நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய 36 தலித் எழுத்தாளர்கள்

/files/detail1.png

நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய 36 தலித் எழுத்தாளர்கள்

  • 265
  • 0

-அபிஷேக் ஜா தமிழில்V. கோபி 

எழுத்தாளர்களான ராஜ் கௌதமனோ, ஊர்மிளா பவாரோ அல்லது தலித் இலகிய மாத நிகழ்வுகளோ ஏன் இலக்கிய வரலாற்றை மறுவரை செய்யவேண்டும் என்றும் கோருவதற்கு காரணம் இதுவரையிலான இலக்கியங்கள் உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தில் இருந்தது. உலகளவில் காமன்வெல்த் நாட்டைச் சேர்ந்த அல்லது பெண் எழுத்தாளர்கள் குறித்து கூறப்படுவதே இந்தியாவில் தலித் எழுத்தாளர்களின் நிலைமையாகவும் உள்ளது. அதாவது சமூகத்தில் அப்போதைய காலத்தில் யார் அதிகாரத்தில் உள்ளார்களோ அவர்களே இலக்கியத்தை தீர்மாணிக்கிறார்கள்.

இதை வைத்து இலக்கியத்தில் எந்த எதிர்ப்பும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறிவிட முடியாது. தற்போது பல தலித் எழுத்தாளர்களின் எதிர்ப்பு குரல்கள் பலரது காதில் கேட்க தொடங்கியுள்ளன. மராத்திய இலகியத்தையே தலித் பேந்தர்ஸ் அமைப்பு முற்றிலும் மாறி அமைத்தது. பாமாவின் எழுத்துகள் தமிழ் இலக்கிய உலகில் புயலை கிளப்பியது. இன்று இத்தகைய எழுத்தாளர்கள் பல இளம் எழுத்தாளர்களுக்கு உந்துசக்தியாக உள்ளார்கள்.
நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய முக்கியமான 36 தலித் எழுத்தாளர்களின் பட்டியலை உங்களுக்கு அளிகிறோம்.

நம்தியோ தாசல்

மராத்திய கவிதை உலகில் மிகவும் புகழ்பெற்ற தாசல், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் முக்கியமானவர்களுள் ஒருவர். இவரது முதல் கவிதை தொகுதியான ‘கோல்பிதா’ பற்றி கவிஞரும் விமர்சகருமான திலீப் சித்ரே கூறுகையில், “மற்றவர்கள் சொல்ல தயங்குவதை தனது கவிதைகளில் கூறுபவர் தாசல். இந்த நூல் வெளியாகி இன்று 30 வருடம் ஆகிய பிறகும் என்னால் இதை உறுதியாக கூற முடியும். இவரின் கவிதை நூல் நோபல் பரிசு பெற தகுதியுடையது என்பதை கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை”.

1999ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது. சாகித்ய அகாடமி தனது பொன்விழா கொண்டாட்டத்தின் போது இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்தது.

மீனா கந்தசாமி

இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களுள் ஒருவரான இவரது படைப்புகள் 18 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. Touch, Ms.Militancy என்ற இரு கவிதை தொகுதிகளையும் The Gypsy Goddess, A Portrait of the Writer as a Young Wife என்ற இரு நாவலையும் எழுதியுள்ளார்


காதர்

நாட்டுப்புற பாடல்கள் மீது கொண்ட ஆர்வத்தால் தனது பொறியியல் படிப்பை பாதியிலேயே நிறுத்திய காதரின் இயற்பெயர் கும்மாடி விட்டல் ராவ். ஆங்கிலேய அரசிற்கு எதிராக பஞ்சாபில் போராடிய காதர் கட்சியின் நினைவாக தனது பெயரை காதர் என மாற்றி கொண்டார். கடந்து 30 வருடங்களாக இவரது பாடல்கள் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. தற்போது தேர்தல் அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

டாக்டர். சி.எஸ்.சந்திரிகா

எம் எஸ் சுவாமிநாதன் ஆய்வு நிறுவனத்தில் விஞ்சானியாக பணிபுரியும் சந்திரிகா, பெண்ணியவாதியும் எழுத்தளரும் ஆவார். இவர் முத்துகுளம் பார்வதி அம்மா விருது, தோப்பில் ரவி இலக்கிய விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். பிரா, கே.சரஸ்வதியம்மா, கிளிப்டோமேனியா, லேடிஸ் கம்பார்ட்மெண்ட் போன்றவை இவரது முக்கிய படைப்புகளாகும்

பாமா

விவசாய குடும்பத்தில் பிறந்த பாமா, எழுத்துலகில் வருவதற்கு முன்னர் பல இடங்களில் பணி செய்துள்ளார். தனது கல்லூரி காலத்தில் கவிதை எழுத தொடங்கிய பாமா, பின்னர் பள்ளி ஆசிரியராகவும் கண்ணியாஸ்திரியாகவும் இருந்துள்ளார். 1992ம் ஆண்டு முதல் எழுதும் பாமாவின் முக்கிய நூல் கருக்கு. இந்த நாவலில் பேச்சு மொழியை கையாண்ட பாமா, இந்த நாவல் எழுதியதற்காக தனது கிரமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். கருக்கு நாவல் 1998ம் ஆண்டு அங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட்து. இந்த நூலுக்காக கிராஸ்வேர்ட் புக் விருதை பாமா பெற்றார். 

தயா பவார்

இவரது இயற்பெயர் தக்து மாருதி பவார். இவரின் தன் வரலாற்று நூல் ‘பலுதா’ மராத்திய இலக்கியத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவரது முதல் கவிதை தொகுதியான கோண்ட்வடா மற்றும் பலுதா நூலிற்கு மகராஷ்டிர அரசு விருது வழங்கி கௌரவித்த்து. கவிதைகள் மட்டுமின்றி கட்டுரைகள், சிறுகதைகள் என பல எழுதியுள்ள தயா பவார், ஜபர் படேல் இயக்கிய டாக்டர்.அம்பேத்கர் படத்திற்கு திரைகதையும் எழுதியுள்ளார். இவருக்கு 1990ம் ஆண்டு மத்திய அரசு பதம்ஸ்ரீ பட்டம் வழங்கியது.

ஊர்மிளா பவார்

மும்பை மற்றும் கொங்கண் பகுதிகளில் உள்ள பெண்ணிய அமைப்புகளில் பணியாற்றி வரும் ஊர்மிளாவின் வாழ்க்கை வரலாற்று நூல் அய்தான் (The Weave of Bamboo) மிகப்பிரபலம். இவரின் ‘Sixth Finger’ மற்றும் ‘Mother Wit’ மிகச்சிறந்த சிறுகதை தொகுதிகள். 2004ம் ஆண்டு மகராஷ்டிர சாகித்ய பரிஷத் வழங்கிய லட்சுமிபாய் திலக் விருதை ஊர்மிளா வாங்க மறுத்துவிட்டார்.

ரவிகுமார்

நவயானா வெளியீட்டு நிறுவனத்தின் இணை நிறுவனரான ரவிகுமார், பல சிற்றிதழ்களை நட்த்திய அனுபவம் உள்ளவர். தமிழ் தலித்திய எழுத்துகளை ஆக்ஸ்போர்டு இந்தியா தொகுத்தபோது அதற்கு ஆசிரியராக இருந்தவர். Walking is Another Dream என்ற ஈழ பேரழிவு தொடர்பான கவிதை தொகுதிகளுக்கு பங்களிப்பு செய்துள்ளார். Venmous Touch: Notes on Caste, Culture and Politics என்பது இவரின் கட்டுரைகள் அடங்கிய நூலாகும்.

ஆன்ந்த் ராவ் அகேலா

எட்டாம் வகுப்பு வரையே படித்த ஆன்ந்த ராவ் இதுவரை 12க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தான் முதன்முதலில் எழுதிய 8 பக்க சிறு வெளியீட்டை கண்காட்சிகளிலும் கிராம சந்தைகளிலும் தானே விற்பனை செய்தார். கன்ஷிராம் மீது கொண்ட ஈர்ப்பால் 1985ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். பகுஜன் சமாஜ் கட்சி நட்த்தும் பொது கூட்ட்திற்கு பிரச்சார பாடல்களுக் கவிதைகளும் எழுதி கொடுத்தார். சமீபத்தில் பகுஜன் முக்தி என்ற கட்சியில் இணைந்துள்ளார்.

பாபுராவ் பகுல்

தலித் பேந்தர்ஸ் அமைப்பில் முக்கியமானவர்களுள் ஒருவரான பாபுராவ், ஜென்வா மீ ஜத் சோரளி ஹோட்டி என்ற சிறுகதை தொகுதி மூலம் பிரபலம் அடைந்தார். ஜாதிய அமைப்பினால் ஏற்படும் சமுக, பொருளாதார இழப்பையும், அதன் அழுத்தத்தால் ஏற்படும் புரட்சியை பற்றியுமே இவரது கதைகள் பெரும்பாலும் பேசும்.

ஜதின் பாலா

கிழக்கு பாகிஸ்தானில் பிறந்த பாலா, அகதி முகம்களில் வாழ்ந்து அங்கேயே கல்வியறிவும் பெற்றுள்ளார். இவர் பல கவிதை, சிறுகதை தொகுதிகளையும் நாவல்களையும் படைத்துள்ளார். 1970களிலிருந்து பல இதழ்களுக்கு ஆசிரியராக பணியாற்றியுள்ளார். சாகித்ய புரோஸ்கார், கோபி நிகிலேஷ் சாகித்ய புரோஸ்கார் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

அஜய் நவாரியா

ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் இந்தி துறையில் துணை பேராசிரியராக பணியாற்றி வரும் நவரியா இந்தி இலக்கியத்தில் முக்கியமானவர். The Sript and Other Stories மற்றும் Yes,Sir என இரு சிறுகதை தொகுதிகளையும் எழுதியுள்ளார். இவரது சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பான Unclaimed Terrain நூல் 2013ம் ஆண்டின் கார்டியன் நாளிதழின் சிறந்த நூல்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ரத்தன் குமார் சம்பாரியா

ஹர்யானவில் உள்ள ரேவாரி கிராமத்தில் பிறந்த சம்பாரியா, கடந்த 30 வருடங்களாக ராஜஸ்தானில் வசித்து வருகிறார். இதுவரை ஐந்து சிறுகதை தொகுதிகளையும், மூன்று கவிதை தொகுதிகளையும் ஹிந்தியில் எழுதியிருந்தாலும் இவரின் நூல்கள் கன்னட, மராத்தி மற்றும் பல இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. தன் சப்பதாசன் (The Attendant) என்ற கதைக்காக இந்திய துணை ஜனாதிபதியிடமிருந்து சகாரா சமய் கதா விருது பெற்றுள்ளார்.

பேபி கும்ப்ளே

தனது கனவரோடு சேர்ந்து கடை நடத்தி வரும் கும்ப்ளே தனது ஓய்வு நேரத்தில் எழுதுபவர். புராண கதைகளில் உயர் ஜாதியினர் மிகுதியாக இடம்பெறுவதை பார்த்து கோப்பட்டு எழுத்துலகில் பிரவேசித்தவர் கும்ப்ளே. இவரது தன் வரலாற்று நூலான “ஜினா அமுச்சா” (Our Life) மிகச் சிறந்த நூல்.

லீலாதர் மண்ட்லோய்

தூர்தர்ஷன் மற்றும் ஆல் இந்திய ரேடியோவின் முன்னாள் இயக்குனாரான லீலாதர், கவிதை, இலக்கியம், கலாச்சரம் என 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். சம்ஷர் சம்மன், நாகர்ஜுன் சம்மன், சாகித்யக்கார் சம்மன் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார். பல சிருகதைகளை தொலைகாட்சி தொடராக இயக்கியுள்ளார்.

இமயம்

தமிழ்நாடின் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் இமையம், மூன்று நவல்களையும் நான்கு சிறுகதை தொகுதிகளையும் எழுதியுள்ளார். இவரது கோவேறு கழுதைகள் மறும் ஆறுமுகம் நாவல்கள் தமிழ் வாசகர்களிடம் மிகவும் புகழ்பெற்றது. தமிழ்நாடு முற்போக்கு சங்க விருது, அக்னி அக்ஷரா விருது, அமுதம் அடிகள் விருது ஆகியவறை பெற்றுள்ளார்.

அனிதா பாரதி

தனது கவிதைகளுக்க்கவும் கதைகளுக்காகவும் அறியப்படும் அனிதா, சமீபத்தில் 65 கவிஞர்கள் எழுதிய நூல் ஒன்றை தொகுத்துள்ளார். சமூக புரட்சியாளர் கப்து ராம் வல்மிகியின் வாழ்க்கை வரலாற்று நூலை அனிதா எழுதியுள்ளார். இவர் இந்திரா காந்தி சிக்சாக் சம்மான் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

கன்வால் பாரதி

ஏழை குடும்பத்தில் பிறந்த கன்வால், தனதி 15வது வயதிலேயே கவிதை எழுத தொடங்கினார். 2008ம் ஆண்டிலிருந்து இவரது நூல்கள் பல பல்கலைகழகத்தில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் தேசிய விருது, பீம் ரத்ன விருது என பல விருதுகளை பெற்ற இவர், இதுவரை 15க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மனோரஞ்சன் பய்பாரி

1950களில் வங்காளதேசத்திலிருந்து மேற்கு வங்காளத்திற்கு குடிபெயர்ந்த பய்பாரி, தனது இருபது வயது வரை கல்வி அறிவின்றி இருந்தார். ஆனால் இன்றுவரை 10 நாவல்களும், 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
தனது இரண்டு வருட சிறை தண்டனையின் போது வங்காள மொழியை கற்க தொடங்கியவர். சிறையிலிருந்து வந்ததும் ரிக்சா ஓட்டுனராக வேலை பார்த்த பய்பாரி, எழுத்தாளர் மகாஸ்வேத தேவியின் அறிவுரையை கேட்டு எழுத தொடங்கினார். இவரின் முதல் கட்டுரையான “I Pull Rickshaw” மகாஸ்வேத தேவியின் இதழான பர்திகாவில் 1981ம் ஆண்டு வெளியானது.

சூரஜ்பால் சவுகான்

கவிதை மறும் கட்டுரைகள் எழுதும் சவுகானுக்கு அலிகார் சொந்த ஊர். பிரயாஸ், கயுன் விஷ்வாஸ் கருன் போன்றவை இவரது கவிதை தொகுதிகள். இவர் ஹிந்தி அகாடமி விருதை பெற்றுள்ளார்.

ராஜா தாலே

தலித் பேந்தர்ஸ் அமைப்பின் நிறுவனர்களில் ராஜாவும் ஒருவர். தற்போது செயற்பாட்டாளரக இருந்தாலும், பல மரத்திய சிற்றிதழ்களுக்கு ஆசிரியராக இருந்துள்ளார். துண்டு அறிக்கை போன்ற வடிவில் ‘அட்டா’ என்ற இதழை வெளியிட்டார். ‘The Poetry of Circumstances’ என்பது இவரது முழுமையான கவிதை தொகுதியாகும். 

ராஜ் கௌதமன்

1980களில் இலக்கிய இதழில் பணியாற்றிய கௌதமன், 1990ம் ஆண்டுகளில் தலித் எழுத்தாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சியின் போது சிந்தனையளராக கருதப்பட்டார். தமிழ் இலக்கியத்தை தலிப் பார்வையில் விமர்சித்து தமிழ் மொழியின் இலக்கிய வரலாற்றை கேள்வி கேட்பவர்.

சாந்தாபாய் கிருஷ்னாபாய் காம்ப்ளே

மகராஷ்டிராவின் சோலாபூர் மாவட்ட்த்தில் 1940ம் ஆண்டில் முதல் தலித் பெண் ஆசிரியராக பணிபுரிந்தவர். ஓய்வுக்குப் பின் தனது வாழ்க்கை வரலாற்றை (The Kaleidoscopic Story of My Life) என்ற பெயரில் பூர்வ இதழில் தொடராக எழுதியவர். பின்னர் இது தொலைகாட்சி தொடராகவும் எடுக்கப்பட்டது.

தேவ் குமார்

தலித் உள்ளுணர்வுகளை தட்டியெழுப்ப 1992ம் ஆண்டு ஆப்னா நாடக குழுவை உத்தரபிரதேசத்தில் குமார் தொடங்கினார். தாஸ்தான், சக்ரதாரி, சுதர்ஷன் கபாத், பத்ரா அங்குலிமால் போன்றவை இவரது புகழ்பெற்ற நாடகமாகும்.

தேவனூர் மகாதேவா

தனது நாவலுக்காக 1990ம் ஆண்டு கேந்திர சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ள மகாதேவா, 2011ம் ஆண்டு தான் பெற்ற பத்மஸ்ரீ விருதை நாட்டில் சகிப்புதன்மை குறைந்து வருவதாக கூறி திருப்பி கொடுத்துவிட்டார்.

அரவிந்த் மலகட்டி

மைசூர் பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர். கவிதை, நாவல்கள், சிறுகதைகள், ஆய்வு கட்டுரைகள், இலக்கிய, சமூக, கலாச்சார நூல்கள் என பலவற்றை எழுதியுள்ளார். தனது வாழ்க்கை வரலாற்று நூலான கவர்மெண்ட் பிராமணா என்ற நூலிற்காக கர்நாடக சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார்.

சித்தலிங்கையா

கர்நாடக் தலித் சமிதியை தொடங்கியவர். போராட்டத்தில் பாடுவதற்காக படல்களை எழுத தொடங்கியவர், இன்று நாங்கு கவிதை தொகுதிகள், இரு நாடகங்கள், பல கட்டுரைகளை எழுதியுள்ளார். நாட்டுப்புற தெய்வங்களைப் பற்றி ஆய்வு கட்டுரையும் எழுதியுள்ளார்.
 

கே நாத்

கான்பூரில் 1945ம் ஆண்டு பிறந்த இந்தி எழுத்தாளரான இவர், பல ஜாதி கொடுமைகளை சந்தித்துள்ளார். இவரின் வாழ்க்கை வரலாற்று நூலான திரஸ்கார் மிகவும் புகழ்பெற்றது.

கோட்டிங்கநகலி ராமையா

புகழ்பெற்ற கன்னட கவிஞரான ராமையா கோலர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் நாடகம் , பாடல்கள், திரைக்கதை ஆகியவற்றையும் எழுதியுள்ளார். இவர் அடிமை அங்களா என்ற கலாச்சார அமைப்பை நிறுவியுள்ளார். கீஜென்னடா என்ற படத்தில் வசனம் எழுதியதற்காக இவர் விருது பெற்றுள்ளார். கர்நாடக சாகித்ய அகாடமி, கர்நாடக நாடக அகாடமி போன்ற பல விருதுகளை ரமையா பெற்றுள்ளார். 

கோகு சியாமளா

ஹைதரபாத்தில் உள்ள அன்வேஷி ஆய்வு மையத்தில் பணிபுரியும் சியாமளா, தலித் பெண் அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறார். இவர் தெலுங்கில் “Father May Be an Elephant and Mother only a Small Basket, But… என்ற சிறுகதை தொகுதியை வெளியிட்டுள்ளார்.

சிவகாமி

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான இவர், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற எழுத்தாளர். புதிய கோடாங்கி என்ற மாத இதழுக்கு ஆசிரியராக இருக்கும் சிவகாமி, இதுவரை நான்கு நாவல்களையும் ‘கதவடைப்பு’ என்ற கவிதை நூலையு,ம் வெளியிட்டுள்ளார்.

ஓம்பிரகாஷ் வால்மிகி

உத்தரபிரதேசத்தில் உள்ள முசாபர்நகரில் பிறந்த வால்மிகியின் தன் வரலாற்று நூலான மிகவும் புகழ்பெற்றது. சதியோன் க சந்தப் மற்றும் பாஸ் பகுத் ஹோ க சந்தப் என்ற கவிதை தொகுதிகளையும் சலாம், குஸ்பய்தியே என்ற சிறுகதை தொகுதிகளையும் எழுதியுள்ளார்.

தேபி ராய்

ஹவுராவில் உள்ள சேரி பகுதிகளில் பிறந்த ராயின் இயற்பெயர் ஹரதோன் தாரா. இலக்கியத்தில் நீடித்திருக்க வேண்டி தனது பெயரை தேபி ராயாக மாற்றி கொண்டார். 1960களில் மேற்கு வங்காலத்தில் இயகத்தை தொடங்கிய இவர், அதன் கொள்கைகளையும் வெளியிட்டார். 1965ம் ஆண்டு வெளியான Kolkata and I என்ற இவரது முதல் கவிதை தொகுதி ஆபாசமாக உள்ளதாக கூறி காவல்துறை இவரை கைது செய்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட கவிதை நூல்களையும், 3 நாவல்களையும், இந்தியிலிருந்து வங்காள  மொழிக்கு நூல்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

பகவான் தாஸ்

1950களில் அம்பேத்கரின் ஆய்வு உதவியாளராக இருந்த தாஸ், 1970ல் World Conference of Religions for Peace தொடங்குவதற்கும் 1998ம் ஆண்டு உலக தலித் கூட்டாய்வை நடத்துவதற்கும் உதவியாக இருந்தார்.லகோரி ராம் பாலேயுடன் இணைந்து புத்த வெளியீட்டு நிறுவனத்தின் மூலம் அம்பேத்கரின் பேச்சுகளை புத்தகமாக வெளியிட்டார். அந்த நூல்களுக்கு முன்னுரையும் தாஸே எழுதியுள்ளார்.
இவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் I am a Bhangi

விஜிலா சிராபத்

மலையாள கவிஞரான இவர் இதுவரை மூன்று கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார். அவை அதுகல இல்லாத வீடு (A Home without a kitchen), அம்மா ஒரு கல்பானிக கவித அல்ல (Mother is not a Poetic figment of our Imagination) மற்றும் பகர்தி எழுத்து (Copied Notes) ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தொகுத்த இந்திய கவிதைகளில் இவரது கவிதையும் இடம் பெற்றுள்ளது. மேலும் இவரது கவிதைகள் கேரள பலகலைகழகங்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

அருன் கிருஷ்னாஜி காம்ப்ளே

மராத்திய பேராசிரியராக மும்பை பல்கலைகழகத்தில் பணிபுரியும் காம்ப்ளே, தலித் பேந்தர்ஸ் அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவர். கவிதை எழுதுவதிலும் மொழிபெயர்ப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ராமாயன் சன்ஸ்கிருதிக் சங்கார்ஷ், தர்மான்தராச்சி பீம்கர்ஜனா, சால்வலிச்சே திவாஸ் போன்றவை இவரது முக்கிய நூல்களாகும்.

நன்றி : https://www.youthkiawaaz.com/2017/07/36-dalit-writers-you-should-definitely-read/

Leave Comments

Comments (0)