“ஃபார்ச்சூனர் கார் தான் வேண்டும்”-பிடிவாதம் பிடிக்கும் அமைச்சர்

/files/detail1.png

“ஃபார்ச்சூனர் கார் தான் வேண்டும்”-பிடிவாதம் பிடிக்கும் அமைச்சர்

  • 0
  • 0

-V.கோபி

அரசியல்வாதிகள் மக்கள் வரிப்பணத்தில் தங்களை பகட்டாக காட்டி கொள்வதில் இந்தியாவில் ஒன்றும் புதிய விஷயம் அல்ல.ஆனால் கர்நாடக அமைச்சர் ஒருவர் இதையெல்லாம் மிஞ்சிவிட்டார்.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் குமாரசாமி அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராக இருக்கும் சமீர் அகமது கான், தனக்கு கொடுக்கப்பட்ட இன்னோவா கார் வேண்டாமென்றும் ஃபார்ச்சூனர் கார் தான் வேண்டும் என பிடிவாதம் பிடித்து வருகிறார்.தான் இதுவரை பெரிய காரை மட்டுமே உபயோகப்படுத்தியதால், ஃபார்ச்சூனர் போன்ற பெரிய காரே வேண்டும் என  இதற்கு காரணம் கூறுகிறார்.

“நான் சிறு வயதிலிருந்து பெரிய காரிலேயே பயணம் செய்து வருகிறேன்.எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இன்னோவா கார் மிகவும் சிறியதாக உள்ளது.முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவிற்கு கொடுத்ததைப் போல் எனக்கும் ஃபார்ச்சூனர் கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என அகமது கான் கூறுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “முதலமைச்சர் குமாரசாமியை அனைவருக்கும் தெரியும்.அவர் பிரபலமாக இருப்பதால் அவருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை.நான் இப்போதுதான் அமைச்சராகி உள்ளேன்.இது போன்ற வாய்ப்புகள் எப்போதும் கிடைக்காது.எனக்கும் பிரபலம் ஆக வேண்டும் என ஆசை இருக்கிறது”

“மக்கள் எங்களை அடையாளம் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் சாதாரன காரில் சென்றால் மக்கள் என்னை கண்டு கொள்வார்களா?இதுபோன்ற பெரிய அரசாங்க காரில் சென்றால் தான்,மக்களும் அமைச்சர் போகிறார் என பார்பார்கள்” என்கிறார் அகமது கான்.

கடைசியில் அவர் விருப்பத்திற்கு பணிந்த அரசாங்கம்,ஃபார்ச்சூனர் காரை ஒதுக்கியுள்ளது. 

Link: https://www.indiatimes.com/news/india/karnataka-minister-demands-a-fortuner-because-he-feels-innova-is-a-low-level-car-347901.html


\r\n 

\r\n

Leave Comments

Comments (0)