“இந்தியாவின் உண்மை கதைகளை திரைப்படம் எடுங்கள்”-----மஜீத் மஜிதி

/files/detail1.png

“இந்தியாவின் உண்மை கதைகளை திரைப்படம் எடுங்கள்”-----மஜீத் மஜிதி

  • 1
  • 0

-V.கோபி


\r\nஉலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு மஜீத் மஜிதி பற்றிய அறிமுகம் தேவையில்லை.தற்போது இந்தியாவெங்கும் அவரது பெயர் ஒலிப்பதற்கு காரணம் சமீபத்தில் வெளியான அவரது Beyond the Clouds திரைப்படம்.இத்திரைப்படம் மும்பையின் மத்திய பகுதியில் எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் பாதி காட்சிகள் இந்தி மொழியில் உள்ளதால் இதை இந்தியப் படம் என்றே கூறலாம்.
\r\nமஜீத்தை பேட்டி எடுப்பது மிகவும் கஷ்டமானது.அவர் இந்தி,ஆங்கில மொழியை பேசுவதில்லை.எனக்கு மிர்சிராஜி சூர்யா என்ற மொழிபெயர்ப்பாளர் உதவி செய்தார்.ஆனால் இந்த அதிர்ஷ்டம் புகைப்பட நிருபரான பிராபத் ஷெட்டிக்கு கிடைக்கவில்லை.புகைப்படம் எடுப்பதற்காக எங்களுக்கு முன் மஜீத்தின் அறைக்குச் சென்ற ஷெட்டி மொழிபெயர்ப்பாளர் இல்லாமல் திண்டாடியிருப்பார்.இருந்தாலும் எடுத்த புகைப்படங்களை சோதித்து பார்த்த மஜீத், தான் சிரித்தவாறு இருந்த படத்தை தேர்ந்தெடுத்து பிராபத்தை தட்டிக் கொடுத்தார்.கலையும் மனித உணர்வுகளும் மொழிகளின் எல்லைகளைத் தாண்டியது தானே.இதைத்தான மஜீத்தின் திரைபடங்களும் நமக்கு கூறுகிறது.

2008ம் ஆண்டு வெளிவந்த மஜீத்தின் The Song of Sparrows அவரது அனைத்து திரைப்படங்களுக்கும் உதாரணமாக கூறலாம்.சிட்டுகுருவியைப் போல அவரது படத்தின் கதாபாத்திரங்கள் சிறியதாகவும்,சாதாரண மக்கள் உற்சாகமில்லாத வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை அவர் படத்தில் காணலாம்.நின்று நிதானமாக கேட்டால் மட்டுமே அவர்களின் வாழ்க்கை பாடல்களையும் அவர்களின் உலகத்தையும் காண முடியும்.சிறிய பெண் தனது ஷூவை தொலைத்த கதையோ அல்லது தன் மகளுக்காக காதுகேட்கும் கருவியை வாங்குவதற்கு நகரத்திற்குச் செல்லும் தந்தை கதையோ,மஜீத் இக்கதைகளை உயர்தரமான சினிமாவாக மாற்றி விடுகிறார்.

நம்மைச் சுற்றி ஏராளமான கதைகள் உள்ளதாக கூறும் மஜீத், “நேற்று சாலையின் ஓரத்தில் மனிதன் ஒருவன் சிறிய வாளியில் தண்ணீர் வைத்து குளிப்பதை பார்த்தேன்.ஹோட்டலில் பகட்டாக ஷவரில் குளிக்கும் என் வசதியை நினைத்து குற்ற உணர்வு கொண்டேன்.இருப்பதை வைத்து சந்தோஷமாக வாழும் அந்த மனிதன் என்னைவிட நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்”.
\r\nஇதைப்போன்ற உண்மை கதைகளின் தேடலே ஈரானிய சினிமா மேதையை இந்தியாவிற்கு வரவழைத்துள்ளது.“நகர வீதிகளில் கானும் மனித வாழ்வு என்னை மிகுதியாக கவர்கிறது.நடைபாதை ஓரத்தில் பெண் ஒருத்தி ரொட்டி சுடுகிறாள்.அவளை கடந்து பல மனித நடமாட்டங்கள் கடந்து சென்றாலும் அவள் கலக்கமடையாமல் இருக்கிறாள்.மக்களை நெருக்கமாக அவர்களின் இடத்தில் பார்ப்பது எனக்கு மிகுந்த விருப்பம்.மும்பையின் வீதிகளில் நம் பார்வையை மறைக்க எந்த சுவரும் இல்லை.என் முன்னே பல கதைகள் நடைபெறுகின்றன.இதனை வெள்ளித்திரைக்கு ஏற்றவாறு நான் கூறவேண்டும்” என்கிறார் மஜீத்.

இந்தியா,ஈரானுக்கு இடையிலான கலாச்சார மற்றும் மொழி ஒற்றுமையின் காரணமாகவும் மஜீத் இந்தியாவிற்கு வந்திருக்க கூடும்.“சத்யஜித் ரே திரைப்படத்தின் மூலமாகவே இந்தியாவும் இந்திய சினிமாவும் எனக்கு அறிமுகமாயின.வாழ்க்கையின் கூறுகளை திரைப்படமாக்கும் ரேயின் சினிமா என்னை அதிகமாக பாதித்துள்ளது.ஆனால் இவை எதுவும் பாலிவுட் சினிமாவில் எதிரொலிக்கவில்லை.வாழ்க்கையை நாம் எப்படி காண்கிறோம் அதனை திரையில் எவ்வாறு காட்சிபடுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம்.உணமையான இந்திய கதைகளை நம்பகமான திரைகதையின் மூலமாக கலைநயத்தோடு கூற வேண்டும்” என மஜீத் இந்திய இயக்குனர்களுக்கு அறிவுறை கூறுகிறார்.

இஸ்லாமிய வழிமுறைகளை அழகாக காட்சிப்படுத்தும் மஜீத்தின் திரைப்படம் அதன் தவறான அம்சத்தையும், குறிப்பாக அரசியல் மயமாக்கப்பட்ட இஸ்லாமிய வடிவத்தையும் தனது திரைப்படத்தின் மூலமாக கவனப்படுத்துகிறார்.ஆனால் அதனை குறியீட்டின் மூலம் காண்பிக்கிறார்,இது அவர்களது நாட்டின் இலக்கிய பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது.
\r\n“எங்களது வளமான இலக்கியத்தில் குறிப்பாக எங்களது மாய கவிஞர்களிடம் இருந்து நாங்கள் பலவற்றை உள்வாங்கி கொள்கிறோம்.இதேப்போன்று இந்திய இலக்கியமும் வளமானதே.ஆனால் இதுவரை எந்த இந்திய இயக்குனரும் இலக்கியத்திலிருந்து தூண்டுதல் பெற்றதாக கூறி நான் பார்த்ததில்லை”.

“இந்தியாவில் திறமைக்கு பஞ்சமில்லை.கடந்த வருடங்களில் பல திறமையான இந்திய இயக்குனர்களை சந்தித்துள்ளேன்.முதலில் பணம் வசூலிக்கும் திரைப்படத்தை எடுத்துவிட்டு பின்னர் கலைநயமிக்க படங்களை இயக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.ஆனால் ஒருபோதும் அது நடக்காது.ஒருமுறை பாலிவுட்டில் விழுந்த பின் மீறி எழுவது முடியாத காரியம்” என எச்சரிக்கிறார்.
\r\nதனது நாட்டின் திரைத்துறையைப் பற்றி கூறும் மஜீத், “படத் தயாரிப்பாளர் வசூலில் மட்டுமே குறியாக இருப்பார்.இதனால்தான் எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அரசாங்கம் மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவு வேண்டும்.ஈரானில் கலை சினிமாவிற்கு நிதி அளிக்க அமைப்புகள் உள்ளன.நாங்கள் நமப்க்கூடிய எங்களுக்கு விருப்பமான படங்களை எடுக்க இவை உதவி புரிகின்றன.குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் உள்ளூர் அமைப்பு ஒன்று அப்பாஸ் கிராஸ்தாமியின் படத்திற்கு உதவி புரிகிறது.அப்பாஸின் அனைத்து படமும் வசூலை குவிப்பதில்லை.இருந்தாலும் அவருக்கு உதவி கிடைப்பதால் தொடர்ந்து படம் இயக்குகிறார்.வசூலை குவிக்கும் படங்களை எடுக்க நினைத்திருந்தால் கிராஸ்தாமியை நமக்கு யாரென்றே தெரியாமல் போயிருக்கும்” என்கிறார்.பாலிவுட் சினிமாவை நன்கு அறிந்திருந்த மஜீத்திடம், கடைசியாக நீங்க்ள் பார்த்த உங்களுக்கு பிடித்த திரைப்படம் என்ன என்று கேட்டதற்கு, பல திரைப்படங்கள் பார்த்தேன்,ஆனால் ஒன்றும் பிடிக்கவில்லை.என்று நேர்மையாக கூறுகிறார்.

தணிக்கை முறைக்கு எதிராக மஜீத்தும் பல இயக்குனர்களும் ஈரானில் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள்.ஆனால் இந்த சினிமா மேதைக்கு இந்தியாவிலும் தணிக்கை எளிதாக கிடைக்கவில்லை.”மத்திய தணிக்கை வாரியம் தன் படத்தில் உள்ள சில குறிப்பிட்ட வார்த்தைகளை அமைதியாக்குமாறு கூறியது” என்று சிரிக்கிறார்.மனிதர்கள் பேசும் மொழியை பயன்படுத்த முடியாவிட்டால் யதார்த்த சினிமா எப்படி எடுக்க முடியும்.

அரசாங்க தணிக்கை எந்தவித நியாயமும் இல்லாமல் இருப்பதை நினைத்து வேதனைப்படுகிறார் மஜீத்.சில வருடங்களுக்கு முன்பு ஆவணப் படம் எடுத்து தருமாறு சீன அரசு கேட்டு கொண்டதன் பேரில் பல இயக்குனர்கள் அடங்கிய குழுவில் நானும் இருந்தேன் என நினைவு கூறும் மஜீத் “தின்னமான் சதுக்கத்தில் படம் எடுக்க நான் விரும்பினேன்.எனது கேமராவினை தயார் படுத்தி கொண்டிருக்கும் போது அரசாங்க உறுப்பினர் ஒருவர் என்னிடம் வந்து இடதுபுறத்தில் இருந்து படம் எடுக்ககூடாது எனவும் வலது புறம் இருந்தே படம் எடுக்க வேண்டும் என்று கூறினார்.1989ம் ஆண்டு இந்த சதுக்கத்தில் நடந்த போராட்டத்தின் போது கிளர்ச்சியாளர்கள் இடதுபுறமிருந்தே அணிவகுத்த காரனத்தினால் சதுக்கத்தை இடது வாக்கில் காண்பிக்ககூடாது என்பதை தெரிந்து கொண்டேன்.இது ஒரு அபத்தமான முடிவு.தடுப்பது என முடிவு செய்தால் ஒரு அறிவுத்தன்மையோடு செயல்பட வேண்டும். 

கலை சுதந்திரத்திற்காக ஆதரவளிக்கும் மஜீத்தும் கூட டேனிஷ் நாட்டு பத்திரிக்கை ஒன்று முகமது நபியை தவறாக வரைந்திருந்ததை கண்டித்து டென்மார்க்கில் நடந்த திரைப்பட விழாவினை புறக்கணித்தார்.“முதலில் கலைஞன் என்பவன் அனைத்து கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும்.நாம் எல்லாவற்றையும் பற்றி கேள்வி கேட்கலாம்,ஆனால் முதலில் அவற்றை மதிக்க வேண்டும்.ஒருவரை கேலி செய்வதின் மூலமோ அவமானப்படுத்துவதின் மூலமோ நாம் பெரிய கலைஞராக முடியாது.அதே சமயத்தில் கற்பனை வளத்தை தடை செய்வது அரசாங்கத்தின் வேலை கிடையாது.அது கலைஞனிடம் இருந்து வரவேண்டும்.அதுவே அடிப்ப்டை.எனக்கென்று அறம் உள்ளது.என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் சுதந்திரம் என்னிடம் இருக்கிறது என்றாலும்,அந்த உரிமையின் மூலம் அடுத்தவர்களைக் காயப்படுத்த மாட்டேன்” என்று தீர்க்கமாக கூறுகிறார் மஜீத். 
\r\n 

நன்றி https://www.hindustantimes.com/brunch/get-real-bollywood-acclaimed-iranian-director-majid-majidi-points-out-flaws-in-our-filmmaking/story-9BJcExmucakY3DnnjCaNGM.html

\r\n

Leave Comments

Comments (0)