பிபா உலகோப்பையை இரண்டாவது முறையாக வென்றது பிரான்ஸ்

/files/detail1.png

பிபா உலகோப்பையை இரண்டாவது முறையாக வென்றது பிரான்ஸ்

  • 0
  • 0

- V.கோபி 

நேற்று நடந்த உலககோப்பை இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி, குரோஷியா அணியை 4—2 கோல் கணக்கில் வென்று இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீர்ர்களும் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டனர். பிரான்ஸ் அணிக்கு முதல் கோல் அதிர்ஷ்டவசமாக குரோஷிய அணி வீர்ர் பந்தை தடுக்க முயன்று தலையால் தடுத்தபோது அது வலைக்குள் சென்று பிரான்சிற்கு கோலாக மாறியது. உடனடியாக சுதாரித்து கொண்ட குரோஷியா, இவான் பெர்சிக்கின் அற்புத கோலால் சமன் செய்தது. ஆனால் இந்த சந்தோஷம் குரோஷிய அணிக்கு நீண்ட நேரம் நிலைக்கவில்லை.
பெனால்டி பகுதியில் வந்த பந்தை குரோஷிய வீர்ர் கையால் தடுத்ததாக பிரான்ஸ் அணியினர் நடுவரிடம் முறையிட்டனர். இதனை வீடியோ கட்சி மூலம் உறுதிசெய்து கொண்ட நடுவர் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வழங்கினார். இதை பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீர்ர் கிரீஸ்மேன் அற்புதமாக கோலாக்கி அணியை முன்னனி பெறச் செய்தார்.

ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் தீடிரென்று மைதனத்திற்குள் நான்கு பேர் நுழைந்த்தால் ஆட்டம் சில நிமிடம் தடைபட்டது. ரஷ்யாவில் அரசுக்கு எதிராக போராடுபவர்களை முறைகேடாக கைது செய்வதை கண்டித்து இந்த மைதான நுழைவு போராட்டத்தை நடத்தியதாக பங்க் ராக் குழுவான “Pussy Riots” சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளது.

ஆட்டத்தின் 59 மற்றும் 65வது நிமிடத்தில் பிரான்ஸ் வீர்ர்கள் போக்பா, இளம் வீர்ர் மபாபே ஆகியோர் அடித்த கோல்களால் பிரான்ஸ் அணி 4—1 என்ற முன்னனி பெற்றது. 19 வயதான மபாபே தனது மின்னல் வேக ஓட்டத்தினால் குரோஷிய வீரர்களை கடந்து கோல் அடித்ததின் மூலம் உலக கோப்பை இறுதி போட்டியில் கோல் அடித்த இளம்வீர்ர் என்ற பெருமையை பெறுகிறார். இதற்கு முன் 1958ம் ஆண்டு உலக்கோப்பை இறுதியாட்டத்தில் இளம்வீர்ராக பிரேசில் வீரர் பீலே கோல் அடித்திருந்தது சாதனையாக இருந்தது.

ஆட்டத்தின் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல்கீப்பர் செய்த தவறை பயன்படுத்தி குரோஷிய வீர்ர் மண்ட்ஜுகிக் கோலாக்கினார். அதன்பின்னர் குரோஷிய வீரர்கள் கோல் அடிக்க எடுத்துகொண்ட எந்த முயற்சியும் பலிக்கவில்லை. இறுதியில் பிரான்ஸ் அணி 4—2 என்ற கோல் கணக்கில் வென்று மகுடம் சூடியது.

பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்கள் அணி உலககோப்பை வென்ற சந்தோஷத்தை கொண்டாடும் விதமாக ஈபிள் கோபுரம் மற்றும் முக்கியமான வீதிகளில் பிரான்ஸ் தேசிய கொடியை ஏந்தி மகிழ்ச்சியாக திரிகிறார்கள்.

பிரான்ஸ் அணி உலக்கோப்பை வென்றதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உட்பட பல நாட்டு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

நன்றி : http://www.foxnews.com/sports/2018/07/15/france-beats-croatia-4-2-to-clinch-2nd-fifa-world-cup-title.html

Leave Comments

Comments (0)