காலா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மந்தம்

/files/detail1.png

காலா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு மந்தம்

  • 0
  • 0

-V.கோபி

காலா படத்திற்கான டிக்கெட் முன்பதிவு சென்னை உட்பட தமிழ்நாட்டு திரையரங்குகளில் மந்தமாக உள்ளது.ரஜினிகாந்த் படத்திற்கா இந்த நிலை என்கிறபோது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.பல திரையரங்கில் ஜூன் 7 மற்றும் 8ம் தேதி ஆகிய இரு தினங்கள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.


\r\nபல திரையரங்கில் வார இறுதி நாட்களுக்குகூட முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.இதற்கு முன் ரஜினி படத்திற்கு இதுபோல் நடந்ததேயில்லை.இப்போது நீங்கள் முயற்சி செய்தால் கூட முதல் நாள் காட்சிக்கான டிக்கெட் உங்களுக்கு கிடைக்கும்.ஆந்திராவிலும் இதே நிலைமையே உள்ளது.


\r\nசூப்பர்ஸ்டாரின் திரைப்படம் வெளியாவது அவரது ரசிகர்களுக்கு தீபாவளி கொண்டாத்தைப் போன்றது. கபாலி படம் வெளியானபோது சென்னையில் உள்ள காசி திரையரங்கில் காலை 4 மணிக்கே சென்று வெடிவெடித்து கொண்டாடியதை நாம் பார்த்திருப்போம்.ரசிகர்கள் ரஜினியின் கட்-அவுட்டிற்கு பாலபிஷேகம் செய்தார்கள்.பல தகவல் தொழல்நுட்ப நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்குகாக மொத்தமாக டிக்கெட் முன்பதிவு செய்தது.


\r\nஆனால் காலா படத்தின் வெளியீடு எந்த ஆராவாரமும் இன்றி அமைதியாக உள்ளது.ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கடந்த டிசம்பர் மாதம் அரசியலுக்கு வருவதாக ரஜினி அறிவித்தபின் வெளியாகும் அவரது முதல் படம் இது.காலா படம் அரசியல் படம் அல்ல என ரஜினி கூறினாலும் பல அரசியல் பஞ்ச் வசனங்கள் கட்டாயம் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
\r\nபாக்ஸ் ஆபிஸ் கிங் என்று அழைக்கப்படும் ரஜினியின் படத்திற்கு தமிழ்நாட்டில் ஏன் இந்த மந்தநிலை?


\r\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி தொடர்ந்து நடிக்கும் இரண்டாது படம்.இப்படத்திற்கும் சந்தோஷ் நாரயணனே இசை.காலா படத்தின் பாடல்கள் கபாலி படத்தையே ஞாபகப் படுத்துகின்றன.பாடல்கள் அனைத்து சத்தமும் கூச்சலுமே நிரம்பியுள்ளன.ரஜினியின் கதாபாத்திரம் அனைத்து மக்களுக்கும் பிடிக்கும் என்று காலாவின் தயாரிப்பாளரும் நடிகருமான தனுஷ் கூறினாலும் களத்தில் இது ரஜினி படமல்ல ரஞ்சித்தின் படம் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. காலாவின் டிரெய்லர் கபாலியின் டீஸர் அளவிற்குகூட மக்களிடம் சென்றடையவில்லை.
\r\nகாலா படத்தில் மும்பையின் தாராவி பகுதியின் தாதாவாக,மக்களை ஒன்றுதிரட்டி அரசியல்வாதிகளுக்கு எதிராக போராட தூண்டும் நாயகனாக ரஜினி நடித்துள்ளார்.தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைகள் தங்கள் நிலங்களை,தண்ணிரை,சுற்றுச்சூழலை மாசுபடுத்தி விட்டதாக கூறி அலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்துள்ள நிலையில் காலா படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.


\r\nபுதிதாக அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினி தன் படத்தில் நடித்திருப்பதை போல தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக இருப்பார் என்று நினைத்திருந்தார்கள்.ஆனால் தூத்துக்குடிக்குச் சென்ற ரஜினி,மக்களின் போராட்டத்தின் போது சமூக விரோதிகள் உள்ளே புகுந்து ஆட்சியர் அலுவலகத்தையும் காவலரையும் தாக்கி வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள்.இவர்களை இரும்புகரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.


\r\nஎதெற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்றும் கோபமாக கூறியுள்ளார்.அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை திரையில் நடிக்கும் நடிகர் என புரிந்து கொண்டாலும் திரையிலும் நிஜத்திலும் ரஜினியின் வேறுபாட்டை மக்கள் சரியாக எடுத்து கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.


\r\nகபாலி படத்தின் தயாரிப்பாளர் தானு படத்தை சந்தைப்படுத்துவதில் நிபுனர்.ரஜினி நடிகராக வளர்ந்து வரும் காலகட்டத்திலேயே அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளில் ரஜினிக்காக கட்-அவுட் வைத்தார்.கபாலி படத்திற்காக ரசிகர்களை பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அழைத்து வர ரஜினி படம் வரையப்பட்ட ஏர் ஏசியா விமானத்தை ஒப்பந்தம் செய்திருந்தார்.இது படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியது மட்டுமல்லாமல் கபாலி படம் வசூலிலும் வெற்றியடைந்தது.எஸ்கிமோக்களிடமே பனிக்கூழ் பெட்டியை விற்கும் திறமை படைத்தவர் தானு என ஒருவர் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.ஆனால் காலா படத்திற்கோ எந்த ஆடம்பர விளம்பரமும் செய்யவில்லை. 


\r\nகாலா படம் முதலில் ஏப்ரல் மாதம் வெளியாவதாக இருந்தது.அப்போது பள்ளி விடுமுறை காலமாக இருந்ததால் படம் வசூலை குவித்திருக்கும்.தற்போது பள்ளிகள் திறந்துவிட்ட நிலையில் குடும்ப பார்வையாளர்கள் வார நாட்களில் வருவது கஷ்டமே.


\r\nகாலா படத்தோடு சேர்த்து இந்த வாரம் Jurassic world: Fallen kingdom படமும் வெளியாகிறது.சந்தேகமில்லாமல் தென் இந்தியாவில் ரஜினி படமே பார்வையாளர்களை ஈர்க்கும் என்றபோதிலும் ஜுராசிக் வேர்ல்ட் படம் கடும் போட்டி கொடுக்கும்.காலா படம் 2000 திரையரங்கில் வெளியாகும் நிலையில் ஹாலிவுட் தயாரிப்பான ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படம் இந்தி,ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்தியாவில் உள்ள 2300 திரையரங்கில் வெளியாகிறது.
\r\nஇதெல்லாம் வைத்து 150 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள காலா படம் வசூல் குவிக்காது என்று கூறவில்லை.படம் வெளியான முதல் இரண்டு நாளில் மக்கள் தரும் விமர்சனத்தின் மூலமே வார இறுதி நாட்களில் திரையரங்கம் நிரம்புமா என்பது தெரியும்.


\r\nபல தயாரிப்பாளர்கள் காலா படம் வசூலை குவிக்காது என்ற மனநிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.பட வெளியீட்டிற்கு முன் மே 4ம் தேதி  ஹைதரபாத்தில் நடந்த சிறப்பு காட்சியின் போது,பாபா படத்தின் மூலம் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ரஜினி அடைத்தார் என ஆந்திர பட விநியோகிஸ்தர் பிரசாத் பழைய நினைவுகளை கூறுகிறார்.
\r\n“பாபா படம் வெளியான சமயத்தில் என்னை தனிப்பட்ட முறையில் அழைத்து படம் எப்படி வசூலாகிறது என்று கேட்டார்.பாபா படத்தின் மூலம தனக்கு 1.6 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக கூறினேன்.உடனே 1.61 கோடி ரஜினி எனக்கு கொடுத்தார்” என்று கூறுகிறார் பிரசாத்.ரஜினி ஒரு நல்ல மனிதன் என்ற நோக்கத்தில் அவர் கூறியிருந்தாலும்,தற்போதைய சூழ்நிலையில் இது தேவையில்லாத பிரச்சனைக்கே வழிவகுக்கும்.


\r\nபாபா படத்திற்கு நடந்தது போல் காலா படத்திற்கு நடக்காது என ரஜினி நம்பிக்கை வைத்திருப்பார்.ஏனென்றால் ரஜினியின் திரை வரலாற்றில் பாபா படம் ஒரு கருப்பு ஆடு.


\r\nநன்றி : https://www.dailyo.in/arts/kaala-rajinikanth-movie-rajinikanth-tuticorin-protests-sterlite-kabali/story/1/24667.html

\r\n

Leave Comments

Comments (0)