யானை சவாரிகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

/files/detail1.png

யானை சவாரிகளுக்கு தடை விதித்த உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம்

  • 0
  • 0

-தமிழில் V.கோபி 


வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் (1972) மற்றும் மிருகவதை தடுப்பு சட்டம் (1960) இரண்டையும் பின்பற்றி ஜிம் கார்பட் தேசிய பூங்கா, ராஜாஜி புலிகள் சரணாலயம் ஆகியவற்றில் வர்த்தக நோக்கில் யானை சவாரி செய்யப்படுவதை உத்தரகாண்ட் அரசு தடை செய்துள்ளது.

மேலும் அனைவரும் வரவேற்கும் நடவடிக்கையாக, தேசிய பூங்காவில் ஒரு நாளைக்கு 100 ஜிப்சி வாகனங்கள் மட்டுமே நுழைய வேண்டும் எனவும் தனியாருக்கு சொந்தமான யானைகளை உடனடியாக தலைமை வனவிலங்கு கண்காணிப்பாளர் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வர வேண்டும் எனவும் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுவரை ஒரு நாளைக்கு 200 ஜிப்சி வாகனங்கள் பூங்காவிற்குள் சென்றுவருகின்றன. தனியார் சொகுசு பங்களா உரிமையாளர்கள் யானை சவாரியை ஏற்பாடு செய்து வந்தார்கள். இந்த உத்தரவு ஜிப்சி உரிமையாளர்களையும் ரிசார்ட் உரிமையாளர்களையும் ஏமாற்றம் கொள்ள வைத்துள்ளது. அதேசமயத்தில் சுற்றுச்சூழல்வாதிகள், விலங்குநல ஆர்வலர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பால் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

மறு உத்தரவு வரும் வரை உத்தரகாண்ட் முழுவதிலும் யானை சவாரி தடை செய்யப்படுவதாகவும் தலைமை கண்காணிப்பாளரின் கீழ் யானைகளுக்கு முறையான மருத்துவ பரிசோதனைகள் செய்து அதன் உடல்நலத்தை பேண வேண்டும் எனவும் நீதிபதிகள் ராஜீவ் ஷர்மா மற்றும் லோக் பால் சிங் தலைமையிலான அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் யாணைகள் அனைத்தையும் தற்காலிகமாக ராஜாஜி தேசிய பூங்காவில் வைத்திருக்குமாறும் காயம்பட்ட யானைகளை 12 மணி நேரத்திற்குள் உடனடியாக கால்நடை மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 
முறையான ஆவணங்கள் கொண்ட தனியார் வாகனங்களை மட்டுமே வனத்துறை அதிகாரிகள் தேசிய பூங்காவிற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் வனவிலங்குகளுக்கு பாதிப்பில்லாமல் எத்தனை வாகனங்கள் செல்ல முடியும் என்ற கணக்கெடுப்பை மூன்று மாதத்திற்குள் டேராடூனில் உள்ள வனவிலங்கு நிறுவனம் எடுக்க வேண்டும் எனவும் அதுமட்டுமல்லாமல் பூங்காவிற்குள் செல்லும் வாகனத்தின் எண், உரிமையாளர் பெயர், ஓட்டுனர் பெயர் போன்ற விபரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறும் உயர்நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியுள்ளது. 

சவாரி செய்கையில் பல யானைகள் காயம் அடைவதாகவும் அக்காயங்கள் உடனடியாக சரி செய்யப்படாமல் இருப்பதாகவும் Himalayan Yuva Gramin Vika Sanstha என்ற அரசு சாரா அமைப்பின் தலைவர் மயாங்க் மைனாலி 2002ம் ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் வங்காளப் புலி உள்பட பல வன விலங்குகள் உள்ளன. 1936ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஜிம் கார்பட் பூங்கா மத்திய அரசால் தேசிய பூங்காவாக ஆக்கப்பட்டுள்ளது. இங்குதான் முதன்முறையாக புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் இந்திய யானைகள் மிகுதியாக உள்ளன.

மூன்று சரணாலயங்களை ஒன்றிணைத்து தமிழகத்தைச் சேர்ந்த ராஜகோபாலச்சாரி நினைவாக 1983ம் ஆண்டு ராஜாஜி தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது. இங்கு சிறுத்தை புலி, காட்டுப்பூனை, ராஜ நாகம், மர கரடி போன்ற பல மிருகங்கள் உள்ளன.

நன்றி  THE LOGICAL INDIAN

Leave Comments

Comments (0)