தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை தொடங்கும் பாரதிய ஜனதா!

/files/detail1.png

தேர்தலை மனதில் வைத்து திட்டங்களை தொடங்கும் பாரதிய ஜனதா!

  • 0
  • 0

 - V. கோபி 

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து, நரேந்திர மோடி அரசாங்கம் டிசம்பர் 31ம் தேதிக்குள் பல திட்டங்களை தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் முடிவு செய்துள்ளது.

அடுத்த ஆறு மாதத்திற்குள் தொடங்கி வைக்கும் நிலையில் உள்ள அல்லது அடிக்கல் நாட்டப்படவுள்ள திட்டங்களின் விவரங்களை அளிக்குமாறு அனைத்து அமைச்சகங்களையும் பிரதமர் அலுவலகம் கேட்டு கொண்டுள்ளது. ஊரக மாற்றும் வீட்டு வசதி, நெடுஞ்சாலை மாற்றும் சாலை போக்குவரத்து, ரயில்வே மற்றும் விமானத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள கட்டுமானத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் பிரதமர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் பிரதமர் தொடங்கி வைக்கப்படவுள்ள திட்டங்களுக்கான அனைத்து அனுமதிகளையும் விரைவாக பெறுமாறும் கூறியுள்ளது.

உத்தரபிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் மீது மக்கள் கோபமாக உள்ளார்கள் என்று தெரிந்ததும், மக்களின் எண்ணத்தை மாற்ற அவசர அவசரமாக பல திட்டங்களை பாரதிய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 20 நாளில் மட்டும் ‘உலகின் மிகப்பெரிய மொபைல் போன் தொழிற்சாலை’ திட்டம் உட்பட ஐந்து திட்டங்களை மோடி உத்தரபிரதேசத்தில் தொடங்கி வைத்துள்ளார்.

நேற்று கூட டெல்லியில் இந்திய அகழ்வாராய்ச்சி துறையின் தலைமை அலுவலகத்தை தொடங்கி வைத்துள்ளார்.
மே மாதத்தில் உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா தொகுதியின் இடைதேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் பிரதமர் மோடி, டெல்லி – மீருட் இடையிலான நெடுஞ்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆனால் 90% வேலை முடியாத நிலையிலேயே இந்த சாலை பிரதமாரால் அவசரமாக தொடங்கி வைக்கப்பட்டது. இதற்கிடையில் சமீபத்தில் பெய்த மழையினால் இந்த நெடுஞ்சாலை பல இடங்களில் படு மோசமாக சேதம் அடைந்துள்ளது. சென்ற வருடம் குஜராத் தேர்தலுக்கு முன், ஒரே நாளில் பிரதமர் மோடி 1600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வை பிரச்சார யுக்தியாக பாரதிய ஜனதா பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தவறு செய்ய பார்க்கிறார் எனவும் பல முன்னாள் தேர்தல் ஆணையர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

நன்றி: https://thewire.in/politics/narendra-modi-bjp-project-inauguration

Leave Comments

Comments (0)