எமது வாழ்கையின் துணி

/files/detail1.png

எமது வாழ்கையின் துணி

  • 1
  • 0

 -Eric Herschthal

-தமிழில் V.கோபி 

எமது வாழ்கையின் துணி:

சுமார் பத்து வருடத்திற்கு முன்பு ஒரு வரலாற்று ஆய்வாளன் முதலாளித்துவத்தின் வளர்ச்சியைப் பற்றி ஆராய விரும்பினால் வரலாற்று துறையில் வேலை கிடைப்பது பெரும் பாடாகயிருக்கும்.இதுவரை ஆய்வாளர்கள் முதலாளித்துவத்தை பற்றி எழுதியதெல்லாம் உழைக்கும் மக்களின் கதைகளைக் கொண்ட தொழிலாள்ர் வரலாறே. இதற்கு எதிர்ப்பக்கமான மேல்தட்டு முதலாளிகளை யாருமே கண்டுகொள்ளவில்லை. முதலாளித்துவத்தை பயன்படுத்தி சிலர் வங்கியாளர்களாகவோ,பொருளாதார நிபுனர்களாகவோ அல்லது பெரும் முதலாளிகளாக( குறிப்பாக ஆண்டுரூ கார்னிஜ்,ரோக்சில்ட்ஸ்) கண்டுபிடிப்பாளர்களாக ( விட்னியின் பருத்தி அரவை ஆலை) ஆனார்கள். " முதலாளித்துவத்தின் வரலாறு " என்ற ஒன்று இருக்குமானால் அது தொழில் அதிபர்களை முதலீட்டாளர்களை புகழ்பாடுவதும்,தொழிற்சாலைகளின் திறனை போற்றும் கதைகளாகவே இருக்கும்.

முதலாளித்துவ வரலாற்றை பல காலமாக ஆய்வாளர்கள் பேசி வந்தாலும் 2008ல் வந்த பொருளாதர மந்தநிலை இந்த வரலாற்றின் மீது புதிய கவனத்தை பாய்ச்சியது.கல்லூரி பாடத்திட்டத்தில் கூட "முதலாளித்துவத்தின் வரலாறு" சேர்க்கப்பட்டது.ஆனால் உண்மையில் இதன் வரலாறு தான் என்ன? அதே பழைய தொழிலாளர் வரலாறுதானா? இதில் மேல்தட்டு வர்க்கத்தின் பங்கு என்ன? நாயகர்களா,வில்லன்களா,அல்லது வேறு ஏதாவதா? உண்மை என்னவென்றால் இங்கு யாருக்கும் முதலாளித்துவத்தின் வரலாற்றை பற்றி எதுவும் தெரியாது.இந்த சமயத்தில் தான் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் வரலாற்று பேராசிரியர் பெக்கர்ட் எழுதிய எம்ப்யர் ஆஃப் காட்டன்: எ குளோபல் ஹிஸ்டரி எனும் நூல் வெளிவந்துள்ளது.

அரசாங்கத்தின் உதவியில்லாமல் எப்படி சிறப்பாக செயல்பட்டது,எவ்வாறு அடிமைத்தனத்தை நீக்கியது போன்ற முதலாளித்துவத்தை பற்றி பல காலமாக நாம் நம்பிக்கொண்டிருந்த கட்டுக்கதையை இந்நூல் தகர்த்து எரிகிறது.பெக்கர்ட்டின் கூற்றுப்படி அடிமை முறையும் அரசாங்கமும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றின.ஆயுதம்,வரி விதிப்பு,முறைப்படுத்தப்பட்ட சந்தை போன்றவற்றின் மூலம் அரசாங்கம் உதவி புரிந்தது.

பெக்கர்ட் இந்த நூலின் மூலம் மேல்தட்டு வர்க்கத்தினரை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால் அவர்களின் சாயம் இப்போது வெளுக்க ஆரம்பித்துள்ளது.தங்களின் சுகபோக வாழ்க்கைக்கு,குறிப்பாக இன்று நாம் வாழும் முதலாளித்துவ உலகிற்காக பல்லாயிரக்கணகான மக்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளனர்.இந்த நூலில் மேல்தட்டு வர்க்கத்தின் செல்வத்திற்கு முக்கிய காரணமான பருத்தியை பற்றி விரிவாக கூறப்ப்ட்டுள்ளது.18ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை ஐரோப்பா மக்களுக்கு பருத்தி என்றால் அதிசிய பண்டம்.அதேசமயம் இந்தியா,ஜப்பான்,பெரு,எகிப்து போன்ற நாடுகளில் பருத்தி பெருவாரியாக விளைந்தது.துடிப்பான் உள்ளுர் சந்தையின் உதவியோடு அவர்களே பருத்தியை விளைவித்து,நெய்து,ஆடைகளை வடிவமைத்தார்கள்.இதை ஒரு குடும்ப தொழிலாளகவே நடத்து வந்தனர்.

பருத்தி கொஞ்சம் கொஞ்சமாக உலகின் மதிப்புமிக்க பொருளாக மாறத்தொடங்கியது.இதற்கு ஐரோப்பிய சாம்ராஜ்ஜியத்தின் எழுச்சி முக்கிய காரணியாக இருந்தது என்று பெக்கர்ட் கருதுகிறார். கொலம்பஸின் அமெரிக்க கண்டுபிடிப்பு,கிழக்கில் நடந்த மிளகு வியாபாரம் போன்றவை பூர்வீக அமெரிக்கர்களின் நிலத்தை கையகப்படுத்த உதவியது.இதன் காரணமாக 18ம் நூற்றாண்டில் பல ஆப்ரிக்க மக்கள் அடிமைகளாக ஆக்கப்பட்டு அகதிகளாயினர்.இந்த அடிமை சமூகம் விளைவித்த பொருளை வியாபாரப்படுத்தி புதிதாக ஒரு சமூகம் வளர ஆரம்பித்தது.இதனை ' வியாபார முதலாளித்துவம்' என்று வழக்கமாக கூறுவதை மறுத்து 'போர் முதலாளித்துவம்' என பெக்கர்ட் கூறுகிறார்.ஏனென்றால் இங்கு வன்முறை தான் பிரதானம்.வன்முறை இல்லையென்றால் தொழிற்புரட்சி நடைபெற்றிருக்காது என்பதே இந்த நூலில் பெக்கர்ட் கூற வரும் முக்கிய செய்தி.

தொழிற்புரட்சிக்கு ஏதாவது ஒரு மூதாதையர் இடம் இருக்குமென்றால் அது இங்கிலாந்தின் மான்செஸ்டர் தான்.அங்குதான் முதல் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது.பருத்தியின் வருகையால் பிரிட்டனில் பல கண்டுபிடிப்புகள் நடந்தன.முக்கியமாக முதலாளிகளின் கோரப்பசியைப் போக்குவதற்காக சாமுவேல் கிரேக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் இயந்திர பருத்தி ஆலை.சாமுவேலின் வெற்றியையும் ஆலை தொழிலாளர்களின் பரிதாப நிலையினையும் இணைத்து பெக்கர்ட் இந்த நூலில் நமக்கு வேறு ஒரு கோணத்தை காண்பிக்கிறார்.பெண்களும் குழந்தைகளும்தான் இந்த ஆலையின் பெரும் தொழிலாளர்கள்.ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர்.

19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பா நாடுகளில் பருத்தி ஆலைகள் பரவத்தொடங்கின.ஆனால் அவர்கள் பெரிதும் அமெரிக்க பருத்தியையே நம்பி இருந்தார்கள்.அதேசமயத்தில் வடக்கு அமெரிக்க நகரங்களில் பருத்தி ஆலைகள் வேகமாக வளர ஆரம்பித்தன.இது அமெரிக்காவின் தொழிற்புரட்சிக்கு மேலும் வித்திட்டது.இதனால் பல ஐரோப்பிய நாடுகளின் ஆலைகள் காலனி நாடுகளின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பின.இதன்காரணமாக விளைச்சலை அதிகரிக்க மக்கள் கொத்தடிமைகளாக ஆக்கப்பட்டனர்.ஆகவே அடிமைமுறையை முதலாளித்துவம் அழிக்கவில்லை மாறாக அதன்மூலம்தான் வளரத்தொடங்கியதாக பெக்கர்ட் கூறுகிறார்.

பின்பு ஏன் அமெரிக்க தொழில் அதிபர்கள் அடிமை முறை ஒழிந்துவிட்டதாக கூறுகிறார்கள்.இதற்கு இந்த நூல் கூறும் காரணம் நம்மை திருப்திபடுத்தவில்லை.அதாவது சில " முற்போக்கு முதலாளிகள்" பருத்தியை குறைவான விலைக்கு இந்தியா,எகிப்து போன்ற நாடுகளிடம் பெற்று அதன் மூலம் வரும் லாபத்தை பெரும் தொழில்களான( இரும்பு,தண்டவாளத்தடம்) போன்றவற்றில் முதலீடு செய்யலாம் என்றனர்.ஆனால் குடிமைப்போருக்கு முன்பு வரை உலக சந்தையில் பிரிட்டனால் நுழைய முடியாத நிலைமைதான் இருந்தது என்பதை பெக்கர்ட்டின் நூல் கவனத்தில் கொள்ளவில்லை.

பருத்தியின் மூலம் தொழிற்புரட்சி வேகமாக நடந்து வந்த காலத்தில் ஏன் பிரிட்டிஷ் அரசு அடிமை ஒழிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக இருந்தது என்பதை பெக்கர்ட் இந்த நூலில் கூற முயலவில்லை.

'முதலாளித்துவ வரலாற்றில்' குடிமைப்போர் எவ்வாறு திருப்புமுனையாக இருந்தது என்பதை நூலில் விரிவாக காணலாம்.குடிமைப்போர் காரணமாக அமெரிக்காவிலிருந்து வரும் பருத்தி தடைபட்டதால் பிரிட்டனின் கவனம் ஆசிய நாடுகளின் பக்கம் திரும்பியது.1853ம் ஆண்டே இந்தியாவை காலணி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தாலும் இதன்பிறகே இந்தியாவின் வளத்தை சுரணட ஆரம்பித்தது. முதற்கட்டமாக நிலத்திற்கு வரி விதித்தது.இதனால் இந்திய விவசாயிகள் பணப்பயிர்களான பருத்தியை விளைவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.பருத்தியின் விலை உலக சந்தையில் ஏறுமுகமாக இருக்கும்போது இங்கு இந்திய விவசாயிகள் தொடர் பஞ்சத்தால் செத்து மடிந்தனர்.

பிரிட்டனை பின்பற்றி பல ஐரோப்பா நாடுகளும் காலணி ஆதிக்கத்தை விரிவாக்கின.கொரியாவையும் சீனாவின் சில் பகுதிகளையும் ஜப்பான் தன் வசப்படுத்தியது.மத்திய கிழக்கு நாடுகளை ஓட்டமான் பேரரசு தன் கீழ் கொண்டுவந்தது.இப்படி பல நாடுகள் பருத்தி உற்பத்தியில் ஈடுபட்டதால் பிரிட்டனின் ஆலைகள் சரிவை சந்திதன.20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரிட்டன் தொழிலாளர் சீரமைப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தது.அதுவரை பருத்தி முதலாளிகளின் தோழனாக இருந்த அரசு அவர்களின் எதிரியாக மாறத்தொடங்கியது.

முதலாம் உலகப்போர் முடிவில் ஐரோப்பாவின் பொருளாதரத்தில் பருத்தியின் பங்கு குறையத் தொடங்கியது.அதேசமயம் மற்ற ஆசிய நாட்டின் வளர்ச்சிக்கு பருத்தி முக்கிய காரணியாக இருந்தது.இந்தியாவில் பருத்தி காலணி ஆதிக்கத்தின் சீரழிவாகவும் பின் காலனிய வளர்ச்சிக்கு உந்துகோலாகவும் பார்க்கப்பட்டது.1930 களில் இந்தியாவின் சிறிய மேல்தட்டு வர்க்கத்தினர் பருத்தி விளைவிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு பிரிட்டிஷ் அரசை எதிர்க்க ஆரம்பித்தனர்.முதலாளித்துவத்தின் மூலம் ஏழை பணக்காரன் முதலாளி தொழிலாளி என்ற வர்க்க பிரிவினைகள் வளரத்தொடங்கியதால் பருத்தி ஆலைகளை அரசுடைமை ஆக்க வேண்டும் என்ற போலியான குரல்கள் எழத்தொடங்கின.காந்தியும் கூட பருத்தி முதலாளிகளிடம் சில புரிதலோடு செயல்பட்டார்.நாட்டின் ஒற்றுமைக்காக மக்கள் முன் ராட்டையில் நூல் நூற்றார்.

இன்று சீனா பெரும் உற்பத்தி சந்தையாகி தான் விளைவித்த பருத்தியை டி-ஷர்ட்டாகவும் ஜீன்ஸ் ஆடையாகவும் விற்றுக்கொண்டிருக்கிறது.ஆனால் இந்த வளர்ச்சியெல்லாம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை பெக்கர்ட் நூலில் விரிவாக கூற முயலவில்லை.ஆனால் சீனா போன்ற கம்யுனிச கொள்கையை பின்பற்றும் நாடு, வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான தொழிலாளர்களை கொடுமை படுத்தி வருவதாக பெக்கர்ட் நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

அடிடாஸ்,வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்களின மூலம் தான் மேலை நாடுகள் இன்று பருத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.ஆனால் இப்போது என்ன விதிதியாசம் என்றால் இந்த நிறுவனங்கள் யாவும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதவை.மேலும் இந்த நிறுவனங்கள் பருத்தியை விளைவிக்கும் வளரும் நாடுகளையே தங்கள் வியாபாரத்திற்கு பெரிதும் நமிபியுள்ளன.

பெக்கர்ட் இந்த நூலில் அடிமைகள், தொழிலாளர்களின் பார்வையிலிருந்து எழுதியதாக சிலர் கூறுகின்றனர். நமக்கு தேவை புதிய வரலாறுகள்.முதலாளித்துவத்தின் மூலம் எவ்வாறு  ஏற்றத்தாழ்வுகள்,வன்முறை, செல்வம் எல்லாம் வளர்ந்தன என்பதை கூறும் வரலாறுகள் நமக்குத் தேவை. பெக்கர்ட்டின் இந்த நூல் முதலாளித்துவத்தின் வரலாற்றை முழுவதுமாக சொல்லவில்லை.ஆனால் இந்த நூல் ஒரு அற்புதமான தொடக்கமாக இருக்கும்.

Article link: http://www.slate.com/articles/arts/books/2014/12/empire_of_cotton_a_global_history_by_sven_beckert_is_a_great_history_of.html?wpsrc=sh_all_tab_fb_bot

\r\n

Leave Comments

Comments (0)