தன் வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களுக்கு சேவை புரிந்த என் அம்மாவை இன்று மாவோயிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

/files/detail1.png

தன் வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களுக்கு சேவை புரிந்த என் அம்மாவை இன்று மாவோயிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

  • 2
  • 0

-கோயல் சென், தமிழில் V.கோபி 

ஜனவரி மாதம் பீமா கோரிகானில் வன்முறையை தூண்டியதாகவும் மாவோயிஸ்ட்டோடு தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறி ரோனா வில்சன்,மகேஷ் ரவுத்,சுதிர் தவாலே,சுரேந்திரா கட்லிங் மற்றும் கல்லூரி பேராசிரியரான ஷோமா சென் ஆகியோர் ஜூன் 6ம் தேதி புனே காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.மேலும் ஷோமா சென் தான் பணிபுரிந்த கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைமை பொருப்பில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஷோமா சென்னின் மகள் கோயல் சென் தன் அம்மா கைது செய்யப்பட்டது குறித்து எழுதிய கட்டுரை.
\r\nஎன் அம்மாவை கைது செய்ததும் முதலில் எனக்கு அதிர்ச்சியாகவும் நம்புவதற்கு சிரமமாகவும் இருந்தது.என் அம்மாவிற்கு இப்படி ஒரு நிலைமை வரும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.தன் வாழ்நாள் முழுதும் அடுத்தவர்களுக்கு சேவை புரிந்த என் அம்மாவை இன்று மாவோயிஸ்ட் என்று கூறுகிறார்கள்.

வாழ்க்கையை புதியதாக தொடங்கவும் சமூக சேவையில் அதிக கவனம் செலுத்தவும் எனது அம்மாவும் அப்பாவும் மும்பையிலிருந்து நாக்பூருக்கு இடம் மாறினர்.மத்தியதர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதியில் எங்களது வீடு அமைந்துள்ளது.நாக்பூரில் வளர்ந்தாலும்,தான் வாங்கும் குறைந்த சம்பளத்தை கொண்டு எனக்கு சிறப்பான கல்வியை எனது அம்மா கொடுத்தார்.என் சிறு வயதில் நடந்த சம்பவம் இப்போது ஞாபகத்திற்கு வருகிறது.எனது பள்ளியில் நடந்த ஓவிய போட்டியின்போது,இந்தியாவைச் சேர்ந்த அனைத்து மதத்தினரும் ஒருவரோடு ஒருவர் கைப்பிடித்து வட்ட வடிவில் நிற்குமாறு படம் வரையுமாறு எனது அம்மா கூறினார்.நான் வரைந்த அந்த படத்திற்கு தான் முதல் பரிசு கிடைத்தது.

அடுத்தவர்களுக்கு என் அம்மா உதவி புரிவதை என் சிறு வயதிலிருந்து பார்த்து வருகிறேன்.அவர் வாங்கும் குறைவான சம்பளத்திகூட,எங்களது வீட்டில் வேலை செய்யும் கீதாபாயின் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பார்.நாக்பூரில் உள்ள ஸ்தீரி சேத்னா என்ற பெண்கள் அமைப்பில் இணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை,வரதட்சனை கொடுமைகளுக்கு எதிராக விவாதித்தார்.ஒருநாள் லதா என்ற இளம் பெண்ணை எங்கள் வீட்டிற்கு அம்மா அழைத்து வந்தார்கள்.சிறுவயதிலேயே அவளது அம்மாவை இழந்தவள்,தற்போது அவளது அப்பாவும் தற்கொலை செய்து கொண்டார்.லதா எங்களோடு ஐந்து வருடங்கள் இருந்தார்.என் மூத்த சகோதரியாகவே லதாவை பார்த்தேன்.மற்றொரு சமயம் மருத்துவ கல்லூரி படிக்கும் நேகா என்ற மாணவி தங்குவதற்கு இடமின்றி எங்கள் வீட்டில் தங்கினார்.உதவி கோரும் எவருக்கும் எங்கள் வீடு தங்குமிடமாக இருந்தது.

என் அம்மா என்னைவிட மற்ற குழந்தைகளிடமே அன்பாக இருக்கிறார்கள்,அதிக நேரம் செலவழிக்கிறார்கள் என சிறு வயதில் பொறாமை கொள்வேன்.
\r\n“உன் அம்மா தனித்துவம் மிக்கவர்.தன் வாழ்நாள் முழுவதும் சோர்வில்லாமல் ஏழை மக்களுக்கு சேவை புரிந்து வருகிறார்.கொடுமைகளுக்கு எதிராக பேசுமாறு பெண்களுக்கு ஊக்கம் அளிக்கிறார்” என்று எனது அம்மாவை பற்றி என் தூரத்து உறவினர் ஒருவர் கூறியபிறகு என் தவறை உணர்ந்து கொண்டேன்.

உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் என் அம்மாவின் மீது அன்பும் இரக்கமும் காட்டுவதை பார்த்தால் ஆச்சர்யமாக உள்ளது.பூனே காவல்நிலையத்திற்கு என் அம்மாவோடு உடன்சென்ற பெண் காவலர் ஒருவர் திடீரென்று அம்மாவின் காலில் விழுந்து வணங்கியுள்ளார்.என்னவென்று புரியாமல் அம்மா கேட்டதும், “நான் உங்களிடம் படித்த மாணவி.உங்களை இப்படியொரு நிலைமையில் பார்ப்பதற்கு கஷ்டமாக உள்ளது” என அழுதபடி கூறியிருக்கிறாள்.
\r\nஎனது அம்மா மும்பையின் ஆடம்பரமான பந்த்ரா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்.இந்தியாவில் 70கள் கொந்தளிப்பான காலகட்டம்.பலரும் இடதுசாரி கொள்கையில் ஆர்வம் கொண்டிருந்தனர்.அச்சமயத்தில் வித்யார்தி பிரகதி சங் என்ற அமைப்போடு அம்மா தன்னை இணைத்து கொண்டார்.எல்லா அறிஞர்களும் மும்பையில் வசித்தால் விதர்பா போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு யார் உதவி புரிவது என்று நினைத்து தனது வசிப்பிடத்தை உடனடியாக நாக்பூருக்கு மாற்றிக்கொண்டார் அம்மா.

நாக்பூரின் இந்தோராவில் இருக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரியும் எனது அம்மா,தினமும் தனது இரு சக்கர வாகனத்தில் தன் ஏழு மணி வகுப்பிற்கு சென்றுவிடுவார்.பல நாட்கள் நான் எழுந்திருக்கும் சமயத்தில் வீட்டில் யாரும் இருப்பதில்லை.இதனால் சிறு வயதிலேயே சுதந்திரமாக இருக்க கற்றுகொண்டேன்.தன் கல்லூரி முடிந்து மாலை வேளைகளில் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் தலித் பெண்களை சந்தித்து அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு தன் நேரத்தை செலவிடுவார்.

தான் 38 வருடமாக பணியாற்றிய ஆசிரியர் தொழிலில் சமீபத்தில் தான் ஆங்கிலத் துறையின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.அவரைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவை நாக்பூர் ஆசிரியர் கூட்டமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.சமீபத்தில் என்னை சந்தித்த அம்மா,கட்டாயம் புத்தக விழாவிற்கு வருமாறு அழைத்தார்.அடுத்த நாள் அவரது 60வது பிறந்தநாளை கொண்டாட தயாராகி கொண்டிருந்த சமயத்தில் மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடையும் வகையில் அம்மாவை வலுகட்டாயமாக காவலர்கள் அழைத்துச் சென்றனர்.

அம்மாவோடு சேர்ந்து நான்கு பேரை கைது செய்ததற்கு மொத்த இந்தியாவும் வெட்கப்படவேண்டும்.நாம் தற்போது இருண்ட காலத்தில் வசிப்பதாக எனக்கு தோன்றுகிறது.ஒன்றை எதிப்பதற்கோ,மறுப்பதற்கோ இங்கு எந்த இடமும் இல்லை.கைது செய்யப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர்கள்.ஒருபக்கம் தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளை பறிப்பதும்,மற்றொரு பக்கம் அவர்களின் நலனுக்காக பணிபுரிபவர்களை தாக்குவதும் என்ற நிலைமையே இங்கு நிலவுகிறது.

“நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பவர்கள்”, “நாட்டிற்கு எதிரான கருத்துகளை பரப்புபவர்கள்”, “வன்முறையை தூண்டுபவர்கள்” என ஆவேசமாக நீதிமன்றத்தில் அரசாங்க வழக்கறிஞர் வாதாடினார்.உண்மையில் நாட்டிற்கு எதிரானவர்கள் என்பதற்கான வரையறை என்ன?மார்க்ஸ்,லெனின்,மாவோ போன்றவர்களின் நூல்களை வைத்திருப்பதால் ஒருவர் நாட்டிற்கு எதிரானவராக ஆகிவிடமாட்டார்.இன்றைய அரசு தனது நவீனப்படுத்தும் திட்டத்தின் மூலம் சில சமூகத்தின் உரிமைகளை நசுக்குகிறது.இந்த சமூகத்திடமே எனது அம்மா பணியாற்றி வந்தார்.அவர் பெண்கள்,தலித்களின் உரிமைகளுக்காக போராடியவர்.இவர்களின் குரல்கள் வெளி உலகத்திற்கு கேட்பதற்கு உதவி புரிபவர்களில் எனது அம்மாவும் ஒருவர்.

இந்த செயலுக்காகத்தான் எனது அம்மா கைது செய்யப்பட்டுள்ளார் என்று நினைக்கும் போது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.என் அம்மாவிற்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. 

நன்றி https://www.firstpost.com/living/arrested-professor-shoma-sens-daughter-koel-says-my-mothers-been-tagged-a-maoist-after-lifetime-of-working-for-others-4533031.html

\r\n

Leave Comments

Comments (0)