இந்தியாவின் ஜாதி எதிர்ப்பு வரலாற்றில் ஒலித்த தலித் ஷகிர்களின் கவிதைகள்

/files/detail1.png

இந்தியாவின் ஜாதி எதிர்ப்பு வரலாற்றில் ஒலித்த தலித் ஷகிர்களின் கவிதைகள்

  • 9
  • 0

-யோகேஷ் மைத்ரி , V.கோபி 


\r\nஒடுக்கப்பட்டவர்கள் வசிக்கும் பல பகுதிகளில் அம்பேத்கரின் பிறந்த நாள் அல்லது இறப்பு நாளின்போது வயதானவர்கள் சேர்ந்து பஜன்களை போல் ஒன்றை இரவு முழுவதும் தொடர்ந்து பாடுவார்கள்.அவர்களின் ஆற்றல் நம்மை வசியப்படுத்தக்கூடியது.அவர்களின் பாடல்களில் அடிக்கடி பாபாசாகேப்பும் புத்தாவும் திரும்ப திரும்ப வருமாறு அமைத்து பாடுவார்கள். தங்கள் பாடல்களில் அம்பேத்கர் ஜாதி அமைப்பிற்கு எதிராக எப்படி போராடினார், ஏன் புத்த மதத்தை தழுவினார் என கதைகளாக இரவு முழுவதும் பாடுவார்கள்.

ஆனால் நிலைமை எப்போதும் இப்படி இருப்பதில்லை. புத்த மதத்தை தழுவுவதற்கு முன்னர் மஹர் ஜாதியினர் மகராஷ்டிராவில் ஒடுக்கப்பட்டவர்களிலும் கீழானவர்களாக பார்க்கப்பட்டனர். அவர்களின் கோபத்தை வெளிகாட்டுவதற்கு கூட பொது இடங்களில் மறுக்கப்பட்டது. 1837ம் ஆண்டு ஜோதிர் பூலேவின் சத்யஷோதக் ஜல்சாவின் வருகை முதல் திருப்புமுனையாக அமைந்தது. இவை வழக்கமான தெரு நாடக வடிவை கொண்டிருந்தாலும் ஷகிர்களின் கவிதைகளால் சீர்திருத்த கருத்து மேலோங்கியிருந்தது. அடுத்த திருப்புமுனை 1927ம் ஆண்டு அம்பேத்கரின் ஜாதி எதிர்ப்பு இயக்கத்தினால் ஏற்பட்டது. இந்த சமயத்தில் தான் அம்பேத்கர்ய ஜல்சா என்ற வடிவம் பிறந்தது.

எந்த வளமும் இன்றி வளர்ந்த அம்பேத்கர்ய ஜல்சாவும் சத்யஷோதக்கும், நவீன மகராஷ்டிரத்தின் இசை உலகில் முதன்முறையாக ஒடுக்கப்பட்டவர்களின் குரலை ஒலிக்கச் செய்தது.பெரும்பாலும் தலித் மக்களிடமே ஷகிர்கள் நிகழ்ச்சிகள் நடத்தினாலும்,அவர்கள் உருவாக்கிய கலாச்சாரம் இன்றும் சீற்றமுடனே உள்ளது. இதற்கு காரணம் ஷகிர்கள் தாங்கள் பாடும் பாடல்களை அவர்களே சொந்தமாக எழுதுகிறார்கள். தங்களது பாடல்களுக்கு அம்பேத்கரின் எழுத்துகளே பெரிய உந்துசக்தி என கூறும் இவர்கள் தங்கள் வரலாற்றை தாங்கள் எழுதாவிட்டால் வரலாற்றை திரித்துவிடுவார்கள் என்பதை நன்றாக உணர்ந்திருக்கிறார்கள்.

இந்தியாவின் ஜாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு தங்கள் பாடல்கள் மூலமாக ஷகிர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள். ஷகிர்களின் பாடல்கள் நடைமுறை வாழ்க்ககையை மட்டும் கூறாமல் கடவுள் இருப்பை பற்றியும் கேள்வி எழுப்புகிறது.

ஜோதிரா பூலேவோடு ஜாதி எதிர்ப்பு இயக்கத்தில் செயல்பட்ட எழுத்தாளரும் கவிஞருமான கோபால் பாபா வலங்கர் மகராஷ்டியத்தில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் நிலைமையை தனது பாடல்கள் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முறையிடுகிறார்.ஆனால் 1927ம் ஆண்டு அம்பேத்கர் தொடங்கிய மஹத் சத்யாகிரகா மூலமே ஷகிரி செழித்தோங்கியது.ஷகிரி என்பது நூற்றாண்டு காலமாக நிகழத்தப்பட்டு வரும் கதைகளை பாடலாக பாடும் நிகழ்ச்சி.

“மகாத்மா பூலேவின் சிந்தனைகளையும் சத்யஷோதக் இயக்கத்தையும் வெளிப்படுத்தவே சத்யஷோதகி ஜல்சா தொடங்கப்பட்டது, ஆதுபோலவே ஒடுக்கப்பட்ட மக்களிடம் அம்பேத்கர் சிந்தனைகளை கொண்டு செல்லவே அம்பேத்கர்ய ஜல்சா தொடங்கப்பட்டது” என அம்பேத்கர்ய ஜல்சாவின் முன்னோடியும் ஷகிர் பாடகருமான பீமாராவ் கர்தக் கூறுகிறார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் போதிய கல்வி அறிவு பெறாத காலத்திலேயே ஷகிர்கள் தங்களின் பாடல்கள் மூலமாக அம்மக்களிடம் ஜாதி எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
\r\nபீமாராவ் கர்தக் பாடல் ஒன்று….

“இந்நேரத்தில் ஒரு மனிதனாக நமது உரிமையை வென்றெடுக்க வேண்டும்
\r\nஉன்னை ஒடுக்கும் மரபை உடைத்தெறி
\r\nமகராகியை விட்டு வெளியேறு
\r\nசகோதரனே! சத்யாகிரகத்திற்கு போ.”

இதற்குப்பின் பல ஷகிர்கள் தங்களின் இசையின் மூலமாக ஜாதி எதிர்ப்பு இயக்கத்தை வலுப்படுத்தினார்கள். தனது வாழ்நாள் முழுதும் கம்யுனிஸ்ட்டாக இருந்த அன்னபாவு சதே, அங்குள்ள பிராமணர்கள் ஜாதி பிரச்சனைக்கு போதிய கவனம் செலுத்தாததால் அங்கிருந்து வெளியேறி ஜாதி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாக எழுத தொடங்கினார். தனது புகழ்பெற்ற பகீரா நாவலை அம்பேத்கருக்கு அர்ப்பணித்தார்.

1927ம் ஆண்டிலிருந்து மகராஷ்டிராவில் பல புகழ்பெற்ற ஷகிர்கள் வந்துள்ளனர்.அவர்களில் பீமாரவ் கர்தக்,வாமனாடா கர்தக்,லோக்ஷகிர் அன்னபாவு சதே,ஷகிர் சம்பாஜி பகத் போன்றோர்கள் முக்கியமானவர்கள்.இவர்கள் தங்கள் வாழ்க்கையை அம்பேதருக்கும் ஜாதி எதிர்ப்பு இயக்கத்துக்கும் அர்ப்பணித்துள்ளனர்.
\r\nவாமனாடா கர்தக்கின் புகழ்பெற்ற ஷகிர்களில் ஒன்று….

“நாங்கள் புயலிலே ஒரு தீபம்,புயலிலே ஒரு தீபம்
\r\nசூரியனோ மழையோ புயல்காற்றோ எங்களை ஒன்றும் செய்துவிடாது”

இவர்களின் பாடல்கள் அனைத்தும் எளிமையாகவும் அதே சமயத்தில் வலிமையாகவும் உள்ளது.பிராமன கற்பனைகள் மூலம் தடுத்தாலும் இவர்களின் பாடல்கள் பெருவாரியான மக்களிடம் போய் சேரந்துள்ளது.மகராஷ்டிரா மக்களிடம் இவர்கள் எழுப்பிய தாக்கம் அளவிடமுடியாது.

“இனி நான் சொல்ல என்ன இருக்கிறது.மவாஷி ஜல்சாவின் மூலம் எல்லாவற்றையும் பாடிவிட்டார்.கர்தக்கின் ஒரு ஜல்சா,என் பத்து மாநாட்டிற்கு சமமானது” என பீமாராவ் கர்தக் பாடிய ஜல்சாவை கேட்டபிறகு அம்பேத்கர் கூறிய வார்த்தைகள் இவை.
\r\n link https://scroll.in/magazine/878456/in-the-verses-of-dalit-shahirs-you-can-hear-the-history-of-indias-anti-caste-movement

\r\n

Leave Comments

Comments (0)