விலங்குகளின் இறைச்சி நல்ல உணவுதான்-பாகம்1

/files/detail1.png

விலங்குகளின் இறைச்சி நல்ல உணவுதான்-பாகம்1

  • 29
  • 0

-டி.என்.ஜா-தமிழில் வெ.கோவிந்தசாமி

''விலங்குகளின்  இறைச்சி  நல்ல  உணவுதான்'' ஆனால் யாக்ஞவல்கியருக்குப்  பிடித்ததோ மாட்டிறைச்சி 

இந்தோ - அய்ரோப்பியப்  பின்னணி 

இந்தோ - அய்ரோப்பியர்களின்  சமூக , அரசியல் அமைப்பு  குறித்த  ஆய்வானது  ஆய்வாளர்களின்    கவனத்தை  மிகவும்  ஈர்த்துள்ளது . இது பற்றி  ஏராளனமான நூல்கள்  வெளிவந்துள்ளன . அய்ரோப்பாவின்  கிழக்குப் பகுதியிலிருந்து  வந்த இந்தோ - ஆரியர்கள்  அல்லது  வேத  கால  ஆசிரியர்கள் ஏறத்தாழ  மூவாயிரத்து  அய்நூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  இந்தியாவுக்குள்  குடிபெயர்ந்தார்கள்   என்றப்  பொதுக்கருத்து  நிலவுகிறது . மேய்ச்சல் நில  நாடோடி  வாழ்க்கை , புராதன விவசாயம் , விலங்குகளையும்  கால்நடைகளையும்  உயிர்ப்பலி  தரும்  நடைமுறை  உள்ளிட்ட  சமய  நம்பிக்கைகள் , சடங்குகள் என இந்தோ - அய்ரோப்பியர்களது  பல்வேறு  பண்புகளை அவர்கள் தங்களுடன்  கொண்டு வந்தார்கள் . இவையனைத்தும்தான் இந்தியாவில்  அவர்கள் உணவுப்  பழக்க  வழக்கங்களின்  மீது  தாக்கம் செலுத்தின .
\r\nதொடக்ககால  ஆரியர்கள்  அரை  நாடோடிக்  கூட்டமாகவே  இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் . கால்நடை  வளர்ப்பு முக்கிய இடம் பெற்றிருந்த  மேய்ச்சல்  பொருளாதார  வாழ்க்கையே பிரதானமாகவும், விவசாயம் இரண்டாம்  நிலையிலும்  இருந்தது . அவெஸ்தாவையும்  வேத  இலக்கிய  தொகுப்பையும் ஒப்பிட்டுப் பார்ப்பதன்  மூலம்  இந்த முடிவுக்கு  வரமுடியும். பசுவைக்  குறிவைக்கும்  கோ  என்ற சொல்  பல்வேறு  பொருட்களில்  176 முறை  ரிக்வேத  சுலோகங்களில்  வருகிறது . கால்நடைகள்  தொடர்பான  சொற்கள் 700 முறையாவது  அந்த  நூலில்  இடம் பெற்றிருக்கக்கூடும் . தொடக்ககால ஆரியர்கள்  மத்தியில்  கால்நடைகள்  மிக மதிப்பான செல்வமாகவும் , பாதுகாக்கப்படவேண்டிய சொத்தாகவும் இருந்திருக்கிறது . வளமான மனிதன் கோமத்  என்றும், பழங்குடி  இனத்தலைவன் கோபா அல்லது  கோபதி  என்றும் 
\r\n*அவெஸ்தா : ஜொராஸ்டர்  என்ற சமய  ஞனியின் போதனைகளின்  தொகுப்பு  நூல்தான்  அவெஸ்தா . வரலாற்றுக்  காலத்துக்கு முற்பட்ட  காலத்தில்  தோன்றிய  ஜொராஸ்திரிய சமயம் கி .மு ஆறாம்  நூற்றாண்டு முதல் கி.பி ஏழாம்  நூற்றாண்டு  வரை பண்டைய பாரசீகத்தின் அரசாங்க சமயமாக விளக்கி  வந்தது . இஸ்லாமிய  சமயத்தின்  வளர்ச்சியினால்  அப்பகுதியிலிருந்து  முற்றாக அழிந்து  போன  இச்சமயம்  இன்று  இந்தியாவில் பார்சிகளின்  சமயமாகக்  சுருங்கிப்போனது .  கால்நடைகளைப் பெருக்க  ஏராளமான  வழிபாட்டுப்  பாடல்கள்  ரிக்  வேதத்தில்  காணப்படுகின்றன . இந்த வலி பாட்டுப்  பாடல்கள்  அடிக்கடி  பழங்குடி  இனங்களுக்கிடையில் போர்  ஏற்படக் காரணமாய்  இருந்தன . இம்மாதிரியான  சண்டைகளை  குறிக்க  இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள  கவிஸ்தி , காவ்யு , கவேஸ்னா போன்ற சொற்கள்  கால்நடைகளைக்  குறிக்க பயன்படுத்தப்பட்டச் சொற்களிலிருந்து உருவானவைதாம் . உறவுமுறைகளை குறிக்கப்  பயன்பட்ட  சில சொற்கள்  மேய்ச்சல்  நில வாழ்க்கை காலகட்டத்தைச்  சேர்ந்த  சொற்களிலிருந்து  பிறந்தவையாகும் . துகித்ர  என்று மகள் அழைக்கப்பட்டார் . பசுக்களுக்குப்  பிறந்த  சில  வகை  தெய்வங்கள் தேவலோகத்தில்  இருப்பதாகச்  சொல்லப்படுகிறது . தங்களது  இந்தோ - அய்ரோப்பிய  முன்னோர்களிடமிருந்து ஆரியர்கள்  மரபுரிமையாகப்  பெற்ற மேய்ச்சல்  நிலப்  பொருளாதார வாழ்க்கையையே  இவையனைத்தும்  வெளிப்படுத்துகின்றன .சமயச்  சடங்குகளில் முக்கியமாக  விலங்குகளை  உயிர்ப்பலி  தரும்  சடங்குகளிலும் ,உணவுப்  பழக்கவழக்கங்களிலும்  இந்த அம்சங்கள்  பிரதானமாகத் தெரிகின்றன.
\r\nமேய்ச்சல்  தொழிலைப்  போலவே , விலங்குகள் அல்லது  கால்நடைகளை  உயிர்ப்பலி தரும்  சடங்குகளும் தொடக்ககால  ஆரியர்களால்  வெளியிலிருந்து  கொண்டு வரப்பட்டு  மிகப்  பரவலாக நடைமுறையிலிருந்திருக்கிறது,  கால்நடைகளை  உயிர்ப்பலி தரும்  பசுபந்தா  என்ற  வேத  கால  சடங்கின்   மூலக்கூறுகளை  மொழியியல் , தொல்லியல்  ஆதாரங்களின்  அடிப்படையில்  கிழக்கு  அய்ரோப்பாவின் தொடக்ககால  ஸ்டெப்பி  புல்வெளிக்  கலாச்சாரங்களில் காண முடியும் . நமக்குப்  பக்கத்திலுள்ள  ஈரானில்  பண்டையகாலத்தில்  விலங்குகள்  உயிர்ப்பலி தரப்பட்டதற்கு அவெஸ்தாவின்  தெளிவான  ஆதாரங்களைப் பார்க்கலாம் . வேதகால  சொல்லான  யக்ஞம்  அவெஸ்தாவில்  யயஸ்னம்  என்று  குறிப்பிடப்பட்டுள்ளது . கால்நடைகள், குதிரைகள் , ஆடுகள் , 1000 ஒட்டகங்கள்  பலி  தரப்பட்ட  செய்தியை  கூறுகிறது .
\r\nதொடக்ககால  ஆரியர்களோடு  சில  இந்தோ - ஈரானியத்  தெய்வங்களும் குடிபெயர்ந்திருக்கும் என்று  தோன்றுகிறது . ஆனால்  காலப்போக்கில்  அவை    தங்கள்  குணங்களையும்  தோற்றங்களையும்  ஏதேனும்    வகையில் மாற்றிக்கொண்டன . அத்தெய்வங்களில்  இந்திரன் , அக்னி, சோமன்  ஆகிய மூவரையும்  முக்கியமாகக் குறிப்பிடலாம் . இந்தத்  தெய்வங்கள்  அனைத்துமே  உயிர்ப்பலி  தரப்பட்ட  விலங்குகளின் இறைச்சி மீது  - குறிப்பாக மாட்டிறைச்சி மீது  -பேரார்வம் காட்டியிருக்கின்றன . ஆரியர்களின்  மேய்ச்சல்  நில வாழ்க்கையில்  இந்தக்  கால்நடைகள்  மிகப்  பெரிதாக  மதிக்கப்பட்டவை என்பது  குறிப்பிடத்தக்கது . கடவுளுக்குப் படைக்கப்பட்ட படையலின்  எச்சங்களைப் பங்கு  பிரித்துக்கொள்வதில்  இவர்கள்  பெரும்  ஆர்வம் காட்டினார்கள் . வேத  சடங்குகளிலும் , வேள்விகளிலும் பயன்படுத்தப்பட்ட  பொருட்களைப்  பார்க்கும்போது  ஒரு விஷயத்தை  ஊகமாகப் பெற முடிகிறது . வேதகால  மக்கள்  தங்கள்  உண்ண  விரும்பிய  பொருட்களையே  கடவுளுக்குப்  படையல்களாகப்  படைத்தார்கள்  என்பதுதான் அது .  

 
\r\nதெய்வங்களுக்குப்  பிடித்த  உணவு வகைகள் 
\r\nதெய்வங்களுக்குப்  படையல்  தர - குறிப்பாக  வலிமையான  கைகளும் , பேருருவமும்  கொண்ட , எதிரிகளின் வலுவான  இடங்களை  அழிக்கக் கூடிய, வேத  காலக் கடவுள்களிலேயே  மிகப்  ரிய கடவுளான  இந்திரனுக்குப் படைக்கப்  எருதுகளின்  இறைச்சி  சமைக்கப்பட்டது  குறித்து  ரிக்வேதம்  அடிக்கடி  குறிப்பிடுகிறது . ''அவர்கள்  எனக்காக  பதினைந்து, இருபது  எருதுகளைச் சமைத்தார்கள் . '' என்று ஒற்றிடத்தில்  இந்திரன் குறிப்பிடுகிறான் இந்திரன்  காளைகளின்  இறைச்சியை  உண்டதாக  ஓரிடத்திலும் , ஒன்று  அல்லது நூறு  எருமைகளின்  இறைச்சியை  உண்டதாக வேறொரு  இடத்திலும்  குறிப்பிடப்பட்டிருக்கிறது . அக்னியால்  சுடப்பட்ட  முன்னூறு  அல்லது ஆயிரம் எருமைகளை  உண்டதாகவும்  ஓரிடத்தில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது . இந்திரனுக்கு அடுத்தபடியாக அக்னிக்கே முக்கியத்துவம்  தரப்பட்டிருக்கிறது . ரிக்  வேதத்தில்  அக்னியைப் பற்றி  இருநூறு  பாடல்கள் காணப்படுகிறது . புராண  பெற்றோர்களான  தேயுஸீக்கும்  பிரதிவிக்கும் பிறந்த  அக்னியின் பலவிதமான  தோற்றங்கள்  வர்ணிக்கப்பட்டிருக்கிறது. படையல்  பொருட்களை  கடவுளிடம்  சேர்க்கக்கூடிய , உயிர்ப்பலி சடங்குகளின்  போது  கடவுள்களை  பூமிக்கு வரவழைக்கக்கூடிய  தூதராக அக்னி கருதப்பட்டார் . சிற்றின்பப்  பிரியனான இந்திரனைப் போலல்லாமல், மிதமான  அளவிலேயே  சோமபானம் குடித்துவந்த அக்னியின் முக்கிய உணவாக நெய் இருந்தது .அனைத்து  மக்களின்  பாதுகாவலனாக  அக்னி இருந்தபோதிலும்  கூட '' எருதும் ,மலட்டுப்  பசுவுமே  அவனது  உணவாக  இருந்தன .'' என்று  ரிக்வேதம்  குறிப்பிடுகிறது . கால்நடைகள் இதர விலங்குகளின்  இறைச்சியை  அக்னி வெறுத்தான்  என்பதற்கு  உண்மையில்  ரிக்வேதத்தில்  எந்த  ஆதாரமுமில்லை. இதற்கு  மாறாகக்  குதிரைகள்  காளைகள்  எருதுகள் மலட்டுப்  பசுக்கள் ஆட்டுக்கடா  போன்றவை அக்னி தேவனுக்கு  பரிசாகத்  தரப்பட்டன . இறந்துபோனவர்களைப்  புதைப்பது  குறித்துப்  பேசும் ஒரு பாடலில்  '' அக்னிக்குரிய  பங்கான ஆட்டை  எரிக்க வேண்டும் . தீயிலிருந்து  உடம்பைப்  பாதுகாத்துக்கொள்ள  பசுவின் இறைச்சியை  பயன்படுத்திக் கொள்ள வேண்டும் . '' என்று  மிகத்  தெளிவாக  குறிப்பிடப்பட்டிருக்கிறது. மூன்றாவது முக்கிய கடவுளான சோமனின்  பெயர் வெறியூட்டும்  பானத்தை  தயாரிக்கப்  பயன்படும் ஒரு தாவரத்தின் பெயரிலிருந்து  பெற்றப்பட்டதாகும் . ''அடிப்படையான  முன்மாதிரியான வேதகால  வேள்விகள் சோமனுக்கு உரியவை '' என்றும், கால்நடைகள்  உள்ளிட்டு  விலங்குகளைக்  கொல்வது அதில் அதில் ஒரு முக்கிய நிகழ்ச்சியாக  இருந்தது என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது . ரிக்  வேத  தெய்வங்கள் மத்தியில்  உணவு  முறைகளில்  பலத்த வேறுபாடுகள்  எஏதுமில்லை . பால் , வெண்ணெய் , பார்லி , எருது , வெள்ளாடு செம்மறியாடு  போன்றவை  இத் தெய்வங்களின்  வழக்கமான உணவுகளாகும் . சில தெய்வங்களுக்கு  சில உணவுகள்  பிடித்தமானவையாகவிருந்தன . எடுத்துக்காட்டாக , இந்திரனுக்கு  மிகவும் பிடித்தமான  உணவு  காளை சாலைகளைக்  காக்கும் கடவுளான புஷனுக்குப்  பிடித்தமான  உணவு கஞ்சி . காரணம்  அவனுக்குப் பற்கள் இல்லை ,

வேள்வியும் , வேள்விப்  பொருட்களும்  
\r\nவிலங்குகளைக்  கொள்வது என்ற ரிக் வேத நடைமுறை தொடர்ந்தது . பிற்கால வேத நூல்களில்  உயிர்ப் பலிச்  சடங்குகள்  குறித்த தகவல்கள்  விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன . கால்நடைகள் உயிர்ப்பலி  கொடுக்கப்பட்ட சடங்குகள் குறித்த தகவல் அடிக்கடி  காணப்படுகின்றன. கோபத பிராமணம் என்ற நூலில் மட்டும்  இருபத்தியொரு யக்ஞங்கள்  பற்றி  குறிப்பிடப்பட்டுள்ளது . இந்த வேள்விகள் அனைத்திலுமே  விலங்குகள் கொல்லப்பட்டன என்று  சொல்லிவிடமுடியாது . இந்திரனுக்குக்  காளையும் , மரூத்களுக்கு புள்ளிகள் கொண்ட பசுவும் , அஸ்வின்களுக்கு  செந்நிறப் பசுவும் பலி  தரப்பட்டது . மித்ரன் , வருணன் ,ஆகிய தெய்வங்களுக்கும்  பசு பலி  தரப்பட்டது மாபெரும் வேள்விகளில் பல்வேறு விலங்குகளின்  இறைச்சிகள்  குறிப்பாக பசு / எருது / காளை ஆகியவற்றின்  இறைச்சிகள் - அவசியமாக இருந்தன. மாபெரும் வேள்விகள் அனைத்துக்கும்  ஆரம்பாகி ஆரம்பச்  சடங்கான அக்னிய தேயாவை  நடத்துவதற்குப் பசு கொல்லப்பட்டத்த்து . அச்சடங்கில்  அத்வர்யு புரோகிதர் , ''காளையின் சிவப்பு தோலின் மீது ...... நான்கு தட்டு அரிசியை .....தனித்தனியாக வைத்தார்.......'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது . ரிக்வேதத்தில்  முதன்முதலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதும் , பிராமணங்களில்  பேசப்பட்டுள்ளதும் , மிக முக்கிய வேள்வியுமான அஸ்வமேதத்தில் அறுநூறுக்கும்  மேற்பட்ட  விலங்குகளும்  பறவைகளும்  பலி  தரப்பட்டன . வேள்வியின்  இறுதிக்கட்டத்தில்  இருபத்தியொரு  மலட்டுப்  பசுக்கள்  பலியிடப்பட்டன . குதிரைகள் , காளைகள் , பசுக்கள் , வெள்ளாடுகள் , மான்கள்  என  180 விலங்குகள்  பழி தரப்படவேண்டுமென்று  தைத்தீரிய சம்கிதம் விவரிக்கிறது . ராஜசூயம் , வாஜபேயம்  போன்ற வேள்விகளில்  கோசவா  சடங்கு  ஒரு முக்கிய பகுதியாக இருந்தது . மரூத் களுக்கு  புள்ளிகள் கொண்ட  மலட்டுப்  பசு  பலி  தரப்பட்டதாக  சதபத பிராமணம்  குறிப்பிடுகிறது . அதைப்போலவே  அக்னிஸ்  தோமாவின் போது  ஒரு மலட்டுப்பசு  பலித் தரப்பட்டது .  பஞ்சசாரதி  யாஷாவ வேள்வியின் போது  @மூன்று வயதுக்குட்பட்ட  பதினேழு  இளம்  கன்றுகளை  பலி  தருவதும், வேள்விக்கு முந்தைய சடங்காக  வேள்வி  நடத்துபவர்  காட்டுச்  செடிகளையும்  பழங்களையும் உண்பதும் முக்கிய  அம்சங்களாக  இருந்தன  என்று தைத்தீரிய  பிராமணம் குறிப்பிடுகிறது. சதுர்மஷ்யா செளத்ரா மணி  உள்ளிட்ட பல்வேறு வேள்விகளில்  பலி  தரப்பட வேண்டிய கால்நடைகளின்  எண்ணிக்கை  குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது . தனி  விலங்குகளைப் பலியிடும்  பசுபந்தா  அல்லது நிருத  பசுபந்தா  என்றழைக்கப்பட்ட  சடங்குகளும் பெரும்பாலான வேள்விகளில்  ஒரு முக்கியபகுதியாக இருந்தன .
\r\nதொடக்ககால  வேத நூல்களிலும் , பிற்கால வேத நூல்களிலும்  இடம் பெற்றுள்ள  ஏராளமான  குறிப்புகளை  பார்க்கும்போது, பசுக்கள் பலி  தரப்படுவது  வேள்விகளில்  மிக முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது என்ற விஷயம் வெளிப்படையாகத்  தெரிகிறது . வேள்வியில் பலியிடப்படும் பசு ''மிக நல்ல உணவு என்றும் நூறு காளைகளை  உயிர்ப்பலி  தந்ததற்காக அகஸ்தியரைப் போற்றியும் தைத்தீரிய  பிராமணம் தெளிவாகக்  குறிப்பிட்டுள்ளது . மனிதன், குதிரை, எருது, வெள்ளாடு இளங்கன்று  ஆகியன  உயிர்ப்பலிக்குரிய   விலங்குகள்  என்றும் கிம்புருஷ, கெளரமிருகா, கவாயா, ஒட்டகம், சராபா  ஆகியன  வேள்விக்குரிய       விலங்குகள்  அல்ல  என்பதால் அவற்றின் இறைச்சியை  உண்ணக்கூடாது  என்றும்  அயத்தரேய  பிராமணம்  சொல்கிறது . வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும்  250 விலங்குகளில் 50 விலங்குகள்  கேள்விகளுக்குத்  தகுதியானவையாக இருந்தன  என்ற யதார்த்தத்தைப்  பார்க்கும்போது  மேலே  குறிப்பிடப்பட்டுள்ள  தடை  அன்றாட வாழ்க்கையில்  நடைமுறைக்குப்  பொருத்தமானதாக  இருந்திருக்குமோ  என்பது அய்யமாகவே  இருக்கிறது . 

நாய் போன்ற விலங்குகளின்  இறைச்சியை  பேய் , பிசாசுகளை  வீசிவிடுவார்கள்  என்று  சில  இடங்களில்  சொல்லப்பட்டபோதிலும் , நாடோடி  மேய்ச்சல்  நிலவாழ்க்கையை  முக்கியத் தொழிலாக  கொண்டிருந்த வேத ஆரியர்கள்  கொல்லப்பட்ட  விலங்குகளின்  இறைச்சியை  உணவாக  உண்ணுவது  இயல்புதான் என்பதை  இந்த இடத்தில்  நினைவில்கொள்ளவேண்டியது அவசியமாகும் . 

பலியிடப்பட்ட  விலங்குகள்  எப்படி  வெட்டப்படவேண்டும்  என்பது பற்றியும் , அவற்றின்  இறைச்சியை  எப்படி பகிர்ந்துகொள்ள வேண்டும்  என்பது பற்றியும்  தைத்தீரிய சம்கிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை  பார்க்கும் போது மனிதர்கள்  உண்பதற்காகவே  பொதுவாக  விலங்குகள்  பலியிடப்பட்டிருக்கின்றன என்பது தெரியவருகிறது . பலிதரப்பட்ட  விலங்கை  கழுத்தை நெரித்துக்   கொன்ற  சாமிதாரா அதன் உடலை  முப்பத்தாறு பங்குகளாகப்  பிரித்ததாக அதர்வ வேதத்தின் கோபத  பிராமணம்  மிகத்  தெளிவாக  எடுத்துக்  காட்டுகிறது. பலிதரப்பட்ட கால்நடைகளின்  இறைச்சியை  பலதரப்பட்ட  மக்களும்  சுவைக்கிறார்கள் என்ற விஷயம் இதிலிருந்து  வெளிப்படையாக  தெரிகிறது . ''படையல் தரப்பட்ட  தெய்வங்கள்  கொடூரமானவை என்பதால் .......... படையல் பொருட்கள்  மனித நுகர்வுக்கானவையல்ல  என்றே  கருதவேண்டும் . '' என்ற கருத்துக்கு  முற்றிலும் மாறுப்பட்ட  விதத்தில்  தெய்வங்களுக்கு  பலி  தரப்பட்ட  விலங்குகள் அனைத்துமே  மனிதர்களின்  உணவாகத்தான் இருந்தன . சதபத  பிராமணம்  உள்ளிட்டு பல்வேறு வேத நூல்கள் இறைச்சி  மிக  சிறந்த உணவு  என்று அறிவித்திருப்பதிலிருந்து இது வெளிப்படையாக  தெரிகிறது . பலியிடப்பட்ட  விலங்கை அனைத்து உயிர்களின்  மூல  ஆதாரமாகவும் , ''அனைத்து  உணவு  வகைகளின்  மூலப்  பிறப்பிடமாகவும் '' மட்டுமின்றி , உணவாகவும் வேதநூல் கள்  கருதின .

மாபெரும்  வேள்விகளில்  மட்டுமல்ல  அன்றாட  வாழ்க்கையில்  செய்யப்பட்ட  சாதாரண  குடும்ப சடங்குகளிலும் விலங்குகள் பலிதரப்பட்டன . விவசாயத்தோடும் , மற்ற  நடவடிக்கைகளோடும் சம்பந்தப்பட்ட  பல்வேறு சடங்குகளையும்  வழிபாட்டு  முறைகளையும்  பிற்கால  வேத நூல்களும்,  வேதகாலத்துக்கு  பிந்தைய  நூல்களும்  குறிப்பிட்டுள்ளன . இவற்றில்  ஒரு சில சடங்குகளிலாவது கால்நடைகள்  உள்ளிட்ட  விலங்குகளை  கொள்வது சடங்குபூர்வமானதாக  இருந்தது . விவசாயத்தோடு  தொடர்புகொண்ட  சடங்கு முறைகளுக்கு  ஒரு உதாரணமாக  பல்வேறு கிரக  சூத்திரங்களில்  பேசப்பட்டுள்ள சூலகவா சடங்கை  குறிப்பிட்டுக்காட்டலாம். இந்த சடங்கில் ருத்திரனுக்கு  எருது  பலி  தரப்பட்டது . அதன் வாழும் தோலும்  தீயில்  வீசப்பட்டன . அதன் இரத்தம் பாம்புகளுக்காக குஷா அல்லது தர்ப்பை  புல்லின்  மீது ஊற்றப்பட்டது . நிலையான விவசாயத்தின்  தோற்றம் , நிலையான குடியிருப்புகளின்  வளர்ச்சிக்கு  வழியமைத்து தந்தது . இதன் தொடர்ச்சியாக  கட்டப்படவேண்டிய  முறை  பற்றி  விரிவான சிக்கல்கள்  நிறைந்த  விதிமுறைகள்  உருவானதை  வேத நூல்களில் காணமுடிகிறது . பல விதிமுறைகளில்  குறைந்தது  இரண்டு விதிகளாவது  கருப்பு  பசு அல்லது வெள்ளை  ஆடு  பலி பலிதரப்படுவது பற்றிப் பேசுகிறது .  விருந்தினர்களை  உபசரிக்கும்  சடங்கான அர்கியம் அல்லது மதுபர்க்கம் என்று மிகப் பிரபலமாக அழைக்கப்பட்ட  ஒரு ஆர்வத்துக்குரிய  சடங்கு குறித்து பிற்கால வேத நூல்கள்  அடிக்கடி  குறிப்பிடுகின்றன . விருந்தினர்களைக்  கௌரவிக்க  பசுக்களைக்  கொல்லும்  நடைமுறை  பண்டைய காலத்திலிருந்தே இருப்பதாகத்  தெரிகிறது . ''விருந்துக்குப் பொருத்தமான  பசுக்கள்  '' என்ற பொருள் தரும் அத்தினிர்  என்ற சொல் ரிக்  வேதத்தில்  காணப்படுகிறது . விருந்தினர்களுக்காகப் பசுக்களை  கொள்பவர் '' என்று பொருள். கொண்ட ஆதிக்கவா என்ற சொல் வேத கால வீரனைக்  குறிப்பிடுகிறது . திருமணம்  போன்ற விழாக்காலங்களில்  கூட பசுக்கள் பலி  தரப்பட்டன . எடுத்துக்காட்டாகத்  திருமண  விழாவின்  போது  பசு  பலிதரப்பட்டது  குறித்து  ரிக் வேத பாடல் ஒன்று குறிப்பிடுகிறது . ''ஆட்சியாளர்களோ , மரியாதைக்குரியவர்களோ  விருந்தினர்களாக வந்தால் மக்கள் காளையையோ  பசுவையோ பலி  தந்தார்கள் . '' என்று அயித்தரேய பிரமாணத்தில் சொல்லப்பட்டுள்ளது . மதுபர்க்கம்  என்ற சொல் முதன் முதலாக ஜெய்மினிய  உபநிடத - பிராமணத்தில்  குறிப்பிடப்பட்டுள்ளது . பல்வேறு  சூத்திரங்களில்  இது விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது .

குரு , புரோகிதர் ,ஸ்நாதகன் , மாமனார் ,தந்தை வழி , தாய்  வழி  மாமாக்கள், நண்பன் அரசுன்  போன்ற சிறப்பு விருந்தினர்களை  கெளரவிப்பதற்கு  இச்சடங்கு  நடத்தப்பட்டது . மாட்டிறைச்சியோ , வேறு விலங்குகளின் இறைச்சியோ  இல்லாமல்  இந்த சடங்கு நடத்தப்படவில்லையென்றபோதிலும் விருந்தின் போது  தயிரும் , தேனும் கலந்து தரப்பட்டதோடு , முக்கியமாக  மாட்டிறைச்சி  அதாவது  பலி  தரப்பட்ட  மாட்டின்  இறைச்சியோ , விருந்துக்காகவே  கொல்லப்பட்ட  மாட்டின்  இறைச்சியோ   விருந்தினர்களின் விருப்பத்தை  பொறுத்து  படைக்கப்பட்டது . தனி பட்ட முறையிலோ , திருமண  விழாக்களின்   ஒரு பகுதியியாகவோ  மதுபர்கம் சடங்கு நடத்தப்படும் . விருந்தினர்களை  கெளரவிப்பதற்காக   அச்சடங்கில்  பல  பசுக்கள் கொள்ளப்பட்டன . ஆகவே தான் விருந்தினர்களை  ககுறிக்க கோக்னா என்ற சொல்லை  பாணினி  பயன்படுத்தியிருக்கிறார் .

பெண்கள் நான்கு மாத கர்ப்பமாக இருக்கும்போது நடத்தப்பட்ட சீமந்த நயனம்  கல்வி கற்ற குழந்தைகளை  குருவிடம்  அனுப்புவதற்கு முன்பு  நடத்தப்பட்ட  உபநயம்  போன்ற சடங்குகளின் போது காளை  அல்லது பசுவின் தோல் பயன்படுத்தப்பட்டதை  கிரக சூத்திரங்கள்  உறுதிப்படுத்தியுள்ளன . நம்மில் பெரும்பாலோருக்கு  அற்பமாகத்  தோன்றும்  காரணங்களுக்குக்கூட கால்நடைகள் பலியிடப்பட்டிருக்கும்போல்  தோன்றுகிறது . தனக்கு பிறக்கும்  மகன்  நீண்ட  ஆயுளும் , நல்ல அறிவாக  கொண்டவனாக  இருக்க வேண்டும்  என்று யாரவது விரும்பினால்  அவர்கள்  வேகவைத்த கன்றின்  இறைச்சியுடன்  அல்லது  மாட் டிறைச்சியுடன்  அரிசி  சூரும் நெய்யும் கலந்து  உண்ணவேண்டும்  என் உபநிடதத்தின்  கட்டளை  ஓன்று  வழிகாட்டுகிறது . குழந்தை பிறந்து ஆறு மாதம் கழித்து  அதற்கு  பறவைகளின் இறைச்சியும்  மீனும் உணவாக  தரப்பட்டன .


\r\nவேத நூல்களிலும் வேத காலத்து பிந்தைய நூல்களிலும்  கணிசமான இடத்தை பிடித்துள்ள  இறந்தோர்  வழிப்பாட்டோடு  பசுக்கள் கொல்லப்படுவது  பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தது . பிணத்தை அடக்கம் செய்வது குறித்து  ரிக் வேதத்தில் பல இடங்களில்  குறிப்பிடப்பட்டிருக்கிறது . அதில் ஓரிடத்தில்  இறந்தவர்களின்  உடலை  மூடுவதற்கு  பசுவின் தோலும்  கொழுப்பும் பயன்படுத்தப்பட்டது  பற்றி குறிப்பிட்டுள்ளது . இறந்து போனவர் சொர்க்கத்துக்கு  பயணம்  செய்ய அவரோடு  ஒரு காளையும்  எரிக்கப்பட்டது  பற்றி அதர்வ வேதம் ஓரிடத்தில்  குறிப்பிட்டுள்ளது . இறுதி சடங்கு நடத்தும்  முறை பற்றி  கிரக சூத்திரங்கள்  விரிவாக வர்ணித்துள்ளன . பிணத்தை எரிக்கும் போது  பசு பலியிடப்பட்டது  குறித்தும், அதன் பல்வேறு பாகங்கள் பிணத்தின் மீது வைக்கப்பட்டது  குறித்தும் தெளிவான ஆதாரங்களை  பார்க்கமுடிகிறது . இறந்துபோன மூதாதையர்களை கெளரவிக்க பல்வேறு சடங்குகள்  நடத்தப்பட்டன .பிதுர்  யக்ஞம் , மகா  பிதுர்  யக்ஞம் , அஷ்டகம்  என இவற்றுக்கு  பல  பெயர்களை  வேத  நூல்கள்  குறிப்பிடுகின்றன . இத[போலவே  வேறு  வகைப்பட்ட  சிரார்த்தம்  குறித்து வேதகாலத்து பிந்தைய  நூல்கள்  பேசுகின்றன . பல்வேறு வகைப்பட்ட  சிரார்த்தங்களின்  விதிமுறைகளை        பற்றி  விரிவாக பேசி இங்கே  வீணடிக்க வேண்டிய அவசியமில்லை . பிதுர்களுக்கு  நல்ல  விருந்து  தரவேண்டியிருக்கிறது . மாட்டிறைச்சி தந்தால்  மட்டும் இது சாத்தியப்பட்டிருக்கும்  என்ற விஷயம் மட்டுமே இங்கே நமக்கு தேவையான  தகவலாகும் . ஆகவே சீரார்த்தத்தின்  பொது வேறு விலங்குகளோடு பசுக்களும் , காளைகளும் பலியிடப்படுகின்றன . பின்னர் வந்த காலங்களில்  ஆண்  குழ்நதை  பிறப்பு , பிள்ளைக்கு  திருமணம்  போன்ற  விழாக்களுக்கு  முன்னோட்டமாக  பிதுர்கள்  மகிழ்ச்சிப்படுத்த  ஆபீயுதயீகா 
\r\nஎன்ற சடங்கு நடத்தப்பட்டது . அஷ்டகம்  அல்லது  ஏகாஷ்டகம்  என்று அழைக்கப்பட்ட  வேறு  வகை  சிரார்த்தம்  குறித்து  விரிவாக பேசும்  கிரக சூத்திரங்கள்  அச்சடங்கில் பசுக்கள் பலியிடப்பட்டத்தை வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளன . சிராத்தச்  சடங்கின் போது  அதில் பிழை தரப்படும்  விலங்குகளுக்குக்கேற்ப  தான்  பலனும் கிடைக்கும்  என்றிருந்த  போதிலும் அஷ்டகம்  சடங்கை  நடத்தும்  நபர்  பசுவை  வெட்டி  அதன் குடல் இறைச்சியை  சமைத்து  பிதுர்களுக்கு  படைக்கவேண்டும் என விதிகள்  கூறுகின்றன . மாட்டிறைச்சி  ஓராண்டுக்கும்  , எருமை , முயல் போன்ற காட்டு விலங்குகள்  வெள்ளாடு போன்ற வளர்ப்பு விலங்குகளின்  இறைச்சி ஓராண்டுக்கும்  அதிகமாகவும்  பிதுர்களை  மகிழ்ச்சி படுத்தும் என்றும்  , பிதுர்கள்  காலம்  முழுக்கவும் மகிழ்ச்சியோடு  இருக்கவேண்டுமானால்  காண்டாமிருகத்தின்  இறைச்சி , சதாபலி  வார்த்திரினாஷா  போன்றவற்றை படையல் செய்ய வேண்டும் என்று விதிமுறைகள் கூறுகின்றன . மாட்டிறைச்சி  பொதுவாக  தவிர்க்கப்படவேண்டிய  உணவாக இருந்தால் அதை உண்பதா  இல்லை  வேண்டாமா  என்ற கேள்விக்கே இடமில்லை. சிரார்த்தம் என்பது பிதுர்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்கான சடங்கு  என்பதற்கு  மேலாக , இறந்தவரின்  உறவினருக்கான  விருந்தாகவும்  குறிப்பாக மாட்சிறைச்சிக்கு  முன்னுரிமை  தந்த  பார்ப்பனர்களுக்கான  விருந்தாகவும் இருந்தது . மாட்டிறைச்சி  கிடைக்காதபோது  மட்டுமே  பிதுர்களுக்கு  காய்கறிகள்  படையலிடப்பட்டன .


\r\nகால்நடைகள்  பலி தரப்பட்ட வேறு பல சடங்குகளும்  இருந்தன . பார்ப்பனர்களால்  நடத்தப்பட்ட  காவா மயானம் என்ற சடங்கில்  விலங்குகள்  பலி  தரப்படுவது  ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது . இந்த சடங்கின் உச்சக்கட்ட அம்சமாக  ஆடம்பரமும் , காளியாட்டமும்  கொண்ட  மகாவிரதம்  நடத்தப்பட்டது . அதில் மூன்று  மலட்டு  பசுக்கள்  பிழை தரப்பட்டு மித்ரவருணனுக்கும், மற்ற தெய்வங்களுக்கும்  விருந்து படைக்கப்பட்டன . மதுக்களியாட்டம்  இந்த விழா  குறித்த  வர்ணனைகளைப் பார்க்கும்போது அதிக கால்நடைகள்  பாலி தரப்பட்டிருக்கலாம்  என்று தோன்றுகிறது . தொடக்க  காலத்திலும்  அதற்கு பின்னர் வந்த காலத்திலும்  பொதுவாக நடைமுறையில்  இருந்தும்  பல்வேறு  சிரார்த்த  சூத்திரங்களில்  விவாதிக்கப்பட்டிருந்ததுமான  கிரக  மேதம்  சடங்கானது அளவில்லாத  எண்ணிக்கையில்  பசுக்கள் கொல்லப்பட்ட  ஒரு சடங்காக  இருந்தது . சடங்கு முறைப்படியும் , கறாரான  விதிகளின்படியும் அல்லாமல்  குரூரமான  முறையிலும் , சடங்கு விதிகளை மீறிய முறையிலும் , பசுக்கள் கொல்லப்பட்ட ஒரு ஊதாரித்தனம்  போது  விருந்தாக  அது இருந்தது . இந்திய துணை கண்டத்தின் வட  மேற்கு பகுதியில்  வசித்து வந்த  தொடக்ககால  ஆரியர்களும் சரி ,            கங்கை  சமவெளியின்  மையப்  பகுதியில்  வசித்து வந்த அவர்களின்  வாரிசுகளும்  சரி , பசு உள்ளிட்ட  கால்நடைகளையும் , வேறு விலங்குகளையும்  வெட்டி கொன்று அவற்றின் இறைச்சியை  பேரார்வத்தோடு  சுவைக்கிறார்கள்  என்ற விஷயம்  எழுத்துப்பூர்வ  குறிப்புகளை  வைத்து  பார்க்கும்போது  வெளிப்படையாக  தெரிகிறது  என்பதில்  எள்ளளவும் அய்யமில்லை . வேதங்களை  கற்றுத்தரும் ஆசிரியன்  உபகர்மாவுக்கும் , உத்ஜார்ஜானாவுக்கும்  இடைப்பட்ட  மாதங்களில்  இறைச்சி உண்ணக்கூடாது  என்று தடைவிதிக்கப்பட்டிருந்தது  . எனினும் பசுக்களின் இறைச்சியையும் , காளைகளின்  இறைச்சியையும்  தூ ய் மை யானவையாதலால்  அவற்றை  உண்ணலாம்  என்று ஒரு தர்ம சூத்திரம்  நூல்  சொல்கிறது . மிதிலை  நகரில்  பெரிதும்  மதிக்கப்பட்டு வந்த  யாக்ஞவல்கியரின் விருப்பத்துக்குரிய  உணவாக  மாட்டிறைச்சி  இருந்தது . இளம் கன்று அல்லது இளம்  பசுவின்  இறைச்சியாக இருந்தால்  அதை விரும்பி சாப்பிடுவதாக   இவர் சொல்லியிருக்கிறார் . மாட்டிறைச்சி  உண்பதற்கு  எதிரான கருத்துக்கள்  இவர் காலத்திலேயே  எழத்  தொடங்கிவிட்டது  என்றும்  இதிலிருந்து தெரியவருகிறது .
\r\nகால்நடைகளின்  இறைச்சி  உணவாக உண்ணப்பட்டு வந்தது ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு விஷயமாக  இருந்தது  என்பதை பல ஆய்வாளர்களும்  ஒப்புக்கொள்கிறார்கள் . படையலும்  காளையின் இறைச்சி  பொருத்தமானது என  ஒரு சாஸ்திர  நூல்  சொல்கிறது . கறவை  பசுவையும் , முழு  வளர்ச்சியடைந்த எருதையும்  தகுந்த காரமின்றி  கொன்றால்  அதற்கு பரிகாரம் செய்யவேண்டுமென ஒரு சாஸ்திர  நூல்  சொல்கிறது .  சாஸ்திர நெறிமுறைகளின்  படி  கொல்லப்படும்  விலங்குகளை  புரோகிதர்களும் , பார்ப்பனர்களும்  உண்ணலாம் என்று வேறு சாஸ்திர நூல் குறிப்பிடுகிறது . உயிப்பலி  தரப்பட்ட  அல்லது  கடவுளுக்கு  நேர்ந்துவிடப்பட்ட  மாட்டின் இறைச்சி அல்லது விலங்குகளின் இறைச்சி  மட்டுமே உண்ணப்பட்டது  என்ற வாதம் கூட  முன்வைக்கப்படுகிறது . ஆனால் இந்த வாதத்தில்  வலு  இருப்பதாக  தெரியவில்லை . ரிக் வேதத்தில்  மீண்டும் மீண்டும் காணப்படும் சாஷனா  என்ற சொல்லுக்கு "வெட்டுதல் " என்பதே  பொருளாகும் . இறைச்சி  வெட்டும் இடத்தை குறிக்கவும்  இச்சொல் பயன்படுத்தப்பட்டுருக்கிறது . கறவைப்  பசு உள்ளிட்டு  கடவுளுக்கு  நேர்ந்துவிடப்படாத விலங்குகளின் இறைச்சியும்  உண்ணப்பட்டிருக்கலாம்  என்ற பொருளையே  இது தருகிறது . இப்படி நடந்திருப்பதற்கான  சாத்தியம்  இருக்கிறது . காரணம்  உண்ணத்தக்க  இறைச்சி  வகைகளாக  பறவைகள் , மீன் , நீர்வாழ் உயிரினங்களோடு  சேர்த்து விட்டு விலங்குகள்  காட்டு  விலங்குகள்  என  மனதை  கவரும்  ஒரு பெரிய பட்டியலை வேத நூல்களும் , தர்ம  சூத்திர  நூல்களும்  தந்துள்ளன . அந்த பட்டியலில்  ஹாட்கா , சூகரா ,வராகா ,சரபா முதலியனவும்  அடங்கும் . தெய்வங்களுக்கு  நேர்ந்துவிட்ட  விலங்குகளை  தான் உண்ணவேண்டும் . என்ற  குறிப்பு  ஏதும்  இதில் இடம்பெற்றிருக்க வில்லை . வேள்விகள் போது  உயிரினங்களை துன்புறுத்தக்கூடாது  என்று சாந்தோக்ய உபநிடதம்  தடைவிதிருத்திருந்த  போதிலும் வேத சம் கிதங்களும்  அவற்றுக்குப்  பின் வந்த நூங்களும்  தந்துள்ள  உண்ணக்கூடிய  விலங்குகளின் பட்டியலை  பார்க்கும்போது  சடங்குகளோடு தொடர்புபடுத்திதான்  அனைத்து  வகை  இறைச்சிகளும்  உண்ணப்பட்டு  வந்தது  என்பது நம்பும்படியாக  இல்லை .  

நன்றி: பசுவின் புனிதம்-டி.என்.ஜா-தமிழில் வெ.கோவிந்தசாமி

பாரதி புத்தகாலயம் 

\r\n

Leave Comments

Comments (0)