எம்மி நாடக விருதிற்காக சிறந்த நடிகை பிரிவில் முதல் முறையாக ஆசிய நடிகையான சன்ட்ரோ ஓ பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

/files/detail1.png

எம்மி நாடக விருதிற்காக சிறந்த நடிகை பிரிவில் முதல் முறையாக ஆசிய நடிகையான சன்ட்ரோ ஓ பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

  • 1
  • 0

 

-தமிழில் V.கோபி 

எம்மி நாடக விருதிற்காக சிறந்த நடிகை பிரிவில் முதல் முறையாக ஆசிய நடிகையான சன்ட்ரோ ஓ பரிந்துரைக்கப்பட்டுள்ளார். பிபிசி அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் Killing Eve நாடகத்தில் M16 ஏஜெண்ட்டாக சன்ட்ரோ நடித்துள்ளார். இதற்கு முன்னர் Grey’s Anatomy என்ற நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகையாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் டைம்ஸ் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்த சன்ட்ரோ, ஆசிய நாட்டு நடிகர்களை ஹாலிவுட் பட உலகம் பாகுபடுத்தி பார்ப்பதாகவும், பலமுறை தனக்கு சிறிய கதாபாத்திரமே தயாரிப்பாளர்கள் வழங்குவதாகவும், தொலைகாட்சி தொடரிலோ திரைபடத்திலோ ஒரு சில ஆசிய நடிகர்களே முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறியிருந்தார்.

இப்படிபட்ட சூழ்நிலையில் தன் கையில் Killing Eve திரைக்கதை கிடைத்தபோது தனக்கு முக்கிய கதாபாத்திரம் அளித்திருப்பதை நினைத்து ஆச்சர்யம் அடைந்ததாக கூறுகிறார் சன்ட்ரோ ஓ.

போபே வாலர் பிரிட்ஜ் இயக்கிய மர்மம் நிறைந்த இந்நாடகத்தில் சன்ட்ரோ, பெண் கொலையாளியை தேடும் விசாரணை அதிகாரியாக நடித்துள்ளார்., பழைய கால பெண் வெறுப்பு வழக்காறுகள் பலவற்றை மாற்றி ரகசிய உளவாளி வடிவத்தில் இரு பெண்களும் எலியும் பூனையுமாக ஒருவரை ஒருவர் தேடும் வகையில் நாடகத்தை பிரிட்ஜ் எடுத்துள்ளார். 

“இதுபோன்ற அறிவார்ந்தவர்களோடு இணைந்து பணிபுரிவது எப்போதும் கிடைப்பதில்லை. எனக்கு எளிதாக கிடைத்துள்ளது” என பிரிட்ஜோடு பணியாற்றியதை பற்றி சன்ட்ரோ கூறுகிறார்.

 

விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற நடிகர்கள்:

 

எலிசெபத் மோஸ் ( The Handmaid’s Tale)
கிளேர் ஃபோய் ( The Crown)
கெரி ரஸ்ஸல் ( The Americans )
இவான் ரேச்சல் வுட் ( Westworld )
டேட்டியானா மாசலேனி ( Orphan Black )
 

நன்றி   http://time.com/5336867/sandra-oh-emmy-nomination/

Leave Comments

Comments (0)