காதல்: தலித் இளைஞர் கொலை!

/files/detail1.png

காதல்: தலித் இளைஞர் கொலை!

  • 1
  • 0

-வித்யா

உத்திரபிரதேசத்தில் தனது  மகளைக் காதலித்த தலித் இளைஞரை அடித்துக் கொன்ற தந்தையைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேச மாநிலம் முஸாபர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் குப்தா. இவரது மகள், பசான் சிங் காலனி பகுதியைச் சேர்ந்த விகாஷ் (18)  என்ற தலித்  இளைஞரைக் காதலித்துவந்தார். இவர்களின் காதலுக்கு அனில் குப்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை விகாஷ் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விகாஷின் உடலைப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில் அனில் குப்தா, மகளைக் காதலித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்து விகாஷை கொலை செய்தது தெரியவந்தது.  இதையடுத்து குப்தாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

விகாஷின் உடலை நேற்று(மே 08) உறவினர்களிடம் ஒப்படைப்பட்டது. காதலியின் தந்தையால் இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

\r\n

Leave Comments

Comments (0)