மாணவர் போராட்டமும் புகைப்பட கலைஞர் கைதும்: டாக்கா நகரம் கொந்தளிப்பு

/files/detail1.png

மாணவர் போராட்டமும் புகைப்பட கலைஞர் கைதும்: டாக்கா நகரம் கொந்தளிப்பு

  • 0
  • 0

-தமிழில் V. கோபி 

புகைப்பட நிருபரும், கட்டுரையாளரும் Drik and Pathshala Media Institute என்ற மல்டிமீடியா நிறுவனத்தின் நிறுவனருமான ஷகிதுல் அலாம் வங்காளதேசத்தில் நடைபெறும் மாணவர் போராட்டத்தின் கானொளி ஒன்றை முகநூலில் பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் டாக்கா காவல்துறையின் புலனாய்வு பிரிவிலிருந்து வருவதாக கூறிய சில நபர்கள் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். டாக்காவில் நடைபெறும் மாணவர் போராட்டத்தில் இதுவரை ஐந்து ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த போது கட்டுபாடின்றி வந்த பேருந்து மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். இதன்காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதுகாப்பான சாலை வேண்டும் என்ற கோரிக்கையோடு டாக்கா நகரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

“எந்த குற்றச்சாட்டும் நிபந்தனையும் இன்றி உடனடியாக ஷகிதுல் அலாமை வங்காளதேச அதிகரிகள் விடுவிக்க வேண்டும். மேலும் டாக்கா போராட்டத்தினை பதிவு செய்யும் ஊடகவியலாளர்கள் கைது செய்யப்படுவோம் என்ற பயமின்றி பணியாற்றுவதற்கான சூழலை அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்” என CPJ ஆசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவன் பட்லர் கேட்டு கொண்டுள்ளார்.

அமைதியாக நடந்த மாணவர் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணிர் புகை குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளனர். இதனால் 115க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். அர்சுக்கு ஆதரவானவர்களும் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

“மாணவர்கள் போராட்டத்தை தடுக்கும் நடவடிக்கையை வங்காளதேச அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். மாணவர்கள் அமைதியாக கூடுவதற்கும் தங்களை பாதுகாத்து கொள்வதற்கும் முழு உரிமை உள்ளது. இந்த உரிமை மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும். மேலும் காவல்துறை ரப்பர் குண்டுகளை பயன்படுத்தியதையும், அரசு ஆதரவாளர்களின் வன்முறை செயல்களையும் முறையாக விசாரிக்க வேண்டும்” என ஆம்னெஸ்டி அமைப்பின் தெற்காசிய துணை இயகுனர் ஒமர் வராய்ச் தெரிவித்துள்ளார்.

அலாம் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாப்பு காவலர்கள் கூறுகையில், “40 க்கும் மேற்பட்டோர் புலனாய்வு பிரிவிலிருந்து வருவதாக கூறி அலாமை பலவந்தமாக காருக்குள் ஏற்றிச் சென்றனர். அலாமை கூட்டிச் செல்வதற்கு முன் அவர் கட்டிடத்தில் உள்ள சிசிடிவி கேமராவையும் தொலைபேசி இணைப்பையும் சேதப்படுத்தியுள்ளனர்”.

முகநூல் பதிவு சம்மந்தமாக சில கேள்விகளை கேட்பதற்காக அலாமை காவலில் வைத்துள்ளதாக போலீசார் கூறினாலும் அவர் மீது வங்காளதேச தகவல் தொழில்நுடப் சட்டப்பிரிவு 57ன் கீழ் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.

இந்த வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வங்காளதேச அரசு உலகளாவிய சட்டதிட்டங்களை கடைபிடிப்பது மட்டுமல்லாமல், கருத்துரிமையை பாதுகாக்கவும், அமைதி பேரணி, தனிநபர் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என ஆம்னெஸ்டி அமைப்பு கூறியுள்ளது.

நன்றி  .amnesty.org

Leave Comments

Comments (0)