அமித் ஷாவை சந்திக்க மறுத்த கலைஞர்கள்

/files/detail1.png

அமித் ஷாவை சந்திக்க மறுத்த கலைஞர்கள்

  • 0
  • 0

-தமிழில் V.கோபி 

கொல்கத்தாவின் கலை மற்றும் கலாச்சார துறையைச் சேர்ந்த புகழ்பெற்ற கலைஞர்கள் பலர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷாவை சந்திக்க மறுத்துள்ளனர்.

தெற்கு கொல்கத்தாவில் உள்ள அரங்கத்தில் வைத்து இக்கலைஞர்களை அமித் ஷா சந்திப்பதாக இருந்தது.பலரும் அவரது அழைப்பை ஏற்றுகொண்டாலும்,அமித் ஷாவை சந்திக்கவோ அல்லது வங்காள எழுத்தளரான பக்கிம் சந்திர சட்டோபத்யா பற்றி அவர் ஆற்றப்போகும் உரைக்கோ செல்ல மறுத்து விட்டனர்.

நிச்சியம் இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்து கொள்வார்கள் என மாநில பாரதிய ஜனதாவினர் நம்பிக்கையோடு உள்ளனர்.இரண்டு நாள் பயனமாக மேற்கு வங்காளம் வரவுள்ள அமித் ஷாவை வைத்து பல நிகழ்ச்சிகளை மாநில பாரதிய ஜனதா கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதில் முக்கியமான நிகழ்ச்சியாக,வந்தே மாதரம் பாடலை எழுதிய பக்கிம் சந்திர சட்டோபத்யா நினைவாக உரை நிகழ்த்த இருக்கிறார்.இந்நிகழ்ச்சியை டெல்லியிலுள்ள சியாமா பிராசாத் முகர்ஜி ஆய்வு நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சி முடிந்த பின்பு பல கலைஞர்களையும் குடிமை சமூகத்தினரையும் சந்திக்க உள்ளார்.

தன்னை பாரதிய ஜனதாவின் தேசிய செயலாளர் ராகுல் சின்ஹா அமித் ஷாவின் நிகழ்ச்சிக்கு அழைத்ததாகவும் தான் பங்கேற்க முடியாது என மறுத்துவிட்டதாக நடிகர் சவுமித்ரா சட்டர்ஜி கூறுகிறார்.அப்போது "பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கருத்து கூறியதோடு குறிப்பிட்ட மதத்தை நோக்கி பாரதிய ஜனதாவினர் அரசியல் செய்வதாகவும்" நடிகர் கூறியதாக அவரோடு உடனிருப்பவர்கள் கூறுகின்றனர்.

தன்னை மூத்த பாரதிய ஜனதா தலைவர் முகுல் ராய் சந்தித்ததாக கூறும் எழுத்தாளரும் நாடக இயக்குனருமான மனோஜ் மித்ரா, "அவர் என்னை பக்கிம் சந்திர நிகழ்ச்சிக்கு அழைத்தார்.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.ஆனால் என்னால் பங்கேற்க முடியாது என அவரிடம் கூறிவிட்டேன்" என்கிறார்.

இதுவரை யாரெல்லாம் அமித் ஷாவை சந்திக்க போகிறார்கள் மற்றும் அவரது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகிறார்கள் என்பதை செவ்வாய்கிழமை மாலை வரை பாரதிய ஜனதாவினர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கவில்லை.

"650க்கும் மேற்பட்ட அறிஞர்கள் அமித் ஷா நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.ஆளும் கட்சியிலிருந்து பல அழுத்தங்கள் அக்கலைஞர்கள் மீது கொடுப்பதால் இப்போதைக்கு கலந்து கொள்ளும் நபர்களின் பெயர்களை வெளியிட முடியாது.அவர்களின் பெயரை வெளியிட்டால் திரினமுல் காங்கிரஸ் கட்சியனர் அவர்களை அச்சுறுத்தும் வாய்ப்பு உள்ளது" என பாஜகவின் அறிஞர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பங்கஜ் ராய் கூறுகிறார்.

அமித் ஷாவை சந்திக்க மறுத்த கலைஞர்கள்:

சவுமித்ரா சட்டர்ஜி,முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் கங்குலி,எழுத்தாளர் சந்தோஷ் ரானா,நாடக நடிகர்கள் ருத்ரபிரசாத் சென்குப்தா,சந்தன் சென் மறறும் மனோஜ் மித்ரா,பாடகர் அமர் பால்,ஓவியர் சமிர் ஆச் ஆகியோர்.

 நன்றி : THE HINDU


 

Leave Comments

Comments (0)