குஜராத்தில் தற்போது ஒரே ஒரு ஆண் கானமயில் (Great Indian Bustard) மட்டுமே உள்ளது

/files/detail1.png

குஜராத்தில் தற்போது ஒரே ஒரு ஆண் கானமயில் (Great Indian Bustard) மட்டுமே உள்ளது

  • 7
  • 0

-தமிழில் V.கோபி 

குஜராத்தில் தற்போது ஒரே ஒரு ஆண் கானமயில் (Great Indian Bustard) மட்டுமே உள்ளதாகவும் அதுவும் குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் இருப்பதாகவும் இந்திய வனவிலங்கு நிறுவனம் (WWI) மற்றும் பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (BNHS) நிபுணர்கள் கூறியுள்ளனர். இதற்கு அரசாங்கம் மற்றும் வனத்துறையின் கையாளாகத்தனமும் அலட்சியமுமே காரணம் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.

“கடந்த சில வருடமாக இனப்பெருக்கத்துக்குரிய எந்த ஆண் பறவையும் கட்ச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்படவில்லை. ஏனென்றால் இங்கு மட்டுமே கானமயில் வசிக்ககூடியது” என்கிறார் விஞ்ஞானி சுரிர்தா தத்தா.

அப்பகுதியில் சில பெண் பறவைகளும் ஒரு ஆண் பறவையும் மட்டுமே இருப்பதாக உறுதிபடுத்துகிறார் பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் மூத்த விஞ்ஞானி ஆசாத் ரமானி

கட்ச் பகுதியில் கானமயிலின் எண்ணிக்கை குறைந்ததற்கு இங்கு பதித்துள்ள மின்சார கம்பிகளே முக்கிய காரணம் என்று கூறும் தத்தா, “சுதந்திரத்திற்குப் பிறகு விவசாயத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் பல பறவையினங்கள் கொல்லப்பட்டன. அதன்பிறகு மின்சார கம்பிகளால் மற்ற பறவைகளும் அழியத்தொடங்கின. இங்குள்ள காற்றாலைகளும், மின்சார கம்பிகளும் சுஸ்லான் நிறுவனத்திற்கும் குஜராத் அரசாங்கத்திற்கும் சொந்தமானதாகும். மின்சார கம்பிகளில் அடிபட்டு ஆண், பெண் என இரு கானமயில்களும் இறந்தாலும், அளவில் பெரியதகவும், கணமாகவும், மெதுவாகவும் பறப்பதால் ஆண் கானமயிலே அதிகமாக இறக்கிறது.

15 வருடங்களுக்கு முன்பு இப்பகுதியில் 11 ஆண் கானமயில் இருந்ததாக கூறும் ரமானி, இதை நிச்சியம் காப்பாற்றி இருக்கலாம் என்கிறார்.
ஆனால் இப்பறவையை பேணி பதுகாப்பதற்கு தற்போதைக்கு முறையான வழிமுறைகள் எதுவும் இல்லை என கூறும் தத்தா, “வளர் பருவத்தில் உள்ள பறவையை அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்யும் திட்டம் செயல்பட இன்னும் ஒரு வருடம் ஆகும். அதுவரையில் இருக்கும் இந்த ஒரு பறவையும் மின்சார கம்பிகளில் அடிபடாமல் முழுமையாக வளரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்”.

மேலும் எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பெண் கானமயில்களும் வேகமாக அழிந்து வருவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள்.

நன்றி  https://scroll.in/latest/887280/truck-operators-go-on-indefinite-nationwide-strike-demand-reduction-in-diesel-prices-and-toll-fees

Leave Comments

Comments (0)