அரசியல் தலையீடு ஒழியும்போதே விளையாட்டு துறையில் இந்தியா உச்சம் பெரும்!

/files/detail1.png

அரசியல் தலையீடு ஒழியும்போதே விளையாட்டு துறையில் இந்தியா உச்சம் பெரும்!

  • 3
  • 0

- V. கோபி 

சமீபத்தில் கோல்ட்கோஸ்டில் நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 6 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வாங்கி குவித்துள்ளதையும் பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்ததை நினைத்தும் இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளார்கள். நான்கு வருடத்திற்கு முன் கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் 15 தங்கம் உட்பட 64 பதகங்களுடன் பதக்கப்பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தது குறிப்பிட்த்தக்கது.

முந்தைய போட்டியை விட இரண்டு பதக்கமே நாம் அதிகம்  பெற்றிருந்தாலும், நாம் சந்தோஷம் படும்படியாக நமது தடகள வீர்ர்கள் 11 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளனர். கோல்ட்கோஸ்டில் நம்மைவிட இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அதிகமான பதக்கம் பெற்றிருந்தாலும் நியுசிலாந்து, கனடா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை விட குறைவான பதக்கங்களே பெற்றுள்ளன.

இதன்மூலம் நாம் விளையட்டில் முன்னேறிவிட்டோம் என்று கூறிவிடலாமா? பதக்கம் வாங்கிய அனைத்து வீர்ர்களும் தங்களது தனிப்பட்ட பயிற்சியலும் உழைப்பாலும் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கொடுக்கப்படும் பரிசுகளுக்கு முழுதும் அவர்கள் தகுதியானவர்களே. ஆனால் நமது கவலையெல்லாம், விளையாட்டில் வல்லரசாக நினைக்கும் இந்தியா சரியான பதையில் தான் செல்கிறதா?

சரி, இதுவரையில் நம் நாடு விளையாட்டில் சாதித்தது என்ன என்பதை கொஞ்சம் பார்ப்போம். 2012 ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 6 பதக்கம் பெற்று 58வது இடத்திலும், 2016ம் ஆண்டு பிரேசிலில் நடந்தபோது இரண்டு பதக்கங்களோடு 67வது இடத்தையும் பிடித்தோம். இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் நமக்கு தங்கப்பதக்கம் கிடைக்கவில்லை.

சரி, இப்போது காமன்வெல்த் போட்டியில் நம்மைவிட குறைவான பதக்கம் வாங்கிய நியுசிலாந்து, கனடா, தென்னப்பிரிக்கா நாடுகள் இந்த இரு ஒலிம்பிக் போட்டிகளிலும் எத்தனை பதக்கங்கள் வங்கியுள்ளன என்று பார்ப்போம்.

லண்டன் ஒலிம்பிக்கில் நியுசிலாந்து 6 தங்கப்பதகத்துடன் 14வது இடமும், கனடா இரண்டு தங்கத்துடன் 27வது இடமும் பெற்றன. நான்கு வருடம் கழித்து பிரேசில் ஒலிம்பிக்கில், நியுசிலாந்தும் கனடாவும் நான்கு தங்கப்பதக்கங்களுடன் முறையே 19 மற்றும் 20வது இடத்தைப் பிடித்தன. கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் எந்தப்பதக்கமும் பெறாத ஜமைக்கா, தங்கள் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர்களால் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் 18 மற்றும் 16வது இடத்தை பிடித்தது.

இந்த ஒப்பீட்டை பார்க்கும்போது நமக்கு தெரிவது ஒன்றுதான். நமது காமன்வெல்த் போட்டி வெற்றிகளுக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. எல்லா கொண்டாட்டங்களும் முடிந்த பிறகு இந்திய ஒலிம்பிக் கமிட்டி, விளையாட்டு அமைச்சகம் மற்றும் பல மாநில தேசிய கமிட்டிகள் ஒன்றாக உட்கார்ந்து காமன்வெல்த் போட்டியில் பெற்ற வெற்றியை ஏன் ஒலிம்பிக்கில் தொடர முடியவில்லை என்பதை ஆராய வேண்டும்.

2014ம் ஆண்டு நடந்த ஆசிய போட்டியில் 11 தங்கப்பதக்கம் பெற்று 57வது இடம் பிடித்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் பெறும் பதக்கத்தை வைத்தே நம் நாடு விளையாட்டில் எந்த அளவு முன்னேறியுள்ளது என்பதை கணக்கிட முடியும். பொருத்திருந்து பார்ப்போம்.

இதுவரை இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கம், ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. 1975ம் ஆண்டு ஹாக்கி உலக கோப்பையில் வென்றது இந்தியாவே. ஆனால் அதன் பிறகு இந்திய ஹாக்கி அணியின் நிலமை இறங்குமுகமாகவே உள்ளது. சிறந்த பயிற்சிகள்,வெளிநாட்டு பயிற்சியாளர்கள் என அனைத்தும் இருந்தும் உலகளவில் இந்திய அணியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைப் போல் தற்போதைய நவீன ஹாக்கி இல்லை. வேறுபட்ட களமும், விதிமுறை மாற்றமும் ஆட்டத்தில் வேகத்தையும் கவர்ச்சியையும் கூட்டியுள்ளது. இன்று ஹாக்கி போட்டிகள் கடுமையான உடல் உழைப்பையும், திறமையும், ஆட்ட நேர்த்தியையும் கோருகிறது. இதில் வருத்தமான விஷயம், இந்தியா எந்த மாற்றத்தையும் கனக்கில் கொள்ளாததால் இந்திய ஹாக்கி படுமோசமான நிலையில் உள்ளது.
1950, 60 களில் இந்தியா கால்பந்தில் சிறந்து விளங்கியது. தற்போது இந்தியா கால்பந்து தரவரிசையில் (97வது) முன்னேற்றம் காண்பதை நினைத்து ரசிகர்கள் சந்தோஷப்படுகிறார்கள். இந்திய சூப்பர் லீக் போட்டிகளாலோ, U17 உலக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதாலோ இந்தியாவில் கால்பந்து முன்னேற்றம் அடையுமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

நமது இளைஞர்கள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கிளப்புகளின் போட்டிகளை தீவிரமாக பின்தொடர்ந்து வருகிறார்கள். இவர்களில் பலரும் இந்திய கால்பந்து அணியின் போட்டியை பார்ப்பதே தரக்குறைவாக நினைக்கிறார்கள்.

நம் நாட்டில் ஒரு காலத்தில் பல ரசிகர்களை கொண்டிருந்த கைப்பந்தும், கூடைப்பந்தும் இப்போது எந்த தரத்தில் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. PRO KABADI லீக் போட்டிகள் முலம் கவர்ச்சிகரமாக்கப்படுள்ள கபடி, உலகளவிலான விளையாட்டாக மாறுவதற்கு இன்னும் பல வருடங்கள் ஆகும். மற்றொரு ஆட்டமான டென்னிஸ் பெரிய நட்சத்திர வீரருக்காக ஏங்கிகொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் ராமநாதன் கிருஷ்ன்ன், விஜய் அமிர்தராஜ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றோர் தங்களது ஆட்டத்திறனால் இந்திய டென்னிஸை உலகளவில் உயர்த்தினர்.
பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், பளுதூக்குதல், ஜிம்னாஸ்டிக் போன்ற விளையாட்டுகளில் பல பதக்கங்களை உலகளவில் இந்தியா குவித்து வந்தாலும், நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளிலேயே இந்த விளையாட்டுகள் சிறந்து விளங்குகின்றன. கோபிசந்த் மற்றும் பிரகாஷ் படுகோனே ஆகியோர் ஹைதரபாத் மற்றும் பெங்களூருவில் பேட்மிண்டன் வீரர்களை உருவாக்குகிறார்கள். இந்தியாவில் வேறு பகுதிகளில் யாராவது பேட்மிண்டன் வீரர்களை உருவாக்குகிறார்களா?

கடந்த 70 வருடங்களில் தடகளத்தில் ஹென்றி ரிபெல்லோ, மில்கா சிங், யோகன்னன், ஸ்ரீராம், சுரேஷ் பாபு, பிடி உஷா, சைனி வில்சன் அஞ்சு ஜார்ஜ் போன்ற பல திறமையான வீர்ர்களை இந்தியா உருவாக்கியுள்ளது. ஆனால் தற்போது ஈட்டி எறிதல் வீர்ர் நீரவ் சோப்ராவை தவிர்த்து பதக்கம் வாங்கும் அளவிற்கு எவரும் இல்லை.
தற்போது நரேந்திர மோடி அமைச்சரவையில் விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் ராஜ்வர்தன் சிங் ரத்தோர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வாங்கியவர். ஒரு விளையாட்டு வீரனை உருவாக்குவதற்கு என்னவெல்லாம் தேவை என்பது அவருக்கு நன்றாக தெரியும். ஆனால் 130 கோடி மக்களுக்கும் ஒரே இரவில் விளையாட்டு ஆர்வத்தை ஏற்படுத்திவிட முடியாது, அத்தகைய மாற்றத்திற்கு சில காலம் தேவைப்படும் என்பதை நமது அமைச்சர் முதலில் உணர வேண்டும்.

கடந்த ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் வாங்கிய மொத்த பதக்கங்கள் எத்தனை என்பதை தனது அமைச்சகத்திடம் கேட்டுள்ளது ரத்தோரின் அப்பாவிதனத்தையே காட்டுகிறது. அரசியல் வற்புறுத்தல்களால் அவர் இதனை கேட்டிருக்கலாம். ஆனால் இதற்கு டிவிட்டரில் பதிலளித்த விளையாட்டு வீர்ர் ஒருவர், “நாங்கள் பதக்கத்தை நாட்டிற்காக மட்டுமே வென்றோம்; கங்கிரஸ் கட்சிகோ பாரதிய ஜனதாவிற்கோ அல்ல”. உண்மைதானே!
விளையாட்டில் வெற்றிகள் ஒரே இரவில் கிடைத்துவிடாது. விளையாட்டில் இந்தியா ஒரு வல்லரசாக விரும்பினால் அதற்கு நிறைய காலமும், முயற்சியும், திட்டங்களும் தேவைப்படும். ஒலிம்பிக்கில் எந்த பதக்கத்தையும் அரசியல் கட்சிகள் பெற்று தராது. பெரிதும் தூண்டுதல் பெற்ற தனிப்பட்ட விளையாட்டு வீரனே நாட்டிற்கு பதக்கத்தை வாங்கி தருகிறான்.

நன்றி: https://www.firstpost.com/sports/india-could-be-on-track-to-becoming-a-sports-superpower-if-political-parties-keep-off-the-field-4439817.html

Leave Comments

Comments (0)