பாஜகவின்  கீழ்   விருத்தியடையும்  போலி  அறிவியல்,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு  வேரூன்றியுள்ளது.

/files/bjp 2020-09-17 09:32:27.gif

பாஜகவின்  கீழ்   விருத்தியடையும்  போலி  அறிவியல்,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலம் தொட்டு  வேரூன்றியுள்ளது.

  • 8
  • 0

தமிழில்: பிரபு

தன் புதிய நூலில் இவ்வறிஞர்,  ‘தொன்மம்சார் அறிவியல்’  மீது இந்துத்துவம் கொண்டிருக்கும்   காதலின்  சிக்கலான   தர்க்கங்களையும்   துவக்கங்களையும் குறித்து  எழுதுகிறார்.

அர்த்தசாஸ்திரம், காமசூத்திரம்,  உலகாயதம்   ஆகியவற்றின் அறிவியல் மனப்பான்மையால்  வளர்க்கப்பெற்ற   எதிர்ப்பு உணர்வானது  தற்சமயம் போலி அறிவியல் கூற்றுகளுக்கு ஆதரவான அடக்குமுறை தர்ம  சக்திகளின் புதிய அவதாரமொன்றை எதிர்க்கும் நிலையில் உள்ளது. மீண்டுமொருமுறை அறிவியல் (அரசியல், பாலியல் சார்ந்ததல்லாமல் இயற்பியல், வானூர்தி அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்தது) தர்மத்தின் எதேச்சாதிகாரக் கூறுகளோடு நேரடி மோதலுக்குள்ளாகியுள்ளது.   
\r\nஇதுவும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்  தொடங்கியதாகும்.  காமத்துக்கெதிரான இந்து எதிர்வினையைத் தூண்டிய அதே பிரிட்டிஷ்   பிராட்டஸ்டண்ட்  கருத்துக்களைக் கிரகித்துக்கொண்டதன் வழியாக சீர்திருத்த இந்துக்கள் பிரிட்டிஷ் அறிவியலையும் (குறிப்பாக ரயில் போன்ற தொழில்நுட்பத்தில் வெளிப்படுவது) பிரிட்டிஷ் ஒழுக்க நெறிகளையும்  (அடிப்படையில் சதி உள்ளிட்ட  இந்து சமூக தர்மத்துக்கு எதிரான பிரிட்டிஷ் நெறிமுறை மற்றும் சமூக தர்மம்)  பாராட்டத் துவங்கினர்.  

அறிவியல்  முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக நெறிசார் முன்னேற்றத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால், குடியேற்றக்காரர்கள் மீது தாங்கள்  கொண்டிருந்த சங்கடமான மரியாதைக்கு எதிரான ஒரு ஈடுசெய்யும் எதிர்வினையாக  பல இந்துக்கள் வெளிநாட்டு  விழுமியங் களை (அவற்றின் அயல்தன்மையை மறுதலித்து)  தக்க வைத்திருந்தனர். 

பிரிட்டிஷ் ஒழுக்க நெறிகளுக்கு பதிலடியாக  தங்கள் சொந்த "சாசுவத" சனாதன தர்மத்தை வலியுறுத்தியது  போல, தங்கள் பழைய மத ஆவணமான வேதம் பொ.ச.மு. 1500 இலேயே அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கியதாக அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், பண்டைய இந்திய அறிஞர்கள் இலக்கண ம் மற்றும் கணிதத்தில்    மட்டுமின்றி (உண்மை, ஆயினும் வேதங்களில் குறிப்பு இல்லை) வானூர்தி அறிவியலிலும்  (செய்யவே இல்லை) முக்கிய அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்ததாக அவர்கள் கூறினர். 
\r\nசுவாமி தயானந்த சரஸ்வதி, அவதாரக் கடவுள்  கிருஷ்ணரும்  மகாபாரத மனித நாயகன் அர்ஜுனனும் (கிருஷ்ணரின் நெருங்கிய நண்பன்) ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் சைபீரியா மற்றும் பெரிங் நீரிணை வழியாக பயணம் செய்து  அமெரிக்காவிற்குச் சென்றதாக  வாதிட்டார்.   இக்கருத்தைப் பிடித்துக்கொண்ட பிறர், கொலம்பஸுக்கு வெகு காலத்திற்கு முன்பே வேதகால மக்கள்  அமெரிக்காவை கண்டுபிடித்ததால், அவர் பூர்வீக அமெரிக்கர்களை  "இந்தியர்கள்" என்று சரியாகவே அழைத்தார் என வலியுறுத்தினர்.  இங்கு குழப்பம் அதன் உச்சகட்டத்தை அடைந்துவிட்டது !

இக் கூற்றுக்களை உருவாக்கியவர்கள், அறிவியல் தன்மை மிகுந்த சாஸ்திரங்களைப் புறக்கணித்து  இரண்டு காரணங்களுக்காக    வேதங்களைத் தங்கள் சாட்சியமாக எடுத்துக்கொண்டனர். முதலாவதாக, வேத மொழி மிகவும் பழமையானதாக இருப்பதால், ஒரு விடயம்  பிந்தைய நூலொன்றைவிட  "வேதங்களில் உள்ளது"  என வாதிடுவது எப்போதுமே எளிதானது (ஷேக்ஸ்பியருக்கு பியோவல்ஃப் [Beowulf] எப்படியோ அதேபோல செவ்விய சமஸ்கிருதத்துக்கு வேத மொழியும் அப்படியே). இந்நிலையில், வேதங்களைத்   தங்கள்  ஆதாரமாகக் கொள்வோருடன் முரண்படுவதற்கு வெகுசில மதகுருக்கள் மற்றும் அறிஞர்களால் மட்டுமே முடியும். இரண்டாவதாக  வேதங்கள், சாஸ்திரங்களைவிட (விவிலியத்தையும்விட) அதிகப் பழமைவாய்ந்தவையாக உள்ளதால் அதிக ஆதிக்கத்தையும் பெற்றுள்ளன- குறிப்பாக மத ஆதிக்கம்.
\r\nஎனவே, பிரித்தானியர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்றுவதற்கு உழைத்த இந்து தேசியவாதிகள், தொடர்ச்சியாக இருமுனை வாதங்களை முன்னெடுத்தனர். "நீங்கள் அறிவியல்சார்ந்தவர்கள், ஆனால் நாங்கள் ஆன்மீகம்சார்ந்தவர்கள்" என்ற வாதத்தோடல்லாமல்  "உங்கள் அறிவியலைவிட எங்கள் மதம் விவேகமுள்ளது-எங்கள் மதநூல்களில் உங்களுடையதைக்காட்டிலும் தொன்மையான அறிவியல் உள்ளது" என்ற வாதத்தையும் முன்வைத்தனர். இறுதியாக,  "மதத்திலும் அறிவியலிலும் நாங்கள் உங்களை விட சிறந்தவர்கள். ஏனெனில் எங்கள் மதம் அறிவியல்பூர்வமானது, எங்கள் அறிவியல் மதப்பூர்வமானது. நீங்கள் வெளியேற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் "  என்றும் கூறினர்.

இந்தியாவில் அறிவியலுக்கும் மதத்துக்கும் இடையேயான சிக்கலான உறவு இருபதாம் , இருபத்தியோராம் நூற்றாண்டுகளில் தொடர்ந்தது. மேலும் இந்துத்வம் (இந்துத்தன்மை) என்ற தேசியவாத இயக்கத்தின் தூண்டுதலின் கீழ் ஒரு கூர்மையான வலதுசாரித் திருப்பத்தை எடுத்துக் கொண்டது.
\r\nஇச் சொல்லை (இந்துத்வம்) முதன்முதலில்  வினாயக் தாமோதர் சவர்க்கர் என்ற தேசியவாதி 1923இல் அவரது  Hindutva: Who Is a Hindu?  என்ற துண்டுப்பிரசுரத்தில் பயன்படுத்தினார். இந்துத்துவ  உறுப்பினர்கள் தங்களை இந்துத்துவவாதிகள் ("இந்துத்துவாவை ஏற்றுக் கொள்பவர்கள்")  என  அழைத்துக்கொள்கின்றனர். ஆனால் அவர்களை  எளிமையாக  Hindutvats (bureaucrats போல)  அழைக்கலாம். தற்போது முஸ்லிம்கள் மற்றும் மகளிருக்கு எதிரான உணர்வுகள் கலந்த,  சனாதன தர்மத்தின் ஒரு  வகையான பத்தொன்பதாம் நூற்றாண்டின் சீர்திருத்த இந்து மதத்துக்குப் பெரிதும் கடன்பட்ட ஒரு துப்புரவாக்கப்பட்ட இந்துமதத்தை இவர்கள் முன்னெடுக்கின்றனர்.    
\r\nபிரிட்டிஷ் ஆட்சியில் விதைக்கப்பட்ட  கலவையான எதிர்ப்பின் விதைகள் ( நீட்சே இதை ressentiment  என்று அழைத்திருப்பார்)  1947 இல்  இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் செழித்தோங்கும் வாய்ப்பை அடைந்தன. 1976இல்  வி.எஸ். நய்பால், "மேற்கத்திய அறிவியலின் கண்டறிவுகளும் கண்டுபிடிப்புகளும் தங்கள் புனிதநூல்களில் அடங்கியுள்ளதாக வலியுறுத்தும் பல இந்துக்களின் சீற்றமுடைய செருக்கை " கண்டு அதிர்ச்சியுற்றார். 1985இல் வாரணாசியை (பிரிட்டிஷ் வழக்கில் பெனாரஸ்) சேர்ந்த ஒரு மனிதர், “பத்தொன்பதாம் நூற்றாண்டின்  இந்தியவியல் அறிஞரான  மாக்ஸ் முல்லர், பிற்பாடு ஜெர்மன் விஞ்ஞானிகளின்  அணுகுண்டுத் தயாரிப்பை எளிதாக்கிய பழங்கால வேதநூல் ஒன்றின் பகுதிகளைத் திருடியதாக” குற்றம்சாட்டினார். 

இந்தியாவின் மகத்தான முன்னேற்றம் குறித்த தேசிய பெருமிதம், மேற்குலகிலிருந்து தொழில்நுட்ப முன்னேற்றங்களை இரவல் பெற்றே  பெருமளவில் அடையப்பெற்றது என்ற உணர்தல் மேலோங்கியது.

இந்த அறிவியல் பொறாமையானது விஸ்வ இந்து பரிஷத்தின் கூட்டு பொதுச் செயலாளர் சுவாமி விக்யானானந்தின் ஒரு கருத்தில்  அருமையாக வெளிப்படுகிறது.  "இந்தியா" மற்றும் "இந்து" என்ற சொற்களின் ஆதாரமாக விளங்கும் சிந்து நதியைப்பற்றிக் கூறுகையில் அவர் "நான் உங்களுக்கு சொல்கிறேன், இண்டஸ்ட்ரி என்ற சொல்லின் ஆதாரம், இந்துக்கள் நாம்தான்.    நம் மிகவும் தொழில்மயப்பட்டிருந்தோம்... அதனால்தான் [பிரிட்டிஷார்] இந்த வார்த்தையைப் பயன்படுத்தினர்'' என்றார். மேலை  அறிவியலைப்  பற்றிய  பழைய பிரிட்டிஷ்  ஆட்சிக்கால அதிருப்தியின் எழுச்சிக்கு பின்னால் உள்ள சிந்தனையை மீரா நந்தா விளக்குகிறார்:
\r\n"இத்  தூய்மையற்ற, மாட்டிறைச்சி சாப்பிடும் பொருள்முதல் வாதிகள், நம் ஆன்மீக சுத்திகரிப்புகளில் குறைபாடுள்ள மக்கள், நாகரீகத்தின் மீதான தங்கள்  உரிமைகோரலில் நம்மால் மகிழ்ச்சியுடன்  இகழப்படுபவர்கள், இயற்கை அறிவில் நம்மில் சிறந்தோரை வென்றமை நமக்கு எரிச்சலூட்டுகிறது . . எனவே,  நாம் அறிவியலை பெரிதும் விரும்பிப் பின்தொடர்ந்து  'அறிவியல்  வல்லரசு' ஆவதற்காக  மாபெரும் ஆதாரங்களை முதலீடு செய்யும் அதேவேளையில்  ... அதன் 'பொருள்முதல்வாதம்', அதன் 'குறைப்புவாதம்' மற்றும் அதன் ஐரோப்பிய மையவாதம்' ஆகியவற்றைக் கண்டிக்கிறோம். மேற்கின்  பொருள்முதல்வாத மேதைகளின் விஞ்ஞானத்தை நாம் விரும்புகிறோம். எனினும் நம்  ஆன்மிக மேன்மை உணர்வை நாம் விட்டுவிட முடியாது..."

தீர்வு தெளிவானது: ஆன்மீகத்தில் (வேதங்களில், சில சமயங்களில் ராமாயணத்தில்)  உள்ள விஞ்ஞானத்தை கண்டுபிடிப்பது.

இராமாயணம்,  பேசும் குரங்குகள்கொண்ட ஒரு படை,  பத்து தலை அரக்கன்  இராவணனிடமிருந்து   தனது மனைவி சீதையைக்  காப்பாற்ற இந்தியாவிலிருந்து இலங்கைத்தீவுக்கு (தற்போதைய இலங்கை அல்ல) செல்ல  இராமனுக்கு ஒரு பாலம் (அ)  தரைப் பாலத்தைக் கட்டியதாகக் கூறுகிறது. Hindutvat-கள், அவ்வழியை, இந்தியா - இலங்கை இடையிலுள்ள கால்வாய்க்குள் நீண்டு  கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் கற்படிமங்களாக அடையாளம் காண்கின்றனர்.  இதுவே இராமர் பாலம்  என நம்பிய இந்துத்வ ஆதரவாளர்கள் செப்டம்பர் 2007 இல் போராட்டங்களில்  ஈடுபட்டு,  மிகவும் தேவையாக இருந்த  கப்பல் கால்வாய் ஒன்றை கட்டும் நோக்கிலான  பெரும் அரசுத்திட்டம் ஒன்றைத் தடுத்து  நிறுத்தினர். ஒரு அறிஞர் "சமகால அறிவியல், நய வஞ்சகமான முறையில் அப் பாதையை  அதன் உண்மையான வயதைவிட இளையதாக வரையறுத்தது" என்றார். மேலும் அவர் அப் பாதை  கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட நீரடி பாறைப்படிமத்திலிருந்து ஒரு  மாதிரிப் பாறையை கொண்டுவர ஏற்பாடு செய்த்தகக் கூறினார்: "பாறையின்  நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர், அது தண்ணீரில் மிதந்ததா (மிதந்தது) என சோதித்ததன் மூலம் அவர் தனது சொந்த ஆய்வுகளை மேற்கொண்டு  அந்த கார்பன் காலக்கணைப்பை தவறென நிறுவினார்". 
\r\nஒரு அறிஞர் "சமகால அறிவியல், நய வஞ்சகமான முறையில் அப் பாதையை  அதன் உண்மையான வயதைவிட இளையதாக வரையறுத்தது" என்றார். மேலும் அவர் அப் பாதை  கட்டப்பட்டதாகக் கூறப்பட்ட நீரடி பாறைப்படிமத்திலிருந்து ஒரு  மாதிரிப் பாறையை கொண்டுவர ஏற்பாடு செய்ததாகக்   கூறினார்: "பாறையின்  நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திய பின்னர், அது தண்ணீரில் மிதந்ததா (மிதந்தது) என சோதித்ததன் மூலம் அவர் தனது சொந்த ஆய்வுகளை மேற்கொண்டு  அந்த கார்பன் காலக் கணிப்பைத் தவறென நிறுவினார்". 
\r\n2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்து நரேந்திர மோடி பிரதமரான பின்பு ஏற்படுத்தப்பட்ட  கால ச்சூழ்நிலையில் தொன்மம்சார் அறிவியல் செழித்தோங்குகிறது.  இந்துத்வத்திற்கும் அதன் "நித்திய தர்மத்திற்கும்" அரசு காட்டும் விசுவாசம் இப்பொழுது வலுவான முஸ்லிம் விரோத செயற்பாடுகளோடு மட்டுமல்லாமல் இந்து மதம் மற்றும் அதன் வரலாறு, குறிப்பாக ஹிந்துத்துவத்தின் பிரகடனப்படுத்திய ஹிந்து வரலாற்றின் வளைந்த கட்டமைப்பை முரண்பட வைக்கும் ஒரு விதமான அடக்குமுறையுடன் இணைந்திருக்கிறது. 

கடந்த கால அறிவியல் நூல்களைக் காட்டிலும் மதநூல்களில்  அறிவியல் நம்பகத்தன்மையைத் தேடிக்கொண்டிருக்கும் தீய வழக்கத்தை இந்த ஆட்சி ஊக்குவிக்கிறது.

இப் பண்டைய  இந்து  அறிவியல்களைத்  தங்கள் விருப்பப்படி வளைப்பதற்காக மோடி அரசு  இப்போது யோகா மற்றும் ஆயுர்வேத அமைச்சகங்களை அமைத்துள்ளது. மேலும் மோடி, பல்வேறு அரசு முதன்மை மற்றும் இடைநிலைப் பள்ளிகளில்  கூடுதல் வாசிப்பு என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பாடப்புத்தகங்க ளுக்கு  (பண்டைய சாஸ்திரங்களுக்கான நவீன வாரிசுகள்) பல திருத்தங்களை அளித்துள்ளார்.பரவலாக வழங்கப்படும் 125 பக்கங்கள் கொண்ட தேஜோமே பாரத்  (பிரில்லியன்ட் இந்தியா) உள்ளிட்ட இப் புத்தகங்கள் பல, முதன்முதலில்   குஜராத்தில் 1999 இல் வெளியிடப்பட்டன ; குஜராத்தில் தான் முதலமைச்சராக இருந்தபோது [தினா நாத்] பாத்ராவின் நூல்களுக்கு மோடி முன்னுரைகளை   எழுதினார். இப்போது அந்நூல்களை  மறுபதிப்பு செய்து புதிய முன்னுரைகளை எழுதியுள்ளார்.
\r\nஇத்  திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள், இந்தியாவில் அறிவியல்  வரலாற்றைப் பற்றிய நூதனக் கூற்றுகளை உள்ளடக்கியுள்ளன. அவ்வப்போது  விசித்திரமான கால முரண்பாடுகளையும் (anachronisms)  உருவாக்குகின்றன. அவற்றுள் ஒன்று "பண்டைய இந்தியா அணுகுண்டு வைத்திருந்தது மட்டுமின்றி அதை அணுகக்கூடிய மக்களின் எண்ணிக்கையை கவனமாகக் கட்டுப்படுத்துவதன் மூலம் (அனேகமாக பிராமணர்களுக்கானதாக  மட்டும்) ஆயுதப் பரவல் தடுப்பையும் கடைப்பிடித்ததாகக்" கூறுகிறது. வேத இயற்பியல் மற்றும் வேத சரக் கோட்பாடு (Vedic string theory) பற்றிய நூல்களும் உள்ளன.  2015-இல் அறிவியல்-தொழில்நுட்ப அமைச்சகத்திலும் பூகோள அறிவியல் அமைச்சகத்திலும் பதவி வகித்த அப்போதைய  அமைச்சர் வெளிப்படையாக இவ்வாறு கூறினார்: "அரேபியர்களுக்கு வெகு முன்பே நாம் பீஜ்  கணித்-தை ('விதை எண்ணிக்கை' - இயற்கணிதத்துக்கான இந்தி சொல்) அறிந்திருந்தோம். எனினும் மிகவும் பெருந்தன்மையோடு அதை 
\r\n அல்ஜீப்ரா (அரபிச் சொல்லான அல்-ஜப்ர் அடிப்படையிலான இலத்தீன் சொல்) என்றழைக்கப்பட  அனுமதித்தோம்" என்றார். வேத  குவாண்டம் இயங்கியல் (Vedic quantum mechanics) மற்றும் பொதுச் சார்புக் கோட்பாடு (general relativity) குறித்தும் கூற்றுகள் புனையப்பட்டுள்ளன .

[Speaking Tiger பதிப்பகம் வெளியிட்டுள்ள Beyond Dharma: Dissent in the Ancient Indian Sciences of Sex and Politics என்ற வெண்டி டோனிகரின்  நூலிலிருந்து ஒப்புதலுடன் எடுக்கப்பட்டது.]
\r\n[நன்றி: Scroll.in]
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)