பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சனையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை!

/files/detail1.png

பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சனையை தீர்க்க அமைதி பேச்சுவார்த்தை!

  • 0
  • 0

-சண்முக வசந்தன்

பெரியகுளம் அருகே பொம்மிநாயக்கன்பட்டி பிரச்சனை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகளும், இசுலாமிய அமைப்புகளும் பிரச்சனை தீர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் பெரியகுளம் INTJ பள்ளியில் நேற்று(07-05-2018) மதியம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இருதரப்பினர் அமைதிக்கான முயற்சியிலும், இருதரப்பினர்க்கும் உள்ளார்ந்த பிரச்சனையை நாமாக பேசி தீர்த்துக் கொள்வது என்றும், நம்மை பிரித்தால நினைக்கும் தீய காவி சக்திகளுக்கு இடம் தறாமல் நாம் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து எதிர் காலத்திலும் பிரச்சனைகள் ஏற்படாத வகையிலும் அமைதிக்குழு அமைத்து முடிவு எடுக்கப் பட்டது.

மேலும் இக்குழு மாவட்ட ஆட்சியர், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பத்திரிகையாளர்களையும் சந்தித்து இரு தரப்பினரும் ஒற்றுமையாக உள்ளோம் என்று சொல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

இசுலாமிய இயக்க மாநிலத் தலைவர்கள் திரு.ஷெரீப், SDPI பார்க்கர், இந்திய தவ்ஹித் பொதுச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் தேனி மாவட்ட ஜமாத் கூட்டமைப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், மோ.எல்லாளன், இரா.தமிழ்வாணன், ப.நாகரத்தினம், ஜெ.ரபீக், கா.தமிழன், வழக்கறிஞர் சிவனேசன், TNSTC ஹக்கீம், கருப்பணன், சுசி.தமிழ்ப்பாண்டி, ஆண்டவர், மரக்கடை செல்வரசு, அன்பு வடிவேல், சுசி மணிவாசகம், மது, செல்லத்தம்பி, கண்ணம்மா முருகன், வீர பிச்சை, ஜாபர்சேட், ஜோதி முருகன், அக்பர் பாட்சா, சையது இப்ராஹிம், மணிபாரதி, ராஜிவ் காந்தி உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

நன்றி :  இளையராஜா சே

\r\n

Leave Comments

Comments (0)