கேரள நிவாரண நிதிக்கு பாஜக அமைச்சர்கள் ரூ.25 கோடி கொடுத்துள்ளதாக சமூக ஊடகத்தில் பரவும் புகைப்படங்கள் - உண்மை என்ன?

/files/detail1.png

கேரள நிவாரண நிதிக்கு பாஜக அமைச்சர்கள் ரூ.25 கோடி கொடுத்துள்ளதாக சமூக ஊடகத்தில் பரவும் புகைப்படங்கள் - உண்மை என்ன?

  • 0
  • 0

 -பூஜா சௌத்ரி தமிழில் V.கோபி 

“பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்களும் நாடாளுமண்ற உறுப்பினர்களும் கேரளாவிற்கு நிதி அளித்துள்ளார்கள், நீங்கள் எதையும் பெறவில்லை என கூறாதீர்கள்” என்று குறிப்பிட்டு, இதனோடு கேரள முதலமைசர் பினராயி விஜயன் ரூ.25 கோடிக்கான காசோலையை பெறும் புகைப்படம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அப்புகைப்படத்தில் பாஜக மக்களவை உறுப்பினர் முரளிதரன், மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் கன்னதானம் மற்றும் பலர் முதலமைச்சரை சுற்றி நிற்கின்றனர். இதை ஸ்ரீகுமார் ஸ்ரீதரநாயர் என்பவர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இப்பதிவு இதுவரை 10,000 தடவைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது.

alt text

கேரள வெள்ள நிவாரண நிதிக்காக பாஜக அமைசர்கள் கேரள முதலமைச்சரிடம் நன்கொடை அளிக்கிறார்கள் என்று குறிப்பிட்டு மேற்கூரிய புகைப்படங்களை இணைத்து பல தனி நபர்களும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
உண்மை என்ன?

alt text

கேரள முதல்வரிடம் ரூ.25 கோடியை நன்கொடையாக அளித்தது மத்திய பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் ஆகும். மற்றவர்கள் கூறுவது போல் பாஜக அமைச்சர்கள் கொடுத்தது அல்ல. இந்த காசோலை பாஜக எம்பிகளால் கேரள முதலமைச்சரிடம் கொடுக்கப்பட்டதால் அவர்கள் புகைப்படத்தில் உள்ளனர். இதை வைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த கேரளாவிற்கு பாஜக அமைச்சர்கள் நிதி அளித்துள்ளனர் என்ற கதையாடல் சமூக வலைதளம் எங்கும் பரவி வருகிறது.

alt text

“எண்ணெய் நிறுவனங்கள் சார்பாக காசோலையை அளித்தேன்” என பாஜக எம்பி முரளிதரன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதையேதான் ஹிந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனமும் ட்வீட் செய்துள்ளது.

வெள்ள பாதிப்பால் ஒட்டுமொத்த கேரள மாநிலமே தள்ளாடி வரும் நிலையில், நிவாரண பணிகள் தொடர்பாக பல தவறான தகவல்கள் தாங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகத்தில் பகிர்வதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை பத்திரிக்கை செய்தியை சோதித்து பார்த்த பின் முடிவெடுக்கவும்.

நன்றி alt NEWS 

Leave Comments

Comments (0)