என் கதை : இந்திய ரயில் பயணங்கள் என் போன்ற பெண்களுக்கு தரும் பரிசு!

/files/detail1.png

என் கதை : இந்திய ரயில் பயணங்கள் என் போன்ற பெண்களுக்கு தரும் பரிசு!

  • 3
  • 0

 

-ஆயுஷி அகர்வால் 

அகமதாபாத்திலிருந்து டெல்லி செல்வதற்காக நேற்று இரவு நேர ரயிலில் பயனம் செய்தேன். எனக்கு கீழ் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த்து. எனது இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்ததும் எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. எனக்கு மேல் உள்ள இருக்கை, அருகில் உள்ள இருக்கை, எதிர்ப்புறம் உள்ள இருக்கை என அனைத்திலும் ஆண்களே இருந்தனர். இது எனக்கு அசௌகர்யமாக இருந்தாலும் பயத்தை வெளிகாட்ட கூடாது என முடிவு செய்தேன். விரைவிலேயே தூங்கி விட்டேன்.

நடு இரவில் எனக்கு திடீரென்று முழிப்பு தட்டியது. என்னவென்று பார்த்தால், என் இருக்கைக்கு மேல் இருந்த ஆண் பயனி ஒருவர்—வயது 30 வயதிற்குள்—என் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது கையை என் முழங்காலுக்கு மேல் வைத்திருப்பதாக எனக்கு தோன்றியது. “ஒருவேளை அவரது கை தவறுதலாக பட்டிருக்கும்”, “ஏதும் தவறாக செய்திருக்கமாட்டார்” இப்படித்தான எனக்கு முதலில் தோன்றியது. நான் மெதுவாக அவர் என்ன செய்கிறார் என பார்த்தேன். தனது மொபைல் போனில் ஏதோ ஒன்றை பார்த்து கொண்டிருந்தார். ஏதோ தவறுதலாக செய்திருப்பார் என நான் நினைத்துகொண்டேன். ஆனால் அடுத்த நொடி, அவரது கை என் தொடை பகுதியை தொட்டது. இனி யோசிக்க ஒன்றுமில்லை என முடிவு செய்து, மிகவும் கோபத்தோடு “என்ன செய்கிறீர்கள்?” என கேட்டேன். அவர் உடனடியாக “என்னை மன்னித்துவிடுங்கள்” என்று கூறி சென்றுவிட்டார்.
அவரை மன்னித்து விட்டுவிடலாமா? அல்லது வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்போமா? இப்படியே அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு யோசித்து கொண்டிருந்தேன். இதற்கு முன்னர் பல தடவை எனக்கு நடந்தபோதும், என் தோழிகளுக்கு நடந்தவற்றையும் நினைத்து பார்த்தேன். எனக்கு தொல்லை கொடுத்தவர்களை காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லாமல் இருந்ததை நினைத்து பல தடவை வருந்தியுள்ளேன்.

உடனடியாக டிக்கெட் பரிசோதகரை தேட ஆரம்பித்தேன். நான் கூறுவதை பொறுமையாக கேட்டவர், “இதை அப்போதே ஏன் என்னிடம் சொல்லவில்லை? அவரை கன்னத்தில் அறைந்திருக்க வேண்டாமா? இபோது என்ன செய்ய?” என்றார். அப்போது. ரயிலில் ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க எப்போதும் காவலர்கள் இருப்பார்கள் என எனது தந்தை முன்னர் கூறியது நியாபகம் வந்தது. உடனடியாக போலீசாரை அழையுங்கள் என டிக்கெட் பரிசோதகரிடம் கூறினேன்.

காவலர்கள் எனக்கு தொல்லை ஏற்படுத்தியவரை எழுப்பினார்கள். “எப்படி எனது தொடையை தொட்டீர்கள் என இப்போது கூறுங்கள்” என்றேன் அவரிடம். தூக்க கலக்கத்தில் அவர் மீது தெரியாமல் கை பட்டுவிட்டது என்று மன்னிப்பு கேட்கும் விதமாக கூறினார். அவர் பொய் சொல்கிறார் என தெரிந்ததும், இது சம்மந்தமாக வழக்கு பதிவி செய்ய விரும்புவதாக போலீசாரிடம் தெரிவித்தேன்.

இதை கேட்டதும் அவர், “நான் ஏற்கனவே திருமணம் ஆனவன்” என்றும், எனது மனைவியின் புகைப்படத்தை வேண்டுமென்றால் காட்டுவதாகவும்”, “நான் இதுவரை காவல் நிலையத்திற்குச் சென்றதேயில்லை” என என்னிடம் கெஞ்சி கொண்டிருந்தார். அவரது கெஞ்சல் எனது கோபத்தை குறைத்ததோடு குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதுபோன்ற உணர்வே என்னை (பல பெண்களுக்கும்) இதற்குமுன்னர் வழக்கு பதியவிடாமல் தடுத்தது. ஆனால் இந்த முறை என்ன நடந்தாலும் பரவாயில்லை, எடுத்த முடிவில் உறுதியாக இருபோம் என முடிவு செய்தேன். இந்த சமயத்தில் மற்ற பயணிகளும் என்னை வற்புறுத்த தொடங்கினர்.

டெல்லியை அடைந்ததும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்காக என்னையும் அழைத்தனர். இதற்காக இரண்டு மணி நேர காத்திருந்த என்னிடம், வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு காவலர்களே என்னிடம் முறையிட்டனர். இதற்கிடையில் தொல்லை கொடுத்தவரின் குடும்பமும் அங்கு வந்து வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு எனக்கு அழுத்தம் கொடுத்தனர். என்னை அவர்கள் விடாமல் துரத்தி காரில் ஏற விடாமல் தடுத்தனர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, முதல் தகவல் அறிக்கையை என்னிடம் கொண்டு வந்த போலீசார், எனது வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்தில் ஒவ்வொரு அறையாக கூட்டிச்சென்றனர். இந்த நடைமுறை முடிய இரண்டு மணி நேரம் ஆனது. 

இப்படிதான் நானும் எனது தோழிகளும் பல முறை பயத்தினாலும், தன்னம்பிகை இன்றியும் அமைதியாக இருந்துவிட்டோம். ஆனால் இந்த முறை நான் நடந்து கொண்டதை நினைத்து எனக்கே மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் உள்ளது. நான் கூறிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான், பெண்களான நாம் ரயிலில் பயணம் செய்ய –அது இரவு நேரமோ காலை நேரமோ, தனியாகவோ -- நமக்கு முழு உரிமை உள்ளது. இப்படி ஒரு சம்பவம் உங்களுக்கு நடந்தால், எளிதாக விட்டு விடாதீர்கள். ரயிலில் எப்போதும் காவலர்கள் இருப்பார்கள். அவர்களிடம் உடனடியாக தெரிவியுங்கள். “இனிமேல் ஒருபோதும் இதுபோல் நடக்ககூடாது. மீறி நடந்தால், நாம் அவர்களை விட்டு விடக்கூடாது. #Iwillnotletitgo”.
 

நன்றி  : https://thelogicalindian.com/my-story/my-story-ayushi-agarwal/

Leave Comments

Comments (0)