ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்த நீரஜ் சோப்ரா

/files/detail1.png

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுக் கொடுத்த நீரஜ் சோப்ரா

  • 0
  • 0

-தமிழில V. கோபி 

ஆகஸ்ட் 18ம் தேதியிலிருந்து இந்தோனேசியா நாட்டின் ஜகர்தா நகரில் 18வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 தங்கம், 12 வெள்ளி, 20 வெண்கல பதக்கங்கள் பெற்று, போட்டியின் தாரக மந்திரமான ‘ஆசியாவின் ஆற்றல்’ என்ற வாசகத்திற்கு ஏற்ப தனது பலத்தை இந்தியா நிரூபித்து வருகிறது. தொடர்ந்து நமது வீரர்கள் அற்புதமாக விளையாடி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார்கள்.

திங்கள் கிழமை அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில், 88.03மீ தூரம் எறிந்து இந்தியாவிற்கு 8-வது தங்கப் பதக்கத்தை பெற்று கொடுத்தார் 20 வயதான நீரஜ் சோப்ரா. 

இதன்மூலம் ஆசிய போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். தனது மூன்றாவது முயற்சியில் தங்கப் பதக்கத்தை வசப்படுத்திய சோப்ரா, தனது முந்தைய சாதனையான 87.43மீ தூரத்தை இப்போட்டியில் தகர்த்துள்ளார். இதற்கு முன்பு ஜூனியர் பிரிவில் 86.48 தூரம் எறிந்து உலக சாதனையை தன் வசம் வைத்துள்ள நீரஜ் சோப்ரா, இந்த ஆண்டு தொடர்ந்து 85மீ-க்கும் மேல் எறிந்து வந்துள்ளார்.

போட்டி ஆரம்பமானதிலிருந்து நீரஜ் சோப்ரா மிகுந்த தன்னம்பிக்கையோடு இருந்தார். சீன தைபே வீரரான செங் சா சுன், சோப்ராவிற்கு கடுமையான போட்டி அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரால் 80மீ தாண்டி எறிய முடியவில்லை.

இதற்கிடையில், இந்தியாவைச் சேர்ந்த நீனா வராகில், நீளம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். தனது நான்காவது முயற்சியில், 6.51மீ நீளம் தாண்டி போட்டியில் இரண்டாவதாக வந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
 

நன்றி  india time

Leave Comments

Comments (0)