இலங்கை தமிழ் பாரம்பரியத்தை காக்கும் டிஜிட்டல் நூலகம்

/files/detail1.png

இலங்கை தமிழ் பாரம்பரியத்தை காக்கும் டிஜிட்டல் நூலகம்

  • 1
  • 0

 -ராதிகா ரமேஷ் தமிழில் V.கோபி

வரலாற்று நெடுகிலும், உலகம் முழுவதும் உள்ள பாரம்பரியச் சின்னங்கள் மீட்க முடியாத நிலைமைக்கு அழிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.சில அறிவு கேந்திரங்கள் கால மாற்றத்தினால் ஏற்படும் இயற்கை பேரழிகளாலும் போர்களாலும் அழிந்து வருகின்றன. 

1982ம் அண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது யாழ்ப்பானம் நூலகம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.பலரும் இதை இலங்கை தமிழர்களுக்கு மட்டுமேயான இழப்பாக கருதுகின்றனர்.ஆனால் உண்மையில் தீக்கரையாகிப்போன 97000 புத்தகங்களினால் இலங்கை ஒட்டுமொத்த ஆவணப்படுத்தப்பட்ட பாரம்பரிய செல்வங்களை இழந்து நிற்கிறது.

இந்த காரணத்தினாலேயே இது போன்ற இழப்பு இனி ஏற்படாமல் இருக்க  'நூலகம் அமைப்பு’  2010ம் ஆண்டு டிஜிட்டல் நூலகத்தை தொடங்க திட்டமிட்டது. இந்த டிஜிட்டல் நூலகம்,திறந்தவெளி முறையிலான இணைய தொடர்புடன் கூடிய தமிழ்

ஆவணங்கள்,நூல்கள்,ஓலைச்சுவடிகள்,கானொளிகள் மற்றும் புகைப்படங்களை கொண்டுள்ளன.சுருக்கமாக இதனை ஒரு மெய்நிகர் நூலகம் என கூறலாம்.இதன்மூலம் இலங்கை தமிழ் மக்களின் பாரம்பரியங்களை ஆவணப்படுத்தியும்,பாதுகாத்தும் வருகிறோம்” என டிஜிட்டல் நூலகத்தின் நிறுவனர்களில் ஒருவரான கோபிநாத் தில்லைநாதன் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “யாழ்ப்பான நூலகம் எரிக்கப்பட்டபோது பல அரிய பொருட்களான ஓலைச்சுவடிகளும்,140 வருட பத்திரிக்கை பதிப்பு தொகுதிகள், பல அறிஞர்கள்,ஆய்வாளர்கள்,கவிஞர்களின் கைப்பிரதிகள், எங்கும் கிடைக்காத அரிய நூல்களும் மீட்க முடியாத நிலைமைக்கு அழிந்து விட்டன.

இந்த அழிவை உணர்ந்து கொண்டதாலேயே உலகம் முழுவதிலும் உள்ள இலங்கை தமிழ் மக்கள் டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு பெரும் நிதியை உதவியாக வழங்கினர்.

நூலக செயல்திட்டம் 2005ம் ஆண்டு தொடங்கினாலும்,டிஜிட்டல் முறை அதற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்ட்து.தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வந்த சமயத்தில் 1998ம் ஆண்டு முதலே சிறு சிறு டிஜிட்டல் செயல் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறோம்.இதன் உச்சமாக இந்த டிஜிட்டல் நூலகத்தை கூறலாம்.

“இந்த நூலகம் பல பரிமாணங்களை கொண்டது.இங்கு இரு பிரிவாக பிரித்துள்ளோம். நூலகம் என்ற பிரிவில் எழுத்து வகையான அவணங்களையும் ஆவணகம் என்ற பிரிவில் ஆடியோ, வீடியோ, புகைப்படம் போன்ற கோப்புகளையும் சேகரித்து வைத்துள்ளோம். காலம் வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. இளைய தலைமுறையினர் வீடியோ போன்ற தளத்திற்கு மாறிவிட்ட்தால் எங்கள் நூலகத்திலும் பல் ஊடக வசதியை ஏற்படுத்தியுள்ளோம்” என டிஜிட்டல் நூலகத்தின் இயக்குனர்களில் ஒருவரான சேரன் சிவந்தமூர்த்தி கூருகிறார்.

இங்கு எழுத்து வடிவிலான 55000கும்(7000 நூல்களும் 35000 பத்திரிக்கையும்) மேற்பட்ட ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளோம். வீடியோ, ஆடியோ போண்ற கோப்புகள் 5000க்கும் மேற்பட்டவை உள்ளன. முக்கியமாக வாய்மொழியாக வரலாற்றை பதிவுசெய்யும் திட்டமாக பல வகைப்பட்ட தனி மனிதர்களின் வாழ்க்கை அனுபவங்களை சேகரிக்க தொடங்கியுள்ளோம்.இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், இசையமைப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் விவசாயிகளின் கதைகளை சேகரித்துள்ளோம்.மேலும் இஸ்லாமிய ஆவணத்தொகுப்பு, மலையகம் மக்களின் ஆவணத்தொகுப்பு மற்றும் பெண்கள் ஆவணத்தொகுப்பு ஆகியவற்றையும் சேகரித்து வருகிறோம்.

“நாங்கள் முதலில் ஆரம்பித்தபோது, ஒருவர் சத்தமாக வாசிப்பதை இன்னொருவர் பதிவேற்றம் செய்யும் முறையை பின்பற்றினோம். இது மிகவும் மெதுவாக இருந்ததால் எங்களால் ஒரு வருடத்தில் சில நூறு நூல்களையே டிஜிட்டல் முறையாக்க முடிந்தது.காலங்கள் மாற மாற தொழில்நுட்பங்களும் வேகமாக மாறியதால் இப்போது ஸ்கேனர் கருவியை கொண்டு நூல்களை டிஜிட்டல் முறையாக்கி வருகிறோம்.இப்போது மூன்று முறையை பின்பற்றி வருகிறோம்.சில அரிய நூலகளை பக்கம் பக்கமாகவும் சிலவற்றை மொத்தமாகவும் ஸ்கேன் செய்து வருகிறோம்.அதிக பாதிப்புக்குள்ளான ஓலைச்சுவடிகளை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்துகிறோம்.பிரிட்டிஷ் நூலகத்திற்கு இணையாக நாங்கள் இந்த நூலகத்தை டிஜிட்டல் மயமாக்கி வருகிறோம்” என தில்லைநாதன் கூறுகிறார்.

75 சதவிகித வேலைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றன.இந்த நூலக அமைப்பிற்கு கொலும்பு,மலையகம் மற்றும் அக்கரைப்பட்டு போன்ற இடங்களில் அலுவலகம் உள்ளது.மேலும் நார்வே, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போண்ற நாடுகளில் இருந்து புத்தகங்களும் நிதியும் வசூலிக்க அங்கு கிளை அலுவலகமும் உள்ளன.

இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ள யாழ்ப்பான நூலகம் பலருக்கும் அறிவு கேந்திரமாக திகழ்கிறது.இங்குள்ள டிஜிட்டல் நூலகத்தின் மூலம் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.அறிவுச்சொத்துகளை பேணிப் பாதுகாப்பது முக்கிய நோக்கமென்றாலும், டிஜிட்டல் நூலகத்தினால் ஆவணங்களை சேகரித்து வைப்பதற்கும் பகிர்வதற்கும் எளிமையாக உள்ளது.

“ இந்த டிஜிட்டல் நூலகம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அளித்த நிதியினாலும்,அவர்களின் உதவியாலும் கட்டி எழுப்ப பட்டதாகும்.தங்களின் பல வேலைகளுக்கு மத்தியிலும்,அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் இந்த டிஜிட்டல் நூலகத்தின் வேலைகளை செம்மையாக கவனித்து வந்தனர். ஊழியர்கள் மற்றும் இதர செலவுகளுக்கென்று வருடத்திற்கு 5 முதல் 7 மில்லியன் ரூபாய் செலவாகிறது.பல வெளிநாட்டு அமைப்புகள், நிறுவனங்கள், தொண்டுள்ளம் படைத்தோர் பண உதவி செய்து வருகின்றனர்.எங்கள் சாதனையை நினைத்து பெருமை அடைகிறோம்.ஆனாலும் இன்னும் பல மைல் தூரம் கடக்க வேண்டியுள்ளது” என கூறி சிரிக்கிறார்.

நன்றி https://roar.media/english/life/in-the-know/this-digital-library-is-preserving-sri-lankas-tamil-literary-heritage/

Leave Comments

Comments (0)