லைக்காவும் -ராஜபக்சேவின் தொடர்பும்

/files/detail1.png

லைக்காவும் -ராஜபக்சேவின் தொடர்பும்

  • 9
  • 0

-V.கோபி

கத்தி படத்தை தயாரிப்பது லைக்கா நிறுவனமாகும்.இது லண்டனை தலைமையிடமாக கொண்ட லைக்கா மொபைல் குழுமத்தினைச் சேர்ந்ததாகும்.இதன் தலைவர் இலங்கையைச் சேர்ந்த சுபாஸ்கரன் அலிராஜா.இதற்கு முன் ஞானம் புரொடக்சன்ஸ் என்ற பெயரில் ‘பிரிவோம் சந்திப்போம்’ படத்தை எடுத்தனர்.

இலங்கை ஆளும் கட்சி குடும்பத்தினருடன் சுபாஸ்கரன் நெருக்கமான உறவு கொண்டவர் என்ற குற்றச்சாட்டைக் கூறி பல தமிழ் குழுக்கள் கத்தி படத்தை எதிர்த்து வருகின்றன.இந்த படத்திற்கு ராஜபக்சே பண உதவி புரிகிறார் என்றும் குற்றச்சாட்டு சுமத்தப்டுகிறது.

                     alt text

இங்கிலாந்தில் தொழில் புரிந்தாலும் தன் சொந்த நாடான இலங்கையின் தொடர்பை முழுவதுமாக விட்டுவிடவில்லை.2013ம் ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் வர்த்தக மாநாட்டிற்கு ஆதரவளித்தது லைக்கா மொபைல்.மேலும் அவரின் ஞானம் பவுண்டேசன் பல தொண்டுகளை வடக்கு இலங்கையில் செய்து வருகிறது.
\r\nராஜபக்சே உறவினரான ஹிமால் ஹெட்டியராச்சியின் பெயரில் உள்ள நிறுவனத்தில் 95 சதவிகித பங்கு லைக்கா நிறுவனத்துடையது என இலங்கை ஊடகம் குற்றச்சாட்டு எழுப்பி வருகிறது.2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ’சண்டே லீடர்’ பத்திரிக்கையின் ரஞ்சித் ஜெயசுந்தரா என்பவர் “மில்லியன் டாலர் ஒப்பந்தமும் ராஜபக்சேவின் தொடர்பும்” என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டார்.இந்த பத்திரிக்கையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கே 2009ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது. 

 அந்த செய்தி கட்டுரையில் பொதுத்துறை நிறுவனமான இல்ங்கை டெலிகாம் மற்றும் ஸ்கை நெட்வொர்க் இணைந்து தொழில் புரிய போவதாகவும் இந்த ஸ்கை நெட்வொர்க்கில் தான் 95 சதவிகித பங்கை லைக்கா வைத்திருப்பதும் இதன் நிறுவன உறுப்பினர்களில் ராஜபக்சேயின் உறவினரும் ஒருவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.லைக்கா அலுவலர்கள் மிலிண்ட் காங்க்லே மற்றும் கிறிஸ்டோபர் டூலே ஆகிய இருவரும் ஸ்கை நெட்வொர்க்கின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.

                                    alt text

தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இக்கட்டுரை மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
\r\n-------------------------------------------------------------------------------------------------------------
\r\nSLT நிறுவனம் வை-மேக்ஸ் சேவையை பெறுவதற்கு தேவையான எல்லா வழிமுறைகளையும் சோதித்துப் பார்த்துவிட்டு இலங்கையில் வை-மேக்ஸ் சேவையை தொடங்குவதற்கு காத்திருந்தது.இதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை வாரியத்திடம் வை-மேக்ஸ் அலைக்கற்றைக்கு அனுமதி கோரியிருந்தது.ஆனால் பல நினைவூட்டலுக்கு பின்னும் அலைக்க்ற்றை பெறுவதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.ஏற்கனவே டையலாக் பிராட்பேண்ட் மற்றும் சண்டெல் நிறுவங்கள் வை-மேக்ஸ் சேவையை கொடுத்து வருகிறது.இச்சேவையில் யார் முதலில் சந்தையில் சேவையை கொடுக்கிறார்களோ அவர்களுக்கே நன்மை என்னும் சுழலில் SLT நிறுவனம் பின்தங்கியுள்ளது.
\r\nஇங்கிலாந்தில் உள்ள லைக்கா நிறுவனம் தனது துணை நிறுவனமான ஸ்கை நெட்வொர்க்(95% பங்கு) மூலம் SLT நிறுவனத்தை வாங்க முயற்சி செய்தது.ஏற்கனவே ஸ்கை நெட்வொர்க் வை-மேக்ஸ் அலைக்கற்றை உரிமையை இலங்கை முழுதும் பெற்றுள்ளது.இதற்கு SLT நிறுவனமும் சம்மதம் தெரிவித்தது.
\r\n2.ஸ்கை நெட்வொர்க் பற்றி சில தகவல்….
\r\n95% பங்கு லைக்கா நிறுவனம்
\r\n5% பங்கு ஹிமால் லாலேந்திரா(ராஜபக்சே உறவினர்)
\r\nஉறுப்பினர்கள்:

1.மிலிண்ட் காங்க்லே—லைக்கா மொபைலின் தலைமை அதிகாரி
\r\n2.கிறிஸ்டோபர் டுலே
\r\n3.ஹிமால் லாலேந்திரா

வை-மேக்ஸ் அலைக்கற்றை
\r\n1.2400-2430 Mhz (ஈலங்கை முழுவதும்)
\r\n2.5470-5850 Mhz(கொழும்புவை சுற்றியுள்ள நகரங்கள்)
\r\nபங்கு கையகப்படுத்துதலின் பொருட்டு ஸ்கை நெட்வொர்க்கின் மதிப்பிடலுக்கு எர்னஸ்ட் & யெங்க் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்யுமாறு அனுமதி அளிக்கப்பட்டது.
\r\nசோஜி தகாஷி
\r\nதலைமை அதிகாரி
\r\n29 ஜூன் 2007
\r\nசெப்டம்பர் மாதம் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் தனக்கும் ராஜபக்சேவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தன் இரண்டு நாள் வருமானமே இப்படத்தை தயாரிக்க போதும் என்றார்.

அவர் வருமானத்தை பற்றி பொய் கூறவில்லை.2013ம் ஆண்டு இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் சுபாஸ்கரனின் சொத்து மதிப்பு 180 மில்லியன் யுரோக்கள் என்றது.2012ம் ஆண்டு லைக்காவின் சுபாஸ்கரன் இங்கிலாந்தின் ஸ்டார்டிரோக் டிரைவில் உள்ள வீட்டை விலைக்கு வாங்கி அதை இடித்துவிட்டு திரையரங்கம்,நீச்சல்குளம்,பத்து படுக்கை அறைகளைக்கொணட வீட்டை கட்டப்போவதாகவும் ஆனால் அருகில் உள்ள மக்கள் அதற்கு பலத்த எதிப்பு தெரிவித்ததாகவும் இங்கிலாந்தச் சேர்ந்த சமூக பத்திரிக்கையான ‘கார்டியன் சீரியஸ்’ கூறுகிறது.
\r\nசுபாஸ்கரனின் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடமே ஆகிறதென்றாலும் அதன் ஆண்டு வருமானம் 120 மில்லியன் யுரோக்கள்.செல்பேசி மெய்நிகர் வலையமைப்பில்(MNVO) லைக்கா முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும் என இங்கிலாந்தச் சேர்ந்த இணயதளம் ஒன்று கூறுகிறது.

2013ம் ஆண்டு இங்கிலாந்தி கிரிக்கெட் வீரர் இயன் போத்தம், ”பவுண்டேசன் ஆஃப் குட்னஸ்” என்னும் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்ப்பதற்காக இலங்கையில் 160 மைல் நடைபயணம் சென்றார்.இதற்கு முழு ஸ்பான்சர் லைக்கா நிறுவனமாகும்.லைக்கா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிஸ் டுலேவும் இயன் போத்தமோடு சேர்ந்து சில மைல்கள் நடந்தார்.அதுமட்டுமல்லாமல் டுலே ராஜபக்சேவின் மகனோடும் நடைபயணத்தில் கலந்துகொண்டார் என்ற செய்தி லைக்காவிற்கும் ராஜபக்சேவிற்கும் உள்ள தொடர்பில் மேலும் சந்தேகத்தை கூட்டியது.

“பவுண்டேசன் ஆஃப் குட்னஸ்” க்கும் ராஜபக்சேவிற்கும் என்ன தொடர்பு இருக்கும்??இந்த தொண்டு நிறுவனத்தை தொடங்கியவர் குஷில் குண்சேகரா என்பவர்.இது சிங்களர்கள் அதிகம் உள்ள தென் இலங்கையில் இயங்குகிறது.இத்தொண்டுநிறுவனத்தின் பொருப்பாளராக கிரிக்கெட் வீரர் முரளிதரன் இருந்தபோது அவரின் வேண்டுகோள்படி வடக்கு இலங்கையின் மணிக்குளம் பகுதியில் 50 ஏக்கர் நிலத்தை “பவுண்டேசன் ஆஃப் குட்னஸ்”க்கு ராஜபக்சே ஒதுக்கினார்.ஆனால் இப்போது ராஜபக்சேவிற்கு நெருக்கமான ஒருவர் தொண்டு நிறுவனத்தின் பொருப்பாளராக ஆன பின்பு போர் பாதிப்புக்குள்ளான வடக்கு இலங்கையில் இந்நிறுவனம் முழுமூச்சில் இயங்குகிறது.

நாங்கள் தொண்டு நிறுவனத்திற்கு தானே உதவி புரிகிறோம் என்று லைக்கா கூறலாம்.ஆனால் அது ராஜபக்சேவிற்கு நெருங்கிய தொடர்புடையது என்பதே இங்கு முக்கியம்.
\r\nபல தொண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டு நபர்களுக்கும் கிடைக்காத சலுகை எப்படி ஞானம் அமைப்பிற்கு மட்டும் வடக்கு இலங்கையில் செயல்பட கிடைத்தது என்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சுபாஸ்கரனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் கூறுகையில் தங்கள் அமைப்பிற்கு எந்த அரசியல் ஆதாய நோக்கமும் கிடையாது அதனால் அனுமதி கிடைத்திருக்கிறது என்றார்.ஆனால் ரெட் கிராஸ் அமைப்பிற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
\r\n 

நன்றி : http://www.theweekendleader.com/Headlines/2988/special-lyca-network-and-rajapaksa-connections-.html

\r\n

Leave Comments

Comments (0)