புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான்,ரசிகர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

/files/detail1.png

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இர்ஃபான் கான்,ரசிகர்களுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

  • 0
  • 0

 

-V. கோபி 

பிரபல நடிகர் இர்ஃபான் கான் தனக்கு புற்றுநோய் வந்திருப்பதாகவும் அந்நோய்க்கு எதிராக போராடி வருவதாகவும் மார்ச் மாதம் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் மனம் உருகி எழுதியுள்ளார்.அதில் வாழ்வின் நிச்சியமற்ற தன்மை பற்றியும் துயரத்தோடு கூறியுள்ளார்.தனக்கு வந்துள்ள ‘அரிதான புற்றுநோயினால்’ பலவற்றை புரிந்துகொள்ள முடிந்ததாக கூறும் இர்ஃபான்,தனக்கு வந்துள்ள ‘அரிதான புற்றுநோயின்’ பெயர் தான் உபயோகிக்கும் சொற்களில் புதிதாக சேர்ந்துள்ளதை அக்கடிதத்தில் விவரிக்கிறார்.

தன் தலைமுறையின் சிறந்த நடிகராக பாரட்டப்படும் இர்ஃபான், “பிரமிப்பூட்டும் தன் திரைப்பட தொழிலில் கனவுகளை துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் போது, ஓடும் ரயிலில் திடீரென்று டிக்கெட் பரிசோதகர் வருவதைப் போன்ற அதிர்ச்சி தனக்கு ஏற்பட்டதை” குறிப்பிடும் இர்ஃபான்,
\r\n“திடீரென ஒருவர் நமது தோளில் தட்டி டிக்கெட் பரிசோதகர் என்கிறார்.

நான் திரும்பி பார்த்ததும்,நீங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதாக கூறுகிறார்.
\r\nநான் குழம்பியபடி,நான் இறங்க வேண்டிய இடம் இதுவல்ல என்கிறேன்.

அதற்கு அவர்,இல்லை,நீங்கள் இறங்க வேண்டிய இடம் இதுதான்.சில நேரங்களில் இப்படித்தான் நடக்கும் என்றார்”
\r\nதனக்கு நேர்ந்ததை நினைக்கும் போது மனித வாழ்க்கை என்பது ஆழக்கடலில் நீரோட்டத்தை எதிர்த்து மிதக்கும் மரப்பட்டை போன்றதாக கூரும் இர்ஃபான்,தனக்கு ஏற்பட்ட வலியும் வேதனையும் எவ்வாறு தன்னுடைய வலிமையாக மாறியது என்பதையும் கூறுகிறார்.அவர் சிகிச்சை பெறும் மருத்துவமணை ‘கிரிக்கெட்டின் மெக்கா’ என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்திற்கு எதிர்பக்கம் இருப்பது அவருக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது.
\r\n“எனது மருத்துவமணை அமைந்திருக்கும் சிறப்பிடம் என்னை பாதிக்கிறது.வாழ்வில் நிச்சியமற்ற தன்மையே எப்போதும் நிலையானது.இந்த சமயத்தில் என் பலத்தை புரிந்து கொண்டு எனது போட்டியை சிறப்பாக விளையாடவேண்டும்” என கூறுகிறார்.

அடுத்த நாள் நிச்சியமில்லை என்று தெரிந்தபோது உண்மையான சுதந்திரத்தை உணர்ந்து கொண்டதாக கூறும் இர்ஃபான்,“முதல்முறையாக உண்மையான சுதந்திரத்தை அணுபவிக்கிறேன்.மிகப்பெரிய சாதனை செய்ததாக உணர்கிறேன்.வாழ்வின் மாய பக்கத்தை முதல்முறையாக ரசிக்கிறேன்.பிரபஞ்சத்தின் அறிவாற்றலின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்கிறேன்.என்னுடைய ஒவ்வொரு செல்லிலும் புகுந்திருப்பதை உணர்கிறேன்”

உலகம் முழுவதும் உள்ள தன் ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதோடு அவர்களின் பிராத்தனை தான் நோயை எதிர்த்து போராடும் சக்தியை தனக்கு கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த வருட தொடக்கத்தில் தனக்கு வந்த உடற்கோளாறை தொடர்ச்சியான டிவீட்கள் மூலம் வெளிப்படுத்திய இர்ஃபான் கான், “சில அதிர்ச்சிகள் நம் வாழ்க்கையையே ஆட்டம் கான வைத்துவிடுகின்றன.கடந்த 15 நாட்களாக என் வாழ்வு பரபரப்பான கதை போல் உள்ளது.அரிதான கதைகளை நான் தேடியதால் தான் எனக்கு அரிதான நோயும் வந்துள்ளது என்னவோ.என் வாழ்நாளில் எதற்கும் நான் விட்டு கொடுத்ததில்லை.ஆகவே இப்போராட்டத்தையும் நான் கைவிடப் போவதில்லை.என் குடும்பமும் நண்பர்களும் என்னோடு உடனிருக்கிறார்கள்.இந்த சோதனையான காலகட்டத்தில் தயவுசெய்து எந்த அனுமானமும் செய்யாதீர்கள். இன்னும் பத்து நாளில் எனக்கு வந்திருக்கும் நோயைப் பற்றி முழுமையாக கூறுகிறேன்” என டிவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
\r\n 

\r\n

Leave Comments

Comments (0)