அறிவியல் ஆராய்ச்சி: கொல்லப்பட்ட 333 திமிங்கிலங்கள்!

/files/whales.jpg

அறிவியல் ஆராய்ச்சி: கொல்லப்பட்ட 333 திமிங்கிலங்கள்!

  • 10
  • 0

வித்யா 

பொதுவாக ஆராய்ச்சி என்றால் ஒன்று அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட உயிரினங்கள் கொல்லப்படுவது வழக்கம். ஆனால் ஜப்பானில் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் இந்த வருடம் மட்டும் சுமார் 333 திமிங்கிலங்களைக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டார்டிக் கடல் சுற்றுச்சூழலின் இயக்கவியல் குறித்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். இதற்காக திமிங்கிலங்களை வேட்டையாடி ‘உயிரியல் மாதிரி’ என்று அவர்கள் வகைப்படுத்தி இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியில் கடந்த கோடைக்காலத்தில் மட்டும் 333 Minke வகை அண்டார்டிகா திமிங்கிலங்கள் கொல்லப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையில் 120க்கும் மேற்பட்ட கர்ப்பிணி திமிங்கிலங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
\r\n 
\r\nமேலும் 181 பெண் திமிங்கிலங்கள், 53 முதிர்ச்சி அடையாத திமிங்கிலங்கள். 128 முதிர்ச்சியடைந்த திமிங்கிலங்கள் என மொத்தம் 333 திமிங்கிலங்களைக் கொன்றுள்ளனர். கொல்லப்பட்ட அனைத்துத் திமிங்கிலங்களின் உடலிலும் வெடி பொருள்களைச் செலுத்தி வெடிக்கவைத்துக் மிகவும் மோசமான முறையில் கொல்லப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆராய்ச்சி சூரிய உதயம் ஆரம்பிக்கும் 60 விநாடிக்கு முன்பு தொடங்கி சூரியன் மறையும் 60 விநாடிக்கு முன்பு முடிந்துவிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
\r\nஅறிவியல் ஆராய்ச்சிக்காக இவை கொல்லப்படுவதாக கூறப்பட்டாலும் ஜப்பானின் மீன் சந்தைகள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் திமிங்கிலங்களின் கறி விற்பனைக்குக் கிடைப்பதாக கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

உயிரினங்களை  வெடிவைத்துக் கொல்லப்படுவது சர்வதேச அளவில் கண்டனத்திற்கு உள்ளாகியிருந்தும் ஜப்பான் இந்த முறையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும், இந்த ஆராய்ச்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள்  தெரிவித்துள்ளனர்.
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)