‘சமூக உணர்வை’ கேலிக்கூத்தாக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

/files/detail1.png

‘சமூக உணர்வை’ கேலிக்கூத்தாக்கும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

  • 2
  • 0

-V.கோபி 


\r\nதிரைத்துறையைச் சேர்ந்தவர்கள் சினிமா நட்சத்திரங்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடனேயே கதைகளை தயார் செய்கிறார்கள்.பொதுவாக தமிழக மக்கள் எளிதாக வெள்ளித்திரையின்பால் ஈர்க்கப்படுவார்கள்.இதனால்தான் அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நம் மக்களை “உருவ வழிபாட்டாளர்கள்” என்றது.
\r\nஜெயலலிதாவின் உற்சாகத்தை திரையில் பார்த்தவர்கள் நிச்சியம் கற்பனைக்கும் யதார்த்ததிற்குமான வேறுபாட்டை அறியமாட்டார்கள்.கற்பனையே யதார்தத்தை உருவாக்குகிறது.இதன் அடிப்படையிலேயே நாம் இந்த உலகை உணர்கிறோம்.இதனை சீக்கிரமே உணர்ந்து கொண்ட திராவிட இயக்கம்,மக்களை ஒன்றுதிரட்ட சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்தி கொண்டார்கள்.பராசக்தி படத்தின் மூலம் தனது கருத்துக்களை பரப்பி திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது வரலாறு.
\r\nகலை VS பிரச்சாரம்

ஆரம்பத்திலிருந்தே இதுபோன்ற படங்கள் இயக்கத்தின் தலைவர்களை முக்கியத்துவப் படுத்தியும்(பராசக்தி படத்தின் இறுதி காட்சி அண்ணா,கருனாநிதி,பெரியாரின் பேச்சுக்களுடன் முடிந்தது குறிப்பிடத்தக்கது),தங்களது கொள்கையை கற்பனை பாத்திரங்கள் திரையில் பேசி நடிப்பதையும், நடைமுறையில் செயல்படுத்தினார்கள்.ஆனால் இது தனிப்பட்ட விளம்பரத்திற்காக அல்லாமல் உண்மையிலேயே ஈடுபாட்டுடன் தங்கள் இயக்கத்தின் சுய உரிமை கொள்கையை பிரச்சாரம் செய்தார்கள்.

1950களில் திராவிட இயக்கம் செயல்படுத்திய சினிமாவின் மூலம் ஆட்சியைப் பிடித்தல் திட்டத்தின் உச்சநிலையாக எம்ஜியார் ஆட்சியை பிடித்தது அமைந்தது.ஆனால் இந்த ஈடுபாடு அவரோடு நின்றுபோனது.பாண்டியன் எழுதிய இமேஜ் டிராப் என்ற நூல் எம்ஜியார் சினிமாவின் மூலமாக ஆட்சியைப் பிடித்தது எவ்வாறு என்பதை விரிவாக ஆராய்கிறது.
\r\nதற்போதைய நடிகர்கள்(ரஜினிகாந்த்,கமலஹாசன்,விஜய்) சிலர் அரசியல் ஆசையில் எம்ஜியார் வழியைப் பின்பற்ற நினைக்கிறார்கள்.அவரைப் போன்று நல்லவராக,மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பவராக திரையில் நடித்தும்,மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு சிறந்த மனிதன் மட்டுமே தேவை என்றும் பேசுகின்றனர்.சமீபத்தில் கூட நான் ஆட்சிக்கு வந்தால் எம்ஜியார் போல் ஆட்சி புரிவேன் என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதனால்தான் அரசியலுக்கும் சினிமாவிற்கும் இடையில் இயங்கும் ரஞ்சித், ஆண்மீக அரசியல் பேசும் பாரதிய ஜனதா கட்சியின் கொள்கைக்கு நெருக்கமான ரஜினிகாந்தை ஒரு தலித் நாயகனாக தன் கபாலி,காலா படத்தில் நடிக்க வைத்துள்ளது குழப்பமாக உள்ளது.அதேப்போல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் அடுத்த படத்திற்கும் ஆர்வம் கூடியுள்ளது.
\r\nதகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரிந்த கார்த்திக் சுப்புராஜ்,நாளைய இயக்குனர் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக தனது முதல் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.அவரது முதல் இரண்டு படமான பீசாவும் ஜிகிர்தண்டாவும் திகில் காமெடி மற்றும் மதுரையில் உள்ள தாதாவைப் பற்றிய கதையினைக் கொண்டது.அவரது மூன்றாவது படமான இறைவி மற்ற இரு படத்திலும் இல்லாத இருண்மையும் முடிவையும் கொண்டது.கலைநயமிக்க வன்முறை மூலமாகவும் இதுவரை தமிழ்சினிமா தொடாததை இப்படத்தின் மூலமாக வெளிக்காட்டியதாலும் ‘சமூக உணர்வுமிக்க’ இயக்குனராக கார்த்திக் சுப்புராஜ் கருதப்படுகிறார்.

ஏப்ரல் மாதம் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் மௌனப் படமான ‘மெர்குரி’ வெளியானது.கொடைகானலில் எதிர்காலத்தில் நடைபெறுவதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.யுனிலீவர் நிறுவத்தின் மெர்குரி ஆலை கொடைகானலின் சுற்றுவட்டாரப் பகுதியில் ஆலையின் கழிவுகளை நிலத்தடியில் சேகரித்து வைத்திருந்தது.இதிலிருந்து வெளியான மெர்குரி கதிர்வீச்சினால் அங்குள்ள மக்கள் பலர் கேட்கும் பேசும் சக்தியை இழந்தனர்.படத்திலும் கதாபாத்திரங்கள் செய்கை மூலமாகவே பேசிக்கொள்கின்றனர்.இப்படம் இளவயதில் உள்ள மூன்று ஆண்களையும் ஒரு பெண்ணையும் கவனப் படுத்துகிறது.

அனைவரும் சந்தோஷமாக இரவு நேரத்தில் காரில் செல்லும்போது எதிர்பாரா விதமாக விபத்தை ஏற்படுத்தி ஒருவரை கொன்றுவிடுகிறார்கள் அல்லது கொன்றுவிட்டதாக நினைத்து கொள்கிறார்கள்.படத்தின் இறுதியில் கார்ப்பரேட் பேராசையால் உயிரிழந்த அனைவருக்கும் இப்படம் சமர்ப்பனம் என்று பார்வையாளர்களுக்கு கூறப்படுகிறது.படத்தில் நடித்த நடிகர்கள்,தயாரிப்பாளர்களின் பெயர்களுக்கு இடையில் போபால்,மினமாட்டா நகரங்களில் நடந்த தொழிற்சாலை விபத்துகள் பார்வையாளர்களுக்கு காட்டப்படுகிறது. 
\r\nஇப்படி நிறுவனத்தின் குற்ற வரலாறுகள் படத்தின் இறுதியிலேயே காட்டப்படுகிறது.உண்மையில் யுனிலீவரின் குற்றம் படத்தில் பெரிய ஈடுபாட்டை ஏற்படுத்தவில்லை.படத்தின் ஆரம்ப காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் காணொளி ஒன்றை எடிட் செய்யும் காட்சி வருகிறது.அக்காட்சியில் “எங்களை விஷமாக்கி கொல்லாதீர்கள்” என்று எழுதிய பேனரின் முன் நின்று வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி அக்குழுவில் உள்ள  இருவருக்கு இடையேயான காதல் காட்சிகளும் கொலை சம்பவமுமே படத்தின் முதல் பாதி முழுவதும் உள்ளன.
\r\nதாங்கள் கொன்றுவிட்டதாக நினைத்த மனிதன் துரத்தியதில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் ஒழிந்துகொண்ட குழுவினரை தேடுவதே படத்தின் இரண்டாவது பகுதி.அந்த தொழிற்சாலையின் கதவில் “கார்ப்பரேட் பூமி” என்று எழுதியுள்ளது.

எடுத்துக்கொணட கதைக்கு மாறாக,வசனம் இல்லாமல் திகிலை அதிகரிக்கவும் காட்சியின் வேகத்தை கூட்டவுமே தங்கள் ஆற்றலை படம் முழுதும் செலவழித்துள்ளனர்.அதிர்ச்சியையும் எதிர்பார்ப்பையும் பார்வையாளர்களிடம் தூண்ட கார்த்திக் சுப்புராஜிடம் காட்சி மொழி மட்டுமே உள்ளது.அற்புதமான ஒளிப்பதிவின் மூலமும் கலை வடிவமைப்பின் மூலமும் படத்தை சரிகட்டி விடுகிறார்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்  இங்குள்ள தொழிலாளர்களை வேலை வாங்கி மொத்த நகரத்தையும் அழித்து மக்களை நோயாளிகளாக்கிய பல கதைகளை நாம் கேட்டு வருகிறோம்.இந்த நிறுவனங்கள் தங்கள் செயலுக்கு பொறுப்பும் ஏற்பதில்லை,இவற்றை நிறுத்துவதுமில்லை.மக்களின் சமூக நிலை ஆட்சியில் இருப்பவர்களைப் பொருத்தே மாறும் என பல காலமாக அரசியல்வாதிகள் கூறிவருகிறார்கள்.இப்படி எல்லாவற்றுக்கும் தனிப்பட்ட ஒருவரே காரணம் என்று கூறுவது இறுதியில் நமக்கு பெரும் ஆபத்தாக முடியும்.
\r\nஆட்சியில் இருப்பவர்கள் ஊழல்வாதியாக இருப்பதால் தான் இங்கு சீரழிவும்,மேல்-கீழ் என்ற வேறுபாடும் இருக்கிறது.அவர்கள் நேர்மையாக இருந்தால் நமது அமைப்பு திறம்பட செயல்படும் என்று நமக்கு கூறுகிறார்கள்.இவர்களின் முக்கிய நோக்கமே அதிகாரத்தில் இருப்பவர்களை தொடக்கூடாது.இதைப்போன்ற கருத்தை நம்பும் மக்கள் போராடுவதை விட்டுவிட்டு இருப்பதில் சிறந்த கார்ப்பரேட் நிறுவனத்தை ஆதரிக்க தொடங்கிவிடுவார்கள்.

உண்மையில் மெர்குரி ஒரு சமூக உணர்வுள்ள படமாக இருந்திருந்தால் ,நிறுவனங்களின் தவறுகளை அனுமதிக்கும் அமைப்புகளின் மீது சுப்புராஜ் தனது கவனத்தை செலுத்தி இருக்க வேண்டும்.குறைவான கூலிக்கு தொழிலாளர்கள் கிடைப்பதாலும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தீவிரமாக இல்லாத்தாலும் பல கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏழை நாட்டில் தங்கள் தொழிற்சாலையை அமைக்கின்றன்.இதுதான் அடிப்படை.சுப்புராஜ் இந்த அடிப்படையின் மீதான பிரச்சனைகளையே பேசியிருக்க வேண்டும்.ஆனால் அவர் பேசவில்லை.
\r\nஇந்த விமர்சனம் சுப்புராஜுக்கு மட்டுமல்ல,அனைத்து தமிழ் இயக்குனர்களுக்கும் பொருந்தும்.2016ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கிய காவல்துறை அடக்குமுறையை கதைக்களமாக கொண்ட விசாரணை படத்தின் விவாத நிகழ்ச்சியில் லீனா மணிமேகலையும் அமுதனும் இதே கருத்தையே கூறினார்கள்.காவலர்கள் அட்டூழியம் செய்ய அனுமதிக்கும் இந்த அமைப்பை இப்படத்தில் வெற்றிமாறன் கேள்வி கேட்கவில்லை என்பதே இவர்களின் குற்றச்சாட்டு.

காவிரி நீர் பங்கீடு,கூடங்குள அணு உலை,தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு,நீட் தேர்வு எதிர்ப்பு என்று மத்திய அரசிற்கு எதிராக தமிழ்நாடு பல போராட்டங்களை சந்தித்து வருகிறது.

நாம் எடுக்கும் திரைப்படங்களில் நடைபெறுவதே நமது அரசியலிலும் எதிரொலிக்கிறது.இங்கு எல்லாம் தவறாக இருப்பதற்கு காரணம் ஊழல் அரசியல்வாதிகள்தான்.இதை மாற்ற நமக்கு நேர்மையான சிறந்த மனிதன் தேவை.இப்படித்தான் நமக்கு திரைப்படங்கள் கற்றுக்கொடுத்துள்ளது.இந்த வாக்கியத்தை அப்படியே திரையில் பேசி நடித்த நடிகர்கள்,பின் அரசியல் கட்சி ஆரம்பித்து இதையே மக்களிடமும் பேசுகிறார்கள்.ஆனால் மக்கள் படும் இன்னல்களுக்கு காரணமான நிறுவனங்களையோ அமைப்பையோ யாரும் கேள்வி கேட்பதில்லை.இவை எல்லாவற்றையும் கேள்வி கேட்டு வழக்கத்தை மீறி படம் எடுக்கும் இயக்குனர் மட்டுமே நமக்கு தற்போதைய தேவை.

நன்றி  https://www.google.com/url?hl=en&q=https://thewire.in/film/how-tamil-filmmakers-are-making-a-mockery-of-social-consciousness&source=gmail&ust=1528524621341000&usg=AFQjCNGk0ZpTIovRMAJNF3jjfa7SxcuC9A

\r\n

Leave Comments

Comments (0)