பேஸ்புக் பக்கங்களின் வியாபார தந்திரங்கள்

/files/detail1.png

பேஸ்புக் பக்கங்களின் வியாபார தந்திரங்கள்

  • 1
  • 0

-V. கோபி  

சமூக வலைதளத்தில் குறைவான நேரம் இயங்குபவர்கள் கூட -- இந்திய ரானுவ வீர்ர்களின் புகைப்படத்தோடு, “உண்மையான இந்தியனாக இருந்தால் இப்புகைப்படத்தை பகிருங்கள்” -- என்ற தலைபிட்டு வரும் பதிவை பார்த்திருக்கலாம். நாமும் தேசப்பற்றால் உந்தப்பட்டு அந்த பதிவை பகிர்ந்து இணையத்தில் வைரலாக்குவோம். நாம் பகிர்ந்த பதிவிற்கு ஏதாவது உள்நோக்கம் இருக்குமா என்பதையெல்லாம் யாரும் யோசிப்பதில்லை.

செழித்தோங்கும் வியாபாரம்:

SHARING IS CARING என்ற பெயரில் உள்ள பேஸ்புக் குழுவிற்கு அதன் பெயரே அதற்கு தாரக மந்திரம். இந்த குழுவில் சேர வேண்டுமென்றால் உங்களது அடையாள அட்டையை காண்பித்து 18000 பேர் அடங்கிய குழுவில் நீங்களும் இணைந்து கொள்ளலாம். இங்கு நீங்கள் தேசப்பற்று, பெண் வெறுபு, பாலிவுட், அரசியல், தேசியம் மற்றும் கடவுளை கூட வாங்கலாம், விற்கலாம்.
அடிப்படையில் SHARING IS CARING என்பது சமூக ஊடக பக்கங்களின் சந்தையாகும். இங்கு நீங்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களை வங்கலாம்/விற்கலாம், நீங்கள் பதிவிடும் வீடியோவிற்கு பார்வையாளர்களை பெற பணம் கொடுக்கலாம், சமூக ஊடக பக்கங்களுக்கு SEO செய்து கொடுகலாம், பக்கங்களை வாடகைக்கு விடலாம், போலி இணையதளங்கள் தயாரித்து குறிப்பான நபர்களிடம் விற்கலாம். இந்த குழுவின் நோக்கம் மிக எளிமையானது – பரபரப்பை தூண்டி பணம் பெறுவது. இந்த குழுவில் பிரபலமான சில தலைப்புகளை தேடியபோது நமக்கு கிடைத்தவை, இதோ உங்களுக்காக…
 

மோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சி:
 

இணையத்தின் வருகையால் சமூக ஊடகம் இன்று பணம் தயாரிக்கும் தொழிற்சாலையாக மாறியுள்ளது. நண்பர்களை உங்களுக்கு நெருக்கமாக்குவதோடு மட்டுமல்லாமல் எளிதாக உள்ளார்ந்த விற்பனையாளர்களையும் உங்களோடு இணைக்கிறது பேஸ்புக். அரசியல் அறிவுள்ள பலர் பேஸ்புக்கில் அதிகளவில் இயங்கும்போது, அங்கு ஒரு அமைதியான சந்தை ஒன்று உருவாகிறது.
SHARING IS CARING குழு உறுபினர்கள் நாட்டின் அரசியல் நிலவரத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு தங்களது ஒபந்தங்களை செய்து கொள்கிறார்கள். இக்குழுவில் பல தனிப்பட்ட நபர்கள் பிரதமர் மோடி பெயரிலான பகத்தை தயாரித்து பெரும் தொகையை வசூலிக்கின்றனர். உதாரணமாக, இங்கு குறிப்பிடப்பட்டுள்ள 3,86,000 பின்பற்றுகின்ற மோடி சம்மந்தமான ஒரு பேஸ்புக் பக்கம் 46,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மோடி பக்கத்தை வாங்க விருப்பமுள்ள ஒருவர், 9 லட்சம் பின்தொடர்பாளர்களை கொண்ட அப்பக்கத்தை 81,000 கொடுத்து வாங்க தயாராக இருக்கிறார்.
மேலும் நாங்கள் கண்டுபிடித்த வரையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், ராகுல் காந்தி பக்கங்களும் பிரபலமான தேர்வாக உள்ளன. பணத்திற்காக ஒரு பக்கம் இயங்கினாலும், SHARING IS CARING போன்ற குழுக்கள் தவறான தகவல்கள், போலி செய்திகள் பரவுவதற்கும் காரணமாக இருக்கின்றன. இரண்டு நபர்களை – அங்கித் பாண்டே மற்றும் ராஜேஷ் ஜிண்டால் – உங்களுக்கு உதாரணமாக காட்டுகிறோம். இவர்கள் இருவரையும் பற்றி ஏற்கனவே ஆல்ட் நியுஸ் கட்டுரைகள் எழுதியுள்ளது.

அங்கித் பாண்டே

இவரது இணையதளமான INSIST POST விட, அதே பெயரில் உள்ள இவரது முகநூல் பக்கம் அதிக செயலாற்றலுடன் உள்ளது. இந்த பக்கத்தை 15 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். பல இணையதளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பகிரப்பட்டுள்ளதை நாம் இந்த பக்கத்திற்குச் சென்று சற்று மேம்போக்காக உலவினாலே தெரிந்து விடும். இதிலுள்ள பல கட்டுரைகள் பெண் வெறுப்பு, அரசியல் உணர்ச்சிகளை தூண்டுவது போலவுமே உள்ளது. பாண்டேவின் பக்கத்தை நோட்டம் விட்டால், பாஜகவின் முக்கிய தலைவர்கள் அமித் ஷா, ஸ்மிருதி இரானி, அமித் மாளவியா போன்றோரோடு எடுத்து கொண்ட புகைப்படங்கள் நிரம்பியுள்ளன. RSS உறுப்பினராக உள்ள பாண்டே, தனது பெயரில் இரு பேஸ்புக் கணக்கை வைத்துள்ளார்.
SHARING IS CARING குழுவில் பேஸ்புக் பக்கம் மற்றும் இணையதளங்களை வாங்க விருப்பமுள்ளவராக பாண்டே இருந்துள்ளார் என்பதை அவர் நடத்திய உரையாடல் மூலம் நாம் கண்டுபிடித்துள்ளோம்.

ராஜேஷ் ஜிண்டால்

HINDUTVA.INFO தளத்தை இயக்குபவர் என கருதப்படும் ஜிண்டால், சமூக ஊடகத்தில் மூலமாக ஒரு மாதத்திற்கு 10 லட்சம் வரை சம்பதிப்பதாக சிலர் கூறுகின்றனர். அவரது பேஸ்புக் பகத்திற்குச் சென்றாலே அவரது பிரச்சாரத்தை தெரிந்து கொள்ளலாம். அரசை பாராட்டி பல செய்திகளை பகிர்ந்திருந்தாலும் அவரது பக்கத்தில் போலி செய்திகள் நிரம்பியுள்ளன. RSS பிரிவான சுதேசி ஜக்ரான் மன்ச் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியது போன்ற புகைப்படம் ஒன்றையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஆறு மாதத்திற்கு முன் SHARING IS CARING குழுவில் இணைந்த ஜிண்டால், “இன்ஸ்டண்ட் கட்டுரை பணி செய்ய தெரிந்தாலும் பேஸ்புக் பக்கத்தை உருவாக்க போதிய பணம் இல்லாதவர்கள், என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் பணம் தருகிறேன்” என ஒருமுறை குழுவில் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், கிரிக்கெட் மற்றும் பக்தி சம்மந்தமான 20 பேஸ்புக் பக்கத்தை ரூபாய் 10 லட்சத்திற்கு வாங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார். இதுபோன்ற பல சலுகைகளை குழுவில் ஜிண்டால் பதிவிட்டுள்ளார். இப்படி பலர் பேஸ்புக் பக்கம் மூலம் லாபம் சம்பாதித்தாலும், நமது கட்டுரையின் முக்கிய நோக்கம் SHARING IS CARING குழுவில் அதிகமாக விற்பனையாகும் பக்கத்தை பற்றியே.
 

இந்திய ரானுவம்:

மக்களை ஈடுபாடு கொள்ள செய்ய எளிய வழி, அவர்களது நம்பிக்கையையும் ஆர்வத்தையும் தூண்டுவது. இதையே இந்திய ரானுவம் என்ற பெயரில் இருக்கும் பல முகநூல் பக்கங்கள் செய்து வருகிறது. இதுபோன்ற பக்கங்களை பலர் விற்பனை செய்தும் வாடகைக்கு விட்டும் வருகிறார்கள்.

இந்திய ரானுவ பக்கத்தை பற்றிய பிரபலமான வீடியோவையும் இங்கு கானலாம். ஒவ்வொரு பக்கத்திற்கும் உண்டான விலை பட்டியலும் குழுவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பெண்கள்:

இந்த குழுவில் மிகப்பிரபலமான தலைப்பு ‘பெண்கள்’ பக்கமே. பெண் புகைப்படங்களை வெளியிடு பேஸ்புக் பக்கங்கள், முக்கியமாக இன்ஸ்டாகிராம் பக்கங்கள் கடும் கிராக்கியாக உள்ளன. ஏதோ ஒரு பெண் பெயரில் தொடங்கப்படும் இந்த பக்கங்கள், பிரபலமானதும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. நேகா குமாரி என்ற பெயரில் உள்ள முகநூல் பக்கத்திற்கு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்கள் உள்ளார்கள். இந்த பக்கத்தில் இளைஞிகள் மற்றும் பெண்களின் புகைப்படம் மட்டுமே வெளியிடப்படுகின்றன.

பென் வெறுப்பை தூண்டும் உள்ளடக்கங்கள் உடனடியான கவனத்தை பெறுகின்றன. பின்தொடர்பாளர்களை அதிகம் பெற்றதும், அதில் வெளியாகும் உள்ளடக்கமும் பக்கத்தின் பெயரும் உடனடியாக மாற்றப்படுகின்றன. குறிப்பாக பிரபல நடிகைகள் பெயரில் தொடங்கப்படும் பக்கங்கள் சில நாள் கழித்து அரசியல் பக்கமாக மாற்றம் கொள்கின்றன. உதாரணமாக, ரஷ்மி படேல் ஒன் மிலியன் பேன்ஸ் என்ற பக்கம் இப்போது NAMO 2019 – WE SUPPORT NARENDRA MODI என்ற பெயரில் 4 லட்சம் பின்தொடர்பாளர்களோடு செயல்பட்டு வருகிறது.

பாலிவுட்:

SHARING IS CARING குழுவில் இதுவும் பிரபலமான தலைப்பே. நடிகர்கள் பக்கங்களை விட நடிகைகளின் பக்கங்களை வாங்குவதற்கே இங்கு போட்டி நிலவுகின்றன. அலியா பட், கேத்ரினா, சன்னி லியோன், பிரியா பிரகாஷ் வாரியார் போன்ற நடிகைகளிம் பெயரில் பல பேஸ்புக் பக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கிரிக்கெட்:

நமது நாட்டின் பிரபல விளையாட்டாக இருப்பதால், கிரிக்கெட் பக்கத்தையும் SHARING IS CARING குழுவினர் விட்டுவைக்கவில்லை. 3.5 லட்சம் பாலோயர்களை கொண்ட டோனி பெயரிலான பக்கம் ரூ.24,500க்கு விற்கப்படுகிறது. மற்றொரு நபர் 20000 பிந்தொடர்பாளர்களை கொண்ட கிரிக்கெட் பக்கத்தை 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

இக்குழுவில் உள்ள பலரும் சமூக ஊடகத்தை நன்கு புரிந்து வைத்திருப்பதால் கிரிக்கெட் சம்மந்தமான பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மட்டுமின்றி பிரபல வீர்ர்களான டோனி, கோலி பெயரிலான பக்கங்களையும் வாங்கவும் விற்கவும் செய்கிறார்கள்.

பக்தி:

கடவுள், மதம், ஆண்மீகம், பக்தி பக்கங்களும் பிரபலமாகவே உள்ளன. இக்குழுவில் உள்ள ஒரு உறுப்பினர், 7.5 லட்சம் மற்றும் 1.5 லட்சம் பிந்தொடர்பாளர்களை கொண்ட இரு பக்கங்களை ஒன்றாக விற்பனை செய்வதாக பதிவிடுகிறார். தனிப்பட்ட சிலர் பல பேஸ்புக் பக்கங்களை திறம்பட இயக்குவதை நாம் பார்த்து வருகிறோம். உதாரணமாக, 9 லட்சம் பாலோயர்களை கொண்ட VOTE4BJP என்ற பக்கம், 100 CRORE RASHTRAVADHI HINDUS KA GROUP என்ற குழுவை பிந்தொடருமாறு மக்களை வேண்டி கொள்கிறது. வெறும் இரண்டு மாத்த்தில் இக்குழு 33000 பின்தொடர்பாளர்களை எட்டுகிறது. தற்போது NAMO MISSION 2019 பேஸ்புக் பக்கத்தின் கீழ் உள்ள அக்குழு இதுவரை 1.3 லட்சம் பின்தொடர்பாளர்களை பெற்றுள்ளது.

காதல், காமெடி:

இங்கு காமெடி ஜோக்ஸ் கூட விற்கப்படும். கீழே குறிப்பிட்டுள்ள படத்தில் 1.2 லட்சம் பேர் பின்தொடரும் LOVE SHAYARI என்ற பக்கத்தை விற்பனை செய்வதாகவும், 4500 ரூபாய்க்கு மேல் ஏலம் கேட்பவர்கள் தொடர்புகொள்ளுங்கள் என ஒருவர் பதிவிடுகிறார்.

பின்தொடர்பாளர்களை வாங்க/விற்பனை செய்ய வாருங்கள்:

சமூக வலைதளத்தில் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை வைத்தே ஒரு பக்கத்தின்/குழுவின் மதிப்பு முடிவு செய்யப்படுகிறது. பேஸ்புக் பக்கத்தை எளிதாக தொடங்க முடிந்தாலும், அதிக பின்தொடர்பாளர்களை பெற  எவ்வுளவு காலம் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. இந்த தேவையை நிறைவு செய்ய வந்தவையே SHARING IS CARING குழு. இங்கு பேஸ்புக்/இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கென தனித்தனி விலை பட்டியல் உள்ளன. 100 ரூபாய் கொடுத்தால் உங்கள் பக்கத்திற்கு 5000 பிந்தொடர்பாளர்களை பெறலாம். பக்கத்தின் பிரபலமும், எத்தனை பேர் பதிவிற்கு விருப்ப குறி இடுகிறார்கள் என்பதும் விலையை தீர்மானிக்க கூடியதாக இருக்கும். உதாரணமாக ஒருவர் தனது பதிவிற்குன் 500 லைக்ஸ் பெற 20 ரூபாய் செலுத்தலாம். மேலும் பிந்தொடர்பாளர்களை அதிகம் பெற்றதாலேயே நமது பதிவி அதிக பார்வையாளர்களை சென்றடையும் என எதிர்பார்க்க முடியாது. அதற்கு பேஸ்புக் அல்காரிதமும் உதவ வேண்டும். இது போன்ற சமயத்திலேயே போலி பார்வையாளர்களின் முக்கியத்துவம் கூடுகிறது. SHARING IS CARING குழுவில் பலரும் தங்கள் பேஸ்புக்/யுடுயுப் வீடியோவிற்கு அதிக பார்வையாளர்களை பெற ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள்.

போலி சலுகை இணையதளங்கள்:

சமீபத்தில், மோடி இலவசமாக அனைவருக்கும் தலைகவசமும், மிதிவண்டியும் கொடுப்பதாக போலியான தகவல் வாட்ஸப் மூலம் பரப்பபட்டது. இந்த செய்தியை நீங்கள் கிளிக் செய்தால் ஒரு படிவம் வருகிறது. அதில் நமது தனிபட்ட விபரங்கள், வீட்டு முகவரி போன்றவை கேட்கப்படுகின்றன. இந்த ஒரு பக்க படிவத்தில் மட்டும் இரு கூகுள் விளம்பரங்கள் வருகின்றன. இதேப்போன்று மோடி அனைவருக்கும் இலவசமாக ரீசார்ஜ் செய்கிறார் என்ற ஒரு செய்தி பரவியது. இதை கிளிக் செய்தாலும் அதேப்போன்று நமது முகவரி, போன் நம்பர் ஆகியவை கேட்கப்படுகின்றன.

இதேப்போன்ற ஒரு இணையதளத்தை SHARING IS CARING குழுவில் இருந்தது. அந்த இணையதளத்தில் போலி பேடிஎம் சலுகை, பதஞ்சலி சிம் கார்ட் என பல போலியான சலுகைகள் நிரம்பியிருந்தன. முதலில் பார்க்கையில் இது சாதாரனமாக தெரியலாம், ஆனால் இதன் பின்விளைவுகள் அபாயகரமானது. சமீபத்தில் கூட வாட்ஸப்பில், அயோத்தியில் ராம் மந்திர் தேவையா அல்லது பாபர் மசூதியா என  போலி வாக்கெடுப்பு ஒன்று பரவியது. இதுபோன்ற மதப்பிரசனையை தூண்டும் பல செய்திகளை பனத்திற்காக தங்கள் அறத்தை மறந்து பரப்பி வருகிறார்கள்.

வாங்கவும்/விற்கவும் போன்ற பக்கங்கள் பேஸ்புக் கொள்கைக்கு எதிரானது என அதன் விதிகளில் கூறியுள்ளது. ஆனால் இன்னும் பல ஆயிர கணக்கான பேர் SHARING IS CARING குழுவில் விற்பனை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். நாங்கள் இங்கே கூறியிருப்பது ஒரு பேஸ்புக் குழுவை மட்டுமே. ஆனால் இதுபோல் நூற்றுக்கனக்கான குழுக்கள் இயங்கி வருகின்றன.

நன்றி : www.altnews.in

Leave Comments

Comments (0)