செய்தி தொலைக்காட்சி ஆசிரியர்கள் விலகலுக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது

/files/detail1.png

செய்தி தொலைக்காட்சி ஆசிரியர்கள் விலகலுக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் தொடர்பு உள்ளது

  • 1
  • 0

- தமிழில் V.கோபி 

ஏபீபி நியுஸில் இருந்து இரு மூத்த எடிட்டர்கள் வெளியேறியதும் ஒரு நிகழ்ச்சி நடத்துனர் ஓரங்கட்டப்பட்டதும், நரேந்திர மோடி அரசை தொலைக்காட்சி நிர்வாகம் சமாதானப்படுத்தும் நோக்கில் எடுத்த முடிவு என்று நினைத்த நிலையில், யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்கள் தீடிரென விலக்கப்பட்டதும் இந்த நடவடிக்கைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

alt text

பிரதமர் மோடியின் திட்டத்தில் சேர்ந்ததால் தன்னுடைய வருமானம் இரு மடங்கு அதிகரித்துள்ளதாக கூறிய விவசாய பெண்மனியின் பேட்டி சித்தரிக்கப்பட்டது என்றும் இதன் முலம் பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகவும் மோடி அரசாங்கத்தின் மீது ஏபீபி நியுஸின் எடிட்டர் புன்யா பிரசூன் பாஜ்பாயி தான் நடத்தும் “மாஸ்டர் ஸ்ட்ரோக்” நிகழ்ச்சியில் புகார் கூறினார். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பான அடுத்த நாள் பதஞ்சலி நிறுவனம் தனது விளம்பரங்களை ஏபீபி நியுஸிலிருந்து விலக்கி கொண்டதாக இந்த விவகாரத்தை பற்றி நங்கு தெரிந்தவர் கூறுகிறார்.

இதுபற்றி பதஞ்சலியின் செய்தி தொடர்பாளர் திஜர்வாலா கூறுகையில், “விளம்பரத்தை விலக்கி கொண்டது உண்மைதான். ஆனால் மோடி அரசை விமர்சித்ததால் விளம்பரத்தை விலக்கி கொண்டோம் என கூறுவதை ஏற்க முடியாது. உண்மையை கூற வேண்டுமென்றால், எங்கள் நிறுவனத்திற்கும் ஏபீபி தொலைக்காட்சிக்கும் இடையிலான விளம்பர ஒப்பந்தம் ஜூன் 30ம் தேதியே முடிந்துவிட்டது. சில தவறுகளால் ஜூலை 15 வரை விளம்பரங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இப்போது தவறை கண்டுபிடித்ததும் விளம்பரத்தை நிறுத்தி கொண்டோம்” என்கிறார்.

விளம்பர ஒப்பந்தத்தின் மதிப்பு எவ்வுளவு என்பதை கூற திஜ்ரவாலா மறுத்து விட்டார். எப்படியும் 50 – 60 கோடிக்குள் இருக்கும் என ஏபீபி நியுஸ் அலுவலர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார். தற்போது ஏபீபி நியுஸ் எடிட்டர்கள் பாஜ்பாய் மற்றும் மிலிந்த் கண்டேக்கர் விலகிய நிலையில், மறுபடியும் விளம்பரத்தை தொடர பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எங்கள் ஒப்பந்தம் ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. எங்கள் நிறுவனத்தின் மீது பொருத்தமற்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. பேச்சுரிமையையும் தொலைக்காட்சியின் உள்ளடகத்தையும் மிகவும் மதிப்பதாகவும் ஊடக சுதந்திரத்தின் மீது தாங்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் திஜ்ரவாலா கூறுகிறார்.

விளம்பரம் விலக்கி கொள்ளப்பட்டதும், ஒப்பந்த விதிகளை மீறியதாக பதஞ்சலி நிறுவனத்தின் மீது ஏபீபி நியுஸ் நோட்டீஸ் அனுப்பியது. இதை முதலில் மறுத்தாலும், பின்னர் வக்கீல் நோட்டீஸ் எதுவும் ஏபீபி நியுஸ் அனுப்பவில்லை, திடீரென விளம்பரம் விலக்கி கொண்டதற்கு என்ன காரணம் என இ-மெயிலில் விளக்கம் கேட்டிருந்தனர். அவ்வுளவுதான். பதஞ்சலி நிறுவனத்திற்கும் ஏபீபி நியுஸிற்கும் இடையிலான உறவு ஆழமாகவும் இனிமையாகவும் உள்ளது என திஜ்ரவாலா தெரிவித்தார்.

ஆனால் இதுபற்றி கேட்கப்பட்ட எந்த கேள்விகளுக்கும் ஏபீபி நியுஸ் அலுவலர்கள் எந்த பதிலும் கூறவில்லை.
 

நன்றி  THE WIRE

Leave Comments

Comments (0)