சாதிய கொடுமையின் அடுத்த பரிமாணம் - அருந்ததிய இளைஞர் மீது சிறுநீர் பீய்ச்சி தாக்குதல்

/files/detail1.png

சாதிய கொடுமையின் அடுத்த பரிமாணம் - அருந்ததிய இளைஞர் மீது சிறுநீர் பீய்ச்சி தாக்குதல்

  • 4
  • 0

-சண்முக வசந்தன்

திருச்சி மாவட்டம், சிறுகனூர் எனும் கிராமத்தில் அருந்ததிய இளைஞர் மீது சிறுநீரை பீய்ச்சியடித்தும், கொடூரமாக தாக்கியும் சாதிய கொடுமையை அரங்கேற்றியிருக்கிறார்கள். இந்த சம்பவம் தொடர்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

"மேற்கண்ட சம்பவம் கடந்த 28.4.2018 அன்று இரவு 10 மணிக்கு, சிறுகனூர் வி.ஏ.ஓ., அலுவலகம் முன்பு, சாதி வெறி பிடித்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சமூக விரோதிகளால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

வியாபார போட்டி, பண தகராறு ஆகிய பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளலாம் என கூறி அழைத்த விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் அன்பு செல்லம் மற்றும் ரவி, இளையராஜா, ஆனந்தத், ரமேஷ் ஆகியோர் அருந்ததியர் இளைஞர் துரைராஜை அழைத்து இரவு 10 மணி முதல் காலை 4 வரை அடித்து துன்புறுத்தி உள்ளனர்.

மேலும், துரைராஜ் தம்பி சரவணனையும் அழைத்து சாதி பெயர் சொல்லி இழிவாக பேசி, அடித்துள்ளனர்.

நீண்ட நேர அடித்து துன்புறுத்திய பிறகு, மயக்கமடைந்த நிலையில் இருந்த துரைராஜ் தண்ணீர் கேட்டுள்ளார். அப்போது, உனக்கு எதுக்காடா தண்ணீ, என் சிறுநீர குடி என வாயில் சிறுநீரை அடித்துள்ளனர்.

இச்சம்பவங்கள் காவல் நிலையம் அமைந்துள்ள அரை கிலோ மீட்டர் தொலைவில் நடந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

சாதி ஒழிப்பு போராளிகள், சமூக ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுகிறோம்" என்று 'அருந்ததியர் கல்வியாளர்கள் செயல் வட்டம்' தகவல் வெளியிட்டிருக்கிறது.

சாதிய அடுக்குகளில் ஒடுக்கப்பட்டிருக்கும் சமூகத்தினரை அவர்களைவிட மேல் நிலையில் இருப்பதாக கருதிக்கொண்டு துன்புறுத்தும் போக்கு, இந்த கட்டமைப்பை ஏற்கும் அத்தனை பிரிவினருக்கும் இருக்கிறது என்பதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. பார்ப்பனியத்தின் ஆதிக்கம் நேரடியாக இல்லாத போதிலும், சாதிய பிரிவுகளை ஏற்றுக்கொள்பவர்களிடம் பார்ப்பனிய சிந்தனை இயல்பாகவே மேலெழுகிறது. 

ஆதிக்க நிலையில் இருப்பவர்களால் ஒடுக்குறைகளையும், வன்கொடுமைகளை நன்கு அறிந்த மற்றொரு சாதியினராலேயே இவ்வாறான கொடூரங்கள் நிகழ்த்தப்படுகிறபொழுது, தலித்தியத்தின் அரசியலை இன்னும் வேகமாக வெகுமக்களிடம் கொண்டுசெல்ல வேண்டுமென்பது தெளிவாகிறது. இளைஞர்கள் சாதிய ரீதியாக தாக்கப்பட்டதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியதும் இந்த தளத்தில் மிகவும் அவசியம்.
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)