ராஜஸ்தான் லக்ஷ்மன் சாகர் - பூமியில் ஓர் சொர்கம்

/files/detail1.png

ராஜஸ்தான் லக்ஷ்மன் சாகர் - பூமியில் ஓர் சொர்கம்

  • 0
  • 0

v. கோபி

எங்கள் பயணங்களில் பல அழகான இடங்களில் தங்கியுள்ளோம்.ஆனால் ஒவ்வொரு முழு பவுர்ணமி அன்றும் நாங்கள் தங்கும் லக்ஷ்மன் சாகர் எப்போதும் எங்களை வசியப்படுத்தக்கூடியது.இது ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டத்தில் உள்ளது.

19 நூற்றாண்டில் வேட்டை குடிலாக இருந்த லக்ஷ்மன் சாகர், இன்று விடுமுறையை கழிக்கும் உல்லாச குடிலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ராய்ப்பூரின் தாக்கூராக இருந்த லக்ஷ்மன் சிங்கால் கட்டப்பட்ட இக்குடில், அரச குடும்பங்களையும், ஆங்கிலேய தூதர்களையும் உபசரிக்கும் இடமாக இருந்துள்ளது. அதே விருந்தோம்பலை இன்றும் மாறாமல் இயற்கை அழகோடு கூடிய பரம்பரியத்தை பின்பற்றிவருகிறது லக்ஷமன் சாகர்.

நுனுக்கமன வேலைப்பாடுகளுடன், புலிகள் வருவதை பார்கும் இடமும், விலங்குகளை கவர மனிதனால் செயற்கையாக அமைக்கப்பட்ட அறுகளும், என எங்கும் லக்ஷ்மன் சாகரில் வரலாற்று தாக்கம் மிளிர்கிறது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தார்ப்போல் ராஜஸ்தான் பானியிலான கட்டிட வடிவமைப்புகளுடன் மிக கவனமாக 12 குடில்களையும் வசந்த மற்றும் ரேவதி காமத் அமைத்து கொடுத்துள்ளனர்.
3 ஏக்கரில் மலைப்பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மன் சாகர், நங்கு வசதியான 12 தனிமையான மண் மற்றும் கற்களான குடில்களை கொண்டுள்ளது. இரு பிரிவாக பிரிக்கப்பட்டு,  ஆற்றின் இரு கரையிலும் ஆறு ஆரு குடிலாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு குடிலிலும் ஆற்றைப் பார்க்கும் வகையில் நீச்சல் குளமும் உள்ளது.

அனைத்து அறைகளும் மலைகளை நோக்கியவாறு உள்ளன.   இங்குள்ள நாற்காலிகளும், மேசை விரிப்புகளும், படுகை விரிப்புகளும் மற்ற அறை வேலைப்பாடுகளும் உள்ளூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் கிடைக்கும் பொருளைக்கொண்டே செய்யப்பட்டுள்ளன.
லக்ஷ்மன் சாகரில் பரிமாறப்படும் உணவு, துரித உணவு கலாச்சாரத்திற்கு மாறாக மெதுவாக சமைக்கும் முறையை கொண்டது. இங்கு பாரம்பரிய ராஜஸ்தான் உணவுகள் பரிமாறப்படும். அக்காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக கட்டிய சனானா மற்றும் மர்தானா அறைகளில் தற்போது உணவு பரிமாறப்படுகிறது. நமக்கு தேவையெனில் நமது குடிலுக்கே உணவை கொண்டு வரச் சொல்லாம். இரவு நேரங்களில் ஆற்றின் கரையோரம் இரவு நேர உணவு பரிமாறப்படும்.

லக்ஷ்மன் சாகரில் உள்ளூர் மதுவகைகளை சுவைத்து பார்க்கலாம். நேரடியாக சமையலில் ஈடுபடலாம், ஆடு மேய்க்கலாம், காய்கறி பயிரிடலாம் என இங்கு வரும் விருந்தாளிகளை ஆர்வத்தோடு பங்கேற்று என்றும் மறக்காத பல சுவையான நினைவுகளை பெறலாம்.
நீங்கள் எளிமை விரும்பியாக இருந்தால், அருமையான அணைக்கட்டிலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம்.  அல்லது ஒரே பாறையில் வெட்டப்பட்ட நீச்சல் குளத்தில் நீராடலாம். நிச்சியமாக லக்ஷ்மன் சாகர் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது.
லக்ஷ்மன் சாகரை வசிப்பதற்கான சரியான காலம்.

நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை செல்வதற்கு சரியான நேரம். குளிர்ச்சியான இரவு நேரம் இன்னும் அதிகமாக உங்களை வசீகரப்படுத்தும். கோடை காலமான மே,  ஜூன்,  ஜூலை மதங்களில் இங்கு செல்வதற்கு அனுமதி இல்லை.
யாரெல்லாம் இங்கு செல்ல்லாம்:

நிச்சியமாக இது தேனிலவு கொண்டாடும் இளம் ஜோடிகள் செல்ல வேண்டிய இடம். அமைதியான அரவள்ளி மலைதொடர்களுக்கு நடுவே, தனிமையான குடில்களில் உங்கள் காதல் லீலையில் ஈடுபடுங்கள்.

செலவுகள்: குடிலுக்கு 12000 எப்படி செல்வது: ராஜஸ்தானின் மார்வார் மற்றும் மீவார் பகுதியின் மத்தியில் லக்ஷ்மன் சாகர் அமைந்துளது. பாலியிலிருந்து ஜோத்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 10கிமீ தொலைவில் உள்ளது.
இங்கிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் ஜோத்பூர் விமான நிலையம் உள்ளது.மேலும் அருகிலேயே ஹரிபூர் ரயில் நிலையம் உள்ளது.

முகவரி:

லக்ஷ்மன் சாகர்
ராய்ப்பூர் சாலை, ஹரிபூர் ரயில் நிலையம் அருகில்,
பாலி மாவட்டம், ராஜஸ்தான்-306304

நன்றி: https://www.tripoto.com/trip/lakshman-sagar-resort-pali-rajasthan-itinerary-luxury

Leave Comments

Comments (0)