சென்னை-சேலம் பசுமை வழிச் சாலை-திட்ட சாத்திய அறிக்கை கூறுவது என்ன?

/files/detail1.png

சென்னை-சேலம் பசுமை வழிச் சாலை-திட்ட சாத்திய அறிக்கை கூறுவது என்ன?

  • 0
  • 0

-நித்யானந் ஜெயராம், தமிழில் கோபி  

சென்னை-சேலம் இடையிலான பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்க்கும் யாரையும் தன் இரும்பு கரம் கொண்டு அடக்கி வருகிறது தமிழக அரசாங்கம். திட்டத்தை எதிர்த்து போராடுபவர்கள் மட்டுமின்றி திட்டத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களையும் விவாதிப்பவர்களையும் கூட அரசாங்கம் குற்றவாளியாக பார்க்கிறது.

கடந்த ஒரு மாதமாக நெடுஞ்சாலை வரப்போகும் இடத்தின் நில உரிமையாளர்களை மாநில காவல்துறை தொல்லை கொடுத்தும் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களோடு சேரக்கூடாது என்றும் திட்டத்தை எதிர்த்து கருத்து ஏதும் கூற கூடாது எனவும் மிரட்டி வருகிறது.மேலும் சூழலியல் போராளி பியுஷ் மனுஷ்,சமூக செயற்பாட்டாளரும் மாணவியுமான வளர்மதி மற்றும் திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோரை பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிராக மக்களை தூண்டியதாக கூறி காவல்துறை கைது செய்துள்ளது.

ஜூன் 20ம் தேதி அனைத்திந்திய கிசான் சபை விவசாயிகளுக்காக திருவண்ணாமலையில் நடத்திய கூட்டத்தை நடத்த விடாமல் தொந்தரவு செய்ததும் இல்லாமல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் பலரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றது காவல்துறை.மேலும் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு விவசாயிகள் செல்லாதவாறு தடுப்புகளை வைத்து மறித்தனர்.அரசாங்கத்தின் முகமாகவே காவல்துறை மாறிப்போனது.
\r\nதூத்துக்குடியில் காவல்துறை நடத்திய வன்முறை முடிந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் இங்கு மீண்டும் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.அரசியலமைப்பு உரிமைகளான சுதந்திரமாக ஒரிடத்திற்கு செல்லுதல்,நமது கருத்தை தெரிவித்தல் போன்ற எல்லாவற்றிற்கும் காவல்துறையிடமும் நீதிமன்றத்திடமும் சார்ந்து இருக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்த 8 வழி பசுமைச் சாலை என்பது மிகப்பெரிய திட்டம்.பத்தாயிரம் கோடி மதிப்பில் 277கிமீ நீளத்திற்கு திட்டம் செயல்படுத்தபட உள்ளது.மிகப்பெரிய திட்டங்கள் எப்போதும் மிகப்பெரிய பாதிப்புகளை(நல்லது,கெட்டது) ஏற்படுத்தும்.

இந்த திட்டத்தினால் ஏற்படும் பயன்களை கூறும் எந்தவிதமான விஞ்சானப்பூர்வ அறிக்கையும் பொதுதளத்தில் இதுவரை தரப்படவில்லை.நம்மிடம் உள்ள திட்ட சாத்திய அறிக்கையில் செலவழிக்கும் தொக்கைகான எந்த நியாமான பதில்களும் இல்லை.
\r\nதிட்ட சாத்திய அறிக்கை முழுவதும் மோசமான வகையில் பல அறிக்கையிலிருந்து திருடப்பட்ட தகவல்களும் பக்கத்தை நிரப்புவதற்காக தேவையில்லாத செய்தியும் அடங்கியுள்ளது.

உதாரனத்திற்கு கண்ணியாகுமரி மாவட்டத்தின் எண்ணயத்தில் சரக்கு பெட்டக முனையம் மற்றும் துறைமுகம் அமைப்பதாக இருந்த திட்டத்தை எடுத்து கொள்வோம்.இத்திட்டத்தினால் எங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.ஆகையால் முழுமையாக இத்திட்டத்தை வரவேற்கிறோம் என பொது மக்கள் கூறியதாக இத்திட்டத்தின் சாத்திய அறிக்கை கூறுகிறது.ஆனால் கள நிலவரமோ உள்ளூர் மீனவ மக்களின் தீவிர எதிர்ப்பால் திட்டம் நிரந்தரமாக கைவிடப்பட்டது.

இப்போது சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்திலும் இதே தவறை மீண்டும் செய்கிறார்கள்.திட்டத்திற்கு எதிராக போராடும் மக்களின் உணர்ச்சிகளை மதிக்காமல் திட்டத்தை செயல்படுத்த தீவிர ஆர்வம் காட்டுகிறது அரசு.

சட்டத்தின் படி நடக்கிற நாடாக இருந்தால்,இந்நேரம் திருட்டுத்தனமான தகவல் மூலம் சாத்திய அறிக்கை தயாரித்த ஆலோசனை நிறுவனமும் அறிக்கையை சோதித்து பார்க்காமல் அதன்படி திட்டத்தை செயல்படுத்த முணையும் அரசாங்க நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடரப்பட்டிருக்கும்.
\r\nதிட்ட சாத்திய அறிக்கை என்பது  அறிவிக்கப்பட்ட திட்டத்தின் தொழில்நுட்ப,பொருளாதார மதிப்பீட்டை ஆய்வு செய்வதோடு இத்திட்டத்தினால் ஏற்படும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை பற்றிய மதிப்பீடாகவும் இருக்கும்.இத்தகைய மதிப்பீட்டிற்கு பொதுமக்களின் கருத்து கேட்பு முக்கியமானது.

ஆனால் இந்த பசுமை வழிச்சாலைக்கு சாத்திய அறிக்கை தயாரித்த Feedback Infra நிறுவனம்,பொதுமக்களிடம் மட்டுமல்லாமல் அந்த பகுதியில் உள்ள சமுக குழுக்கள்,அரசு சாரா அமைப்புகள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசாங்க துறைகளின் அதிகாரிகள் ஆகியோரிடம் கருத்து கேட்பு நடத்தியதாக கூறுகிறது

அதுமட்டுமல்லாமல் அந்த அறிக்கையில் மக்களிடம் தனித்தனியாகவும் குழுக்களாகவும் கருத்துகேட்பு நடத்தப்பட்டதாகவும்,மேலும் சுகாதார பணியாளர்களை கொண்டு ஆய்வு நடத்தும் போது எய்ட்ஸ் நோய் சம்மந்தமாக அந்த பகுதியிலுள்ள லாரி ஓட்டுனர்கள் மற்றும் உள்ளூர் மக்களை சந்தித்து நோய் தடுப்பு மற்றும் மருத்துவ முறைகள் பற்றி விவரித்ததாகவும் கூறுகிறது.

இத்திட்டத்தினால் விவசாயிகள் இழக்கும் நிலத்தை பற்றி எதுவும் குறிப்பிடாமல் எய்ட்ஸ் நோயை பற்றி அறிக்கையில் கூறியுள்ளது எதற்கு என்றுதான் யாருக்கும் புரியவில்லை

எந்தவொரு திட்டத்தின் சமூக பாதிப்புகளை மதிப்பீடு செய்யும்போதும் இதனால் பெண்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த அறிக்கையில் ‘பெண்கள் நலனும் முன்னேற்றமும்’ என்ற பகுதியில் நான்கு பத்தியே உள்ளது.அதிலும் மூன்று கேள்விகளுக்கான பதில்கள் வேறு ஏதோ அறிக்கையிலிருந்து திருடப்பட்டு இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

உதாரணமாக, “இத்திட்டத்தினால் நகர்ப்புற சாலைகளும் பொது போக்குவரத்தும் மேம்படுவது மட்டுமின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.பெண்கள் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வது சியான் நகரில் ஏற்கனவே அதிகமாக உள்ள நிலையில இந்த பசுமை வழிச்சாலையால் போக்குவரத்து சேவை தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமையும்” என அறிக்கையில் உள்ளது.
\r\nமுக்கியமான விஷயம் என்னவென்றால் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சியான் நகரம் சீனாவில் உள்ளது.இந்த 8 வழி பசுமைச் சாலையால் சீனாவில் உள்ள பெண்களும் பயனடைவார்கள் என்றால் நல்ல விஷயம் தானே. 

இத்திட்டத்தினால் பெண்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா?அவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு,ஒரே வரியில் “நகர்ப்புற போக்குவரத்தை பொருத்தவரை சமத்துவத்திற்கோ,முன்னேற்றத்திற்கோ நாம் வருத்தப்படும் அளவிற்கான பிரச்சனைகள் இல்லை” என அறிக்கை கூறுகிறது.

முதல் இரண்டு கேள்விகளுக்கு நிறைய கஷ்டப்பட்டு பதில் கூறியதால் மூன்றாம் கேள்வியான, “இத்திட்டத்தினால் பாலியல் சமத்துவத்திற்கோ குறிப்பாக பெண்களுக்கோ பாதிப்பு ஏதாவது ஏற்படுமா? என்பதற்கு அறிக்கையில் ஒரு பதிலும் இல்லை
\r\nமேலும் ‘பிரச்சனைகள்’ என்ற தலைப்பின் கீழ் உள்ள பகுதிகளில், “மக்கள் மத்தியில் சிறு அச்சம் இருந்தாலும் பெருவாரியான மக்கள் இத்திட்டத்தை வரவேற்பது மட்டுமல்லாமல் குறித்த நேரத்தில் விரைவாக முடிக்க வேண்டும்” என மக்கள் கூறியதாக இந்த கேலி கூத்தான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற அதிவேக நெடுஞ்சாலைகள் அமைப்பதால் சுற்றுச்சூழலிலும் உள்ளூர் பொருளாதரத்திலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.ஏற்கனவே பற்றாகுறையாகவுள்ள உள்ளூர் வளங்களை வைத்தே சாலை கட்டுமானம் அமைக்கப்படும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இது உள்ளூர் சுற்றுச்சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.இந்த பசுமை வழிச்சாலைக்கு தேவைப்படும் மனல்,பழையசீவரம் பகுதியிலுள்ள பாலாறு,செய்யாறு நதி மற்றும் காவேரி ஆற்றிலிருந்தே எடுக்கப்படும் என தெரிகிறது.

பழையசீவரம் பகுதி ஏற்கனவே தண்ணீர் பற்றாகுறையால் தவித்து வருவது மட்டுமின்றி அங்குள்ள ஆறுகளில் மனல் கொள்ளையும் நடைபெறுகிறது.தமிழ்நாடு கடும் தண்ணீர் தட்டுபாட்டில் தவிப்பதாக சமீபத்தில் வெளியான நிதி அயோக் அறிக்கை தெரிவிக்கிறது.
\r\nஇந்த திட்ட சாத்திய அறிக்கையின் மொத்தமுள்ள 286 பக்கத்தில் 183 பக்கங்கள் எவ்வாறு நெரிசலற்ற மேடு பள்ளம் இல்லாத சாலை வடிவமைக்கப் பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.ஆனால் எந்த பக்கத்திலும் சாலையில் நீர் வழிந்தோடும் முறையை பற்றி குறிப்பிடப்படவில்லை. உதாரணமாக,நாட்டரசன்பட்டு,காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு இடையில் இரு குளங்கள் உள்ளன.எட்டு வழிச்சாலை என்பது ஒன்றும் சாதாரன சாலை அல்ல.மன்னாலும் கற்களாலும் மேடாக்கப்பட்டு அணைகள் போல் இச்சாலைகள் அமைக்கப்படும்.2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது பழைய மகாபலிபுர சாலையை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது.நீர்வழியை தடுத்து சாலையை மேடாக்கியதே இதற்கு காரணமாக கூறப்பட்டது.

ஆனால் இந்த பசுமை வழிச்சாலையில் வெள்ளம் வருவதற்கு வாய்ப்பில்லை.ஆனால் சாலையின் இருகரையிலும் நிலத்தடி நீர் பாழாகும் அபாயம் இருக்கிறது.

இது நெடுஞ்சாலையால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு மட்டுமல்லாமல்,சேலத்தில் உள்ள Southern Iron and Steel Company(SISCOL) என்ற தொழிற்சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபடப் போவதாகவும்,அருகிலுள்ள மலைகளில் இரும்பு தாது சுரங்கம் தோண்டப்போவதாகவும் சாத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

இத்திட்ட சாத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதும் கூறப்படாமல் விடுபட்டுள்ளதும் நமக்கு பல சந்தேகங்களை எழுப்புகிறது.
\r\nஇந்த நெடுஞ்சாலை திட்டம் அவ்வுளவு முக்கியமானது என்றால்,முதலில் சட்ட விதிகளை மதிக்க வேண்டும்.திட்டத்தை பற்றிய நியாமான,விஞ்சானப்பூர்வமான ஆவணங்களை மக்கள் மத்தியில் சமர்பிக்க வேண்டும்.இத்திட்டத்தினால் பாதிப்பு அடைபவர்களை அரசாங்கம் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதோடு, காவல்துறையை சமூகத்தின் உண்மையான குற்றவாளிகளை பிடிக்க அனுப்ப வேண்டும்.
\r\n 

நன்றி   https://thewire.in/environment/chennai-salem-expressway-a-feasibility-report-that-isnt

\r\n

Leave Comments

Comments (0)