பெண்கள் எதிர்கொள்ளும் இயற்கை உபாதைகள்

/files/detail1.png

பெண்கள் எதிர்கொள்ளும் இயற்கை உபாதைகள்

  • 3
  • 0

-V.கோபி 

“வருடம் முழுவதும் பயணம் செய்யும் என்னை போன்றவர்கள் சிறுநீர் கழிப்பதற்காக படும் அவஸ்தை சொல்லி மாளாது.சிலசமயம் பேருந்தோ லாரியின் பின்புறமோ அல்லது புதருக்கு பின்புறமோ அல்லது அசிங்கமான கழிவறையிலோ நாம் சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும்.ஏன் இந்த ஆண்கள் மட்டும் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கிறார்கள்” என கோப்படுகிறார் நிகிதா.இவர் இந்தியாவில் உள்ள கிராமப்புற குழந்தைகளிடம் சமூக சேவை புரிகிறார்.

நிகிதா,ஷ்ரேயா,தன்வி மற்றும் நான் நால்வரும் முன்னாள் கல்லூரி தோழிகள்.தற்போது பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகள் பற்றி விவாதிப்பதற்காக ஒன்று கூடியுள்ளோம்.இதில் இருவர் சமூக பணியாளராகவும்,ஒருவர் சுற்றுச்சுழல் பத்திரிக்கையாளராகவும் மற்றொருவர் வர்த்தக பத்திரிக்கையாளராகவும் இருக்கின்றனர்.நாங்கள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு அசிங்கமான கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதை பற்றியும்,வேர்வை உமிழும் அக்குள் பிரச்சனையை சமாளிப்பது பற்றியும்,உதிரப்போக்கு காலத்தில் வலி குறைக்க பயன்படும் துணிகள் பற்றியும் விவாதித்து கொண்டிருக்கிறோம்.

வர்த்தக பத்திரிக்கையாளராக பெங்களூரூவில் வசித்து வரும் நான்,என் பணி நிமித்தமாக பல தொழில்முனைவோர்களை தினசரி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.அப்படித்தான் பெண்கள் நின்று கொண்டே சிறுநீர் கழிக்க உதவியாக கெட்டி தாளை கொண்டு செய்த புனலை உற்பத்தி செய்யும் ஒருவரை சந்தித்தேன்.அவரிடம் இருந்து ஒரு அட்டைபெட்டியை நான் வாங்கி,பயணம் செய்யும் என உறவுக்காரர்களிடமும் தோழிகளிடமும் கொடுத்தேன்.சில சமயம் பெங்களூரூவை விட்டு வெளியே செல்ல வேண்டியிருக்கும் என்று நானும் ஒன்றை வைத்து கொண்டேன்.நான் உபயோகப்படுத்தி பார்த்ததில்,பயனுள்ளதாகவே உள்ளது.சிறுநீர் புனலை விட்டு எங்கும் சிதறவில்லை.மேலும் சரியான முறையில் புனலை வைத்தால் கைகளிலும் தெரிப்பதில்லை.அசிங்கமான கழிப்பறையை உபயோகிப்பதிற்கு பதில் இது எவ்வுளவோ சிறப்பானது என இந்த புனலை உபயோகப்படுத்தியவர்களும் கூறுகின்றனர்.

இப்பிரச்சனை சரியானதும்,அடுத்த ‘பெண்களின் வாழ்வை எளிமப்படுத்தும்’ பொருளான அக்குள் வேர்வை துணியை தேடத் தொடங்கினேன்.கேராளாவில் நடைபெற்ற என் உறவுக்கார பெண்ணின் திருமணத்தின் போது அதுவும் நிறைவேறியது.அங்கு மணப்பெண் அறைக்கு அருகிலேயே மணப்பெண்ணுக்கு உதவி புரியும் பெண்களுக்கும் அறை இருந்தது.அங்குதான் என் அத்தை மகளின் தோழியான ரிமா என்பவளை சந்தித்தேன்.

அவள் ஒரு விற்பனை பெண்ணுக்குரிய குதூகலத்தோடு அனைவருக்கும் அக்குள் வேர்வை துணியை கொடுத்து கொண்டிருந்தாள்.அது உபயோகமாக இருந்ததா?அங்கு பலருக்கும் வேர்வை திட்டுகள் இல்லையென்றாலும்,சிலருக்கு பின்பக்கத்தில் இருந்ததை யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இந்த வேர்வை பருத்தி துணியை உபயோகப்படுத்துவதற்கு முன்,அக்குள்கள் சுத்தமாகவும் முடியை அகற்றியும் இருக்க வேண்டும்.சரி,இதை திருமணம் போன்ற விசேஷங்களுக்கு எப்படி உபயோகப்படுத்துவது?இத்துணியை பிராவுக்குள் வைத்து கொண்டால் முடிந்தது வேலை, என்றாள் ஷ்ரேயா.வேர்வை அதிகமாக சுரக்கும் நபர்களுக்கு,சூரிய வெயில் அதிக நேரம் படுபவர்களுக்கும்,பட்டு சேலை உடுத்துபவர்களுக்கும் இந்த வேர்வை துணி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இனி எனது அடுத்த பொருளான உதிரப்போக்கு சமயத்தில் ஏற்படும் வலியை குறைக்கும் துணியை தேட வேண்டும்.இந்த வலியால் தங்களது வேலை நேரத்தை சமாளிக்க முடியாமல் பலர் வேதனைப்படுகின்றனர்.

இந்த உதிரப்போக்கு வலி நிவாரண துணியை உபயோகிப்பதால், இரவுநேர பணியின் போது என்னால் எந்த சிக்கலுமின்றி செயல்பட முடிகிறது என கூறுகிறார் தன்வி.நீங்கள் இன்னொன்றையும் நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.இந்த உதிரப்போக்கு துணியில் இருந்து யூக்களிப்டஸ் வாசம் வரக்கூடும்.இதனால் பலரும் உங்களை வாசனை திரவியம் உபயோகித்துள்ளீர்களா அல்லது ஏதாவது ஆயுர்வேத மருந்து பூசியுள்ளீர்களா என கேட்ககூடும்.

பெண்களின் சுகாதாரமும் வலி நிவாரன பொருட்களும் முன்னேற்றம் ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும் இவற்றையெல்லாம் வியாபரப்படுத்துவது ஆண்கள் தானே என என் பக்கத்திலிருந்த பெண்ணியவாதிகள் வாதம் புரிகின்றனர்.சிறிய தாளை வைத்து நின்று கொண்டே சிறுநீர் கழிக்க முடியும் என நினைத்து பார்த்தோமா?இது இன்னும் வளர்ச்சி அடைந்து,பெண்களின் புரட்சிக்கு உதவியாக இருந்தால் நிச்சியம் இந்த ஆண்கள் 21ம் நூற்றாண்டின் அறிவாளிகளே.
 

நன்றி 101India

Leave Comments

Comments (0)