்சம் மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சிகொல்லி மருந்துகளையாவது இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்ற கோரிகை மீது மத்திய அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இது சம்மந்தமாக இந்த வருட ஜூன் மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் மத்திய அரசின் முடிவில் மாற்றமில்லை. ரசாயன உரங்கள் இல்லாமல் விவசாயம் செய்வது சாத்தியமானதே. இயற்கை விவசாயத்தால் விவசாயிகள் மட்டுமல்லாமல் நுகர்வோர்களும் சுற்றுச்சூழலும் பயனடைவர். அரசு இப்போதாவது விழித்து கொள்ளுமா?
சில குறிப்புகள்:

66 பூச்சிகொல்லி மருந்துகள் இதுவரை பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன. எண்டோசல்ஃபான் மருந்தை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. சமீபத்தில் பெனிடிரோத்தியான் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

பழமையான பூச்சிகொல்லி சட்டம் (1968) இன்றும் நடைமுறையில் உள்ளது. பூச்சிகொல்லி கட்டுப்படுத்தல் மசோதா (2008) -- உறுதியளிக்க கூடியதாக இல்லை. பூச்சிகொல்லி கட்டுப்படுத்தல் மசோதா (2017) -- ஆரம்பக்கட்டத்தில் உள்ளது.


நன்றி THE TRIBUNE  

Leave Comments

Comments (0)