இந்தியாவில் ஆபத்தான 11 இடங்கள்

/files/detail1.png

இந்தியாவில் ஆபத்தான 11 இடங்கள்

  • 3
  • 0

இந்தியாவின் 11 ஆபத்தான இடங்கள்

இந்தியாவிற்குள் பயனம் செய்ய நினைத்ததும் அதன் வண்ணமயமான கலாச்சாரமும் வரலாறும் தான் உங்கள் நினைவிற்கு வரும்.எந்த ஒரு பயனியையும் ஆச்சர்யமூட்டும் பல இடங்கள் இந்தியாவில் உள்ளன.வழக்கமாக அனைவரும் செல்லக்கூடிய கடற்கரைகள்,கோட்டைகள்,காடுகள்,மலைகள் மட்டுமின்றி பலரும் போக தயங்கும் பல இடங்கள் உள்ளன.நீங்கள் சாகசத்திற்கு தயாராக இருந்தால் எங்களது பட்டியலை குறித்து கொள்ளுங்கள்.
\r\n 

ரோதாங்க் கனவாய்—மனாலி

இமயமலையின் கிழக்குபுறத்தில் உள்ள பீர் பஞ்சால் மலைச்சரிவில் கடல் மட்டத்திலிருந்து 13,054 அடியில் இந்த ரோதாங்க் கனவாய் அமைந்துள்ளது.மனாலியிலிருந்து 53கிமீ தொலைவிலுள்ள இக்கனவாய் லகாவுல் மற்றும் ஸ்பிடி யுடன் குல்லு பள்ளதாக்கை இணைத்து லே பகுதிக்கு வழித்தடமாக அமைகிறது.மே மாதம் முதல் நவம்பர் வரை திறந்திருக்கும் இக்கனவாய் இயற்கை காட்சிகளுக்கு புகழ்பெற்றது. பழங்காலத்தில் இக்கணவாய் பீர் பஞ்சாலின் இரு கரைகளுக்குமான வர்த்தக தொடர்பாக திகழ்ந்தது.
\r\nமோரி நதியில் சாகச படகு சவாரி:

நீங்கள் ஒரு சாகச விரும்பியாகவோ நீர் விளையாட்டின் மீது காதல் கொண்டவராகவோ குறிப்பாக படகு சவாரி செய்வதில் விருப்பமுள்ளவராக இருந்தால் கோடை காலத்தில் உங்களுக்கு ஏற்ற இடம் இதுதான்.சில சமயத்தில் ஆபத்தான இடமும் கூட.

ஸ்தோக் காக்ரி—லடாக்

மலை ஏற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கும் சாகசப் பிரியர்களுக்கும் ஏற்ற இடம்.ஆனால் மலை ஏற்ற பயனம் செல்வதற்கு சிறந்த இடமாக இருந்தாலும் சிலர் மட்டுமே நடைபயனத்தை முழுமையாக முடிக்கின்றனர்.முக்கியமாக முதல்தடவையாக மலையேற்றம் செல்பவர்களுக்கு உகந்த இடம் கிடையாது. 
\r\n 

கிஷ்த்வார் கைலாஷ் சாலை

கிஷ்த்வாருக்கும் கைலாஷுக்கும் இடையிலான சாலை உலகின் ஆபத்தான சாலைகளில் ஒன்றாகும்.இந்த சாலை ஜம்மு-காஷ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.இங்கு செல்வதற்கு முதலில் ரோதாங்க் பள்ளதாக்கிலிருந்து செனாப் பள்ளதாக்கு சென்று அங்கிருந்து டார்லாங்க் பள்ளதாக்கை அடைந்து அங்கிருந்து கைலாஷ் மலை அடிவாரத்திற்குச் செல்ல வேண்டும்.இந்த ஏற்றமான சாலைவழியில் ஆக்ஸிஜன் குறபாட்டால் உங்கள் உடல்நலத்தை சோதிக்கும்.மேலும் பல செங்குத்தான உச்சிகளை கொண்ட மோசமான சாலையாகும்.
\r\nதார் பாலைவனம்

பாலைவனத்தின் பெரும்பாலான பகுதிகள் ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது.உலகின் மிகப்பெரிய பாலைவனத்தில் 16வது இடத்தில் உள்ளது.அழகும் வியப்பும் அளிக்ககூடிய அதே சமயத்தில் ஆபத்தானதும் கூட.இங்கு நிலவும் வறண்ட வானிலையை சமாளிப்பது பெரும் கஷ்டம்.தார் பாலைவனத்தில் 25 க்கும் மேற்பட்ட மேற்பட்ட பாம்பு வகைகள் உள்ளன.
\r\n 

பங்கார் கோட்டை---ராஜஸ்தான்

உங்களுக்கு பேய்-பிசாசு பயம் என்றால் இந்த கோட்டைக்கு தயவுசெய்து செல்லாதீர்கள்.17ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டையில் பேய் தொல்லைகள் இருப்பதாக கூறி இதன் அருகில் வசித்த கிராம மக்கள் தற்போது வேறு இடத்திற்கு சென்றுவிட்டனர்.இரவு நேரத்தில் கோட்டைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என இந்திய அகழ்வாராய்ச்சி துறை நோட்டீஸ் கூட ஒட்டியுள்ளது.
\r\n 

கொல்லிமலை-தமிழ்நாடு

1370மீ உயரமான இந்த ரம்மியமான மலைப்பகுதி நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது.70 கொண்டைஊசி வளைவுகளை கடந்து மலை உச்சியை அடைவது நிச்சியம் திகிலான அனுபவமாக இருக்கும். ஆவிகள் தங்கள் சக்தியின் மூலமாக இங்கு வரும் பயனிகளை இறப்பிற்கு அழைத்துச் செல்வதாகப் பல பேய்கதைகள் இங்கு உலவி வருகின்றன். 

ராஜபக்தவா ---- மேற்கு வங்காளம்

இப்பகுதி புஸா புலிகள் சரணாலயத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்துள்ளது.இங்குள்ள வனத்திற்கு செல்ல சிறப்பு அனுமதி வாங்க வேண்டும்.வழிகாட்டி இல்லாமல் இக்காட்டிற்குள் செல்வது ஆபத்தானது.ஏனென்றால் காட்டுத்தீயும்,சில சமயம் தீவிரவாதிகள் தொல்லையும்,விஷச் செடிகளும் நிரம்பியுள்ளன.உங்கள் துரதிஷ்டத்திற்கு புலிகள் கூட வரலாம்.
\r\n 

பஸ்தார்----சட்டிஸ்கர்
\r\n 

பஸ்தர் மாவட்டம் பச்சை பசேலென காடுகளையும் நீண்ட நதிகளையும் கொண்டது.இது அருமையான இடம் என்றாலும் நக்சலின் கோட்டையாகவும் திகழ்கிறது.இங்குள்ள மலைகளும் பெரும் மரங்களும் இவர்களின் கொரில்லா போர் முறைக்கு உதவிகரமாக உள்ளன.

ரூப்குந்த்----உத்தரகாண்ட்

இங்குள்ள மலை உச்சியில் பனி ஆறு ஒன்று உள்ளது.16500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த ஆற்றில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த பல மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மனித நடமாட்டம் இல்லாத இங்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா?

டிராஸ்---ஜம்முகாஷ்மீர்

கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள இப்பகுதி,1999ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான கார்கில் போரினால் புகழ்பெற்றது. உலகில் மனிதன் வசிக்கும் அதிக குளிர்ச்சியான பகுதிகளில் இந்த டிராஸ் 2ம் இடத்தில் உள்ளது.லடாக்கின் நுழைவாயிலாகவும் இது அழைக்கப்படுகிறது.இந்த பகுதியில் நிலவும் எலும்பை உலுக்கும் குளிர்ச்சி நிலையால்,இங்கு செல்லலாமா வேண்டாமா என ஒன்றுக்கு இருமுறை உங்களை யோசிக்க வைக்கும். 

ஆகவே இங்கு நாங்கள் குறிப்பிட்டுள்ள பகுதிகளுக்கு செல்வதற்கு சாகச எண்ணம் மட்டும் இருந்தால் போதாது தைரியமான மனமும் வேண்டும்.நீங்கள் செல்ல தயாரா?
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)