அடிக்கடி ‘கெட்ட’ வார்த்தை பயன்படுத்துபவரா? இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவரா? இவர்களைப் பற்றி அறிவியல் கூறுவது என்ன? 

/files/detail1.png

அடிக்கடி ‘கெட்ட’ வார்த்தை பயன்படுத்துபவரா? இரவில் நீண்ட நேரம் விழித்திருப்பவரா? இவர்களைப் பற்றி அறிவியல் கூறுவது என்ன? 

  • 342
  • 0

-தமிழில் V.கோபி 

நீங்கள் அடிக்கடி ‘கெட்ட’ வார்த்தை பேசுபவரா? ஏன் பொருட்களை இப்படி குளறுபடி செய்து வைத்துள்ளீர்கள் என உங்கள் துணையிடம் எப்போதும் திட்டு வாங்குவீர்களா? தினமும் இரவு வெகு நேரம் கழித்தே தூங்கச் செல்வீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு இருப்பது கெட்டப்பழக்கம் இல்லை. என்ன குழப்பமாக இருக்கிறதா?

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, மேற்ச்சொன்ன பழக்கம் உடையவர்கள் நேர்மையானவர்களாகவும் அறிவார்ந்தவர்களாகவும் இருப்பார்கள் என அறிவியல் ஆய்வு கூறுகிறது.

நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். அறிவாளி நபர்கள் தங்கள் வாதத்தை வலியுறுத்தவே ‘கெட்ட’ வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். மேலும் தங்கள் செயல்களை, உணர்வுகளை, எண்ணங்களை விளக்கவே ‘கெட்ட’ வார்த்தைய உபயோகிக்கிறார்கள். ‘கெட்ட’ வார்த்தை உபயோகிப்பதற்கும் மொழிப்புலமைக்கும் தொடர்புள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

அதுமட்டுமல்லாமல், அதிக அறிவு திறன் பெற்றவர்கள் இரவில் அதிக சுறுசுறுப்பாக இருப்பார்களாம். அதாவது சற்று விளக்கமாக கூறினால், IQ ( நுண்ணறிவு திறன்) 75க்கும் குறைவாகப் பெற்றவர்கள் இரவு 11.40 மணிகும், IQ 123க்கும் அதிகமாக உள்ளவர்கள் இரவு 12.30 மணிக்கும் தூங்கச் செல்வார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் மிகவும் அறிவு திறன் பெற்றவர்கள் மற்றவர்களைவிட இணக்கமாக இருப்பார்கள் என்றும் பிரச்சனைகளை தீர்க்க விரும்புவார்கள் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஒருவர் புத்திசாலி என்பதை அவரின் அறிவாற்றலால் அல்ல,  கற்பனை திறனை வைத்தே அறிந்து கொள்ள முடியும் என ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். 
எதிலும் நேர்மறையாகவே சிந்திப்பவர்கள். எதிலும் தங்கள் முழு திறனை வெளிப்படுத்த நினைப்பவர்கள். தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்பவர்கள் என இதெல்லாம் மிக புத்திசாலிகளின் பண்புகள் என கூறப்படுகிறது. 

ஒருவர் தீவிரமாகவும் விமர்சனப்பூர்வமாகவும் சிந்திப்பதற்கு கல்விநிலையங்கள் கற்று கொடுக்க வேண்டும். புத்திகூர்மையும் சிறந்த பண்புகளும் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என மார்டின் லூதர் கிங் கூறுகிறார்.

ஏன் உன்னுடைய வீடு இப்படி குப்பையும் குளறுபடியுமாக இருக்கிறது என அடுத்த முறை யாராவது உங்களை குறை கூறினால், இது அறிவாளிகளின் குணங்கள் என அவர்களிடம் கூறுங்கள். சுத்தமான சுற்றுப்புறமே பயனுள்ள வெற்றியையும் தீர்வையும் தரும் என்ற முந்தைய எண்ணத்தை தற்போதைய ஆய்வு தகர்த்துள்ளது. ஆம், குப்பையும் குளறுபடியுமான அறைகளில் இருந்தால் புதிய யோசனையும் சிந்தனையும் பிறக்கும் என மினியஸ்டா பலகலைக்கழகத்தின் மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

புத்திகூர்மை உள்ளவர்கள் பிரச்சனைகளை தீர்த்து, வித்தியாசமாக சிந்தித்து, சிறந்த நடத்தையுள்ளவர்களாக இருப்பார்கள். அட்டவணையை பின்பற்றுவது, சுத்தத்தை பேனுவது போன்ற தினசரி பிரச்சனைகளில் அவர்கள் கவனம் கொள்வதில்லை. ஆகவே மிகவும் சுதந்திரமாகவும் திறமையாளர்களாகவும் படைப்பாளர்களாகவும் உள்ளார்கள். புத்திசாலி நபர்கள், கப்பலோட்டியை போல இரவெல்லாம் விழித்திருந்து தங்கள் படைப்பை நிஜமாக்குகிறார்கள்.

உங்கள் ‘கெட்ட’ வார்த்தைகளையும், குப்பை குளறுபடியான அறையும், தூக்கமின்மையும் பற்றி இப்போதாவது நல்லவிதமாக உணர்கிறீர்களா? நிச்சியமாக நீங்கள் உணர்வீர்கள். ஏனென்றால், புத்திகூர்மையை விட வேறெதுவும் உயர்ந்ததில்லை.

 

நன்றி  http://tinnuochan.com/science-confirms-intelligent-people-go-to-bed-late-leave-a-mess-everywhere-and-use-bad-language/

Leave Comments

Comments (0)