Z-விமர்சனம்

/files/detail1.png

Z-விமர்சனம்

  • 0
  • 0

-ரோஜர் எபேர்ட்  தமிழில் V.கோபி 

சிலவற்றை நாம் மூடி மறைக்கமுடியாது.நமக்கு அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டதை நம்புவதற்கு எளிமையானதாக இருக்கலாம்.ஆனால் உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியதும்,முரண்பாடுகள் தோன்றி நமக்கு கூறப்பட்ட ‘விபத்து’ கொலையாக புலப்படுகிறது.

கிரீஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ‘கொலை’ செய்யப்பட்ட சம்பவத்தை Z படம் விவரிக்கிறது.அல்ஜீரியாவிற்கு Battle of Algiers எப்படியோ அதுபோல கிரீஸ் நாட்டிற்கு Z படம்.இது நம் காலத்தின் திரைப்படம்.அறம் சார்ந்த வெற்றிகள்கூட ஊழல்படிந்துள்ளதை இப்படத்தின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.Z படம் உங்களுக்கு அழுகையை மட்டுமல்லாமல் கோபத்தையும் உண்டாக்கும்.

Z படம் எளிமையாகவும் உண்மை சம்பவத்தின் அடிப்படையிலும் கூறப்பட்டுள்ளது.1963ம் ஆண்டு மே மாதத்தில் கிரீஸ் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் கிரிகோரிஸ் லம்ப்ராக்கிஸ் ‘எதிர்பாரா விபத்தில்’ சிக்கி இறக்கிறார்.இந்த விபத்தில் ஏதோ சதித்திட்டம் உள்ளதாக வெளியே கசிய,அதனை மறைக்க விசாரணை அதிகாரியை அமைக்கிறது அரசாங்கம்.

இது விபத்து என்று நிறுவுவதே அவருக்கு இட்ட உத்தரவு.ஆனால் விசாரணையின் முடிவில் எதிர்க்கட்சி தலைவரை கொலை செய்தது வலது சாரி அமைப்பு என்பதை கண்டுபிடிக்கிறார்.ரானுவ உயர் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மீது வழக்கு பதியப்படுகிறது.குற்றங்கள் நீதிமனறங்களில் நிரூபிக்கப்பட்டு தண்டைனகளும் வழங்கப்படுகிறது.குற்றங்களை நிறைவேற்றச் சொல்லி உத்தரவிட்ட அதிகாரிகளுக்கு குறைவான தண்டைனையும் அதனை செயல்படுத்திய கீழ்நிலை அதிகாரிகளுக்கு கடும் தண்டனையும் வழங்கப்படுகிறது.

ஆனால் கதை இதோடு முடியவில்லை.1967ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜூண்டா ரானுவம்,வலது-சாரிகளான காவல்துறை மற்றும் ரானுவ அதிகாரிகள் அனைவரையும் தண்டைகளிலிருந்து விடுவித்தது.கொலைகளை கண்டுபிடிக்க காரணமாக இருந்தவர்கள் அரசியல் குற்றவாளியாக பார்க்கப்பட்டார்க்ள்.

அரசியல் படமாக இருந்தாலும் இளம் இயக்குனரான கோஸ்தா கிராவஸ் ஆர்வத்தை தூண்டும் விதமாக எடுத்துள்ளார்.படம் தொடர தொடர அவரின் கதை நாயகர்கள் மாறிக்கொண்டே வருகிறார்கள்.படத்தின் தொடக்கத்தில் நேர்மையான அரசியல் தலைவரான வெஸ் மோண்டேண்ட் மீது நாம் கவனம் கொள்கிறோம்.பின்னர் நமது கவனம் எதிர்கட்சி தலைவர்கள் மீதும் விதவை பெண் மீதும் செல்கிறது.கடைசியாக ஆட்சி அதிகாரங்களின் அழுத்ததிற்கு மத்தியில் நேர்மையாக குற்றத்தை கண்டுபிடிக்கும் விசாரணை அதிகாரியை தொடர்கிறோம்.ஆட்சியை கவிழ்ப்பது அவரது நோக்கம் இல்லாவிட்டாலும் தான் கண்டுபிடித்த ஒவ்வொரு ஆதாரத்தின் மூலமாக நீதியை நிலை நாட்டுகிறார்.

படம் வெற்றியோடு முடிந்ததாக முதலில் நமக்கு தெரியலாம்.ஆனால் இப்படம் அரசாங்கத்தின் சீழ் படிந்த நிலையை வெளிப்படுத்தியுள்ளது.ரானுவ,காவல்துறை அதிகாரிகள் மீது கொலை,அதிகார துஷ்பிரயோகம்,நீதியை தடுத்தல் ஆகிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.கொலை செய்யப்பட்ட தலைவரின் தொண்டர்களில் ஒருவன் இந்த நல்ல செய்தியை விதவையிடம் சொல்வதற்கு வேகமாக வருகிறான்.அவள் கடற்கரையில் நிற்பதை பார்த்தவன்,நாம் வெற்றி அடைந்து விட்டதாகவும் நமக்கான நீதி கிடைத்துவிட்டதாகவும் விரைவில் அரசாங்கம் வீழும் என்றும் அவளிடம் கூறுகிறான்,இவை அனைத்தையும் அமைதியாக கேட்ட அவள் கடலை பார்த்தபடி நிற்கிறாள்.அவளது முகம் எந்த வெற்றியையும் வெளிக்காட்டவில்லை.மாறாக இழப்புகளையும் சோகத்தையும் தெரிவிக்கிறது.

இன்று வலது-சாரி அமைப்புகள் கிரீஸை ஆண்டு வருகின்றன.இப்படத்தின் இயக்குனர்,திரைக்கதை ஆசிரியர்,இசையமைப்பாளர் என அனைவரும் கிரீஸ் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளனர்.அவ்வுளவு ஏன்,Z என்ற எழுத்து கூட தடை செய்யப்பட்டுள்ளது.

இப்படம் அமெரிக்காவின் சான் பிரான்ஸிக்கோ திரைப்பட விழாவில் திரையிட்ட போது அமெரிக்காவிற்கு எதிரான படம் என விமர்சனம் எழுந்தது.ஆனால் ஒரு உண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.கிரேக்க ஜுந்தா ரானுவத்தை ஆதரித்தது அமெரிக்கா.கிரீஸ் எதிர்கட்சி தலைவரை கொலை செய்த அரசாங்கத்தை ஆதரித்தது அமெரிக்கா.

நன்றி https://www.rogerebert.com/reviews/z-1969

குறிப்பு: படச்சுருள் அரச பயங்கரவாத எதிர்ப்பு சினிமா சிறப்பிதழுக்காக மொழியாக்கம் செய்யப்பட்ட இந்தக் கட்டுரை, பக்க பற்றாக்குறை காரணமாக கருப்பில் வெளியிடப்படுகிறது.

Leave Comments

Comments (0)