மோடி அரசின் கருப்பு பண ஒழிப்பு - சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

/files/detail1.png

மோடி அரசின் கருப்பு பண ஒழிப்பு - சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம் அதிகரிப்பு

  • 1
  • 0

V. கோபி

சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவிற்கும் சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையில் தகவல்களைப் பரிமாறி கொள்வதற்கு வசதியாக கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. கருப்பு பணத்திற்கு எதிராக போராடும் இந்தியாவிற்கு வெளிநாட்டு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாக உள்ளது.ஏனென்றால் பலரும் தவறான முறையில் சேர்த்த பணத்தை, இந்திய சட்டங்கள் செல்லுபடியாகாத வெளிநாடு வங்கிகளில் தான் பதுக்கி வைக்கின்றனர். 

கருப்பு பணத்தை மீட்டு கொண்டு வருவதே லட்சியம் என மோடி அரசாங்கம் தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது சுவிஸ் தேசிய வங்கி (Swiss National Bnak) வெளியிட்டுள்ள தகவல்களில், சுவிஸ் வங்கியில் இந்தியாவைச் சேர்ந்தவர்களின் மொத்த வைப்புத்தொகை 2017ம் ஆண்டு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இத்தொகை 2017ம் ஆண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 7000 கோடிக்கும் மேல் சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் பதுக்கியுள்ளனர். இத்தொகை பல வருடமாக குறைந்து வந்த நிலையில் திடீரென இந்த அதிகரிப்பு முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.  2016ம் ஆண்டு சுவிஸ் வங்கியில்  இந்தியர்களின் வைப்புத் தொகை 45 சதவிகிதம் குறைந்து 4500 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி,  சுவிஸ் வங்கிகளில் 3200 கோடி வைப்புத் தொகையாகவும், 1050  கோடி மற்ற வங்கிகள் மூலம் பெறப்பட்ட தொகையாகவும்,  2640  கோடி கடன் பத்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் வைத்துள்ள தொகை அதிகபட்சமாக 2006ம் ஆண்டு 23000 கோடியாக இருந்தது. ஆனால் இந்த பத்தாண்டுகளில் இத்தொகை கணிசமாக குறைந்து பத்தில் ஒரு பங்கானது. இத்தனை வருடங்களில் இப்போதுதான் அதிகபட்சமாக 50 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்னர் 2004ம் ஆண்டு 56 சதவிகிதம் அதிகரித்தது சாதனையாக கூறப்பட்ட்து.

சுவிட்ஸர்லாந்து ஏற்கனவே தனது வங்கிகளில் பணம் வைத்துள்ளவர்களின் விபரங்களை இந்தியாவிற்கு அளித்து வரும் நிலையில் சமீபத்திய உடன்படிக்கையின் படி பல தகவல்களை பரிமாறி வருகிறது. இது சம்மந்தமாக இந்திய மற்றும் சுவிஸ் அதிகாரிகளின் சந்திப்பும் நடைபெற்றுள்ளது.

சுவிஸ் அதிகாரிகள் கூறுகையில், தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியர்கள் கருப்பு பணம் எவ்வுளவு வைத்துள்ளார்கள் என்பதை கணக்கிடமுடியாது.இத்தொகை முழுதும் தங்கள் வாடிக்கையாளரின் தொகையாகவே அங்குள்ள வங்கிகள் கூறுகின்றன.

இதுவரை சுவிஸ் வங்கிகளில், இறங்குமுகத்தில் இருந்த இந்தியர்களின் தொகை திடீரென அதிகரித்திருப்பதற்கும் இந்திய அரசு கருப்பு பணத்திற்கு எதிராக எடுத்துவரும் நடவடிக்கைக்கும் தொடர்பு இருப்பதாகவே பல பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். 

நன்றி: https://thelogicalindian.com/news/indian-money-swiss-banks/

Leave Comments

Comments (0)