நீட் தேர்வில் பிற்படுத்தப்படோருக்கான இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை

/files/nseohyqqrivkrhed_1595238511 2020-09-19 11:01:04.jpeg

நீட் தேர்வில் பிற்படுத்தப்படோருக்கான இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை

  • 10
  • 0

 -V.கோபி

‘இது அரசியலமைப்புக்கு எதிரானது’: நீட் தேர்வில் பிற்படுத்தப்படோருக்கான இடஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இடஒதுக்கீடு முறை ஒழுங்காக பின்பற்றாததால் கடந்த மூன்று வருடங்களாக வருடத்திற்கு 3000 இடங்களை நாங்கள் இழந்திருப்பதாக பிற்படுத்தப்பட்ட சாதியினர் கூறுகிறார்கள்.

அனைத்திந்திய இடஒதுக்கீட்டின் கீழ் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு மருத்துவ கல்லூரிகளில் வழகப்படும் இடங்கள் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தற்போது அரசியல் புயலாக உருவெடுத்துள்ளது.

நீட் தேர்வின் – இந்தியாவில் மருத்துவம் படிக்க வேண்டுமென்றால், இந்த தேர்வை மாணவர்கள் கண்டிப்பாக எழுத வேண்டும் - விதிகளின் கீழ், மாநில அரசும் தனியார் மருத்துவ கல்லூரிகளும் டிப்ளமோ மற்றும் பட்டதாரி படிப்புகளில் உள்ள 15% இடங்களை அனைத்திந்திய இடஒதுக்கீடிற்கு சமர்பிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ஒதுக்கீடின் கீழ் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டதாரி படிப்புகளில், இந்த ஒதுக்கீட்டிற்கு தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் 50% இடங்களை ஒதுக்க வேண்டும்.

2017-ம் ஆண்டிலிருந்து இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அனைத்து இந்திய இடஒதுக்கீட்டின் கீழ் பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி இடங்களில் இடஒதுக்கீடு மறுக்கப்பட்டு வருவதாக மே 11 அன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் அனைத்திந்திய கூட்டமைப்பு கடிதம் எழுதிய பிறகே இந்த சர்ச்சை விஸ்வரூபம் எடுத்தது.

அனைத்து இந்திய இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடங்கள் மறுக்கப்பட்டுள்ளதால் மருத்துவ பட்டதாரி படிப்புகளின் சேர்க்கையை நிறுத்தி வைக்குமாறு செவ்வாய் அன்று உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடுத்துள்ளது தமிழக காங்கிரஸ். அன்றே, பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கான அனைத்திந்திய இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மே 29 அன்று, தமிழ்நாட்டின் எதிர்கட்சியான திமுக-வும் இதே வேண்டுகோளை வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவது என்பது ஆயிரம் ஆண்டுகளாக சாதிய ஒடுக்குமுறையை சந்தித்து வந்த சமூகத்தில் பிந்தங்கிய குழுக்களுக்கு பரிகாரமாக கல்வி நிலையங்களிலும் அரசாங்க வேலைகளிலும் இடஒதுக்கீடு வழங்குவதை குறிக்கோளாக கொண்டதே இந்த செயல்பாட்டு திட்டம்.

சமூக நீதியை மறுப்பது

அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு இடஒதுக்கீடை மறுப்பது அறிவில்லாத செயல் என கூறும் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கருனாநிதி, “ஏய்ம்ஸ் (AIIMS) போன்ற மத்திய நிறுவனங்கள் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு இடஒதுக்கீடு அளித்து வருகிறது. மாநிலங்களும் அரசாங்க கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குகின்றன. இருந்த போதிலும், மாநில அரசுக்குச் சொந்தமான கல்லூரிகளில் இவர்களுக்கு அனைத்திந்திய ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது” என்கிறார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் அனைத்திந்திய கூட்டமைப்பு சேகரித்துள்ள தரவுகளின் படி, இந்த ஒதுக்கீடு முறையாக நடைமுறைப்படுத்தாததால், கடந்த மூன்று வருடங்களாக இந்தியா முழுவதும் வருடத்திற்கு 3000 இடங்களைப் பிற்பட்ட வகுப்பினர் இழந்து வருகிறார்கள்.

“பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்கள் பொதுப் பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது அதிச்சியளிக்கிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமின்றி சமூக நீதியை மறுப்பதாகும்” என கூறுகிறார் கருனாநிதி.

கூட்டமைப்பு கொடுத்த புகாரின் விளைவாக, “எழுப்பப்பட்டுள்ள குர்றச்சாட்டு சம்மந்தமான உண்மைகள் மற்றும் தகவல்களை” தருமாறு மே 22 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்.

மேல் சாதியினர் மற்றும் தலித்களுக்கு இடையில் உள்ள பல சாதிகளை கொண்ட இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதிய ஒடுக்குமுறை காரணமாக சமூக ஒதுக்குதலுக்கு உள்ளாகினர். 1979-ம் ஆண்டு, இந்த சாதிகளின் நிலையை கண்டறிய பிபி மண்டல் தலைமையில்  சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையத்தை அமைத்தது ஜனதா அரசாங்கம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – இந்திய மக்கள்தொகையில் 52 சதவிகிதத்தினர் – சமூக மற்றும் கல்வி ரீதியாக பிந்தங்கியுள்ளார்கள் என்று கூறிய ஆனையம், அவர்களுக்கு 27% இடஒதுக்கீடை பரிந்துரைத்தது.

எனினும், ஜனதா கட்சியின் ஆட்சி நீண்ட நாள் நீடிக்காததால், மற்றொரு காங்கிரஸ் அல்லாத அரசாங்கம் வி.பி.சிங் தலைமையில் அமையும் வரை, ஆணையம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. விபி சிங் அரசாங்கம் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே நீடித்திருந்தாலும், மண்டல் கமிஷனின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு வேலைகளில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கி தன்னுடைய பெயரை வரலாற்றில் பதித்தார் சிங். 2006-ம் ஆண்டு, இந்த இடஒதுக்கீடு மத்திய பல்கலைக்கழகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

பிற்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு விஷயத்தில் கூட்டாட்சி கொள்கையை மண்டல் கமிஷன் வரையறுத்தாலும், பல மாநிலங்கள், உதாரணமாக, சாதி எதிர்ப்பு சமூக நீதி இயக்கத்தில் நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாட்டில் பிற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு 1951-ம் ஆண்டிலிருந்து பின்பற்றப்படுகிறது.

இந்த பிரச்சனை குறித்து பல நாட்களாக எங்கள் கூட்டமைப்பு குரலெழுப்பி வருவதாக கூறும் கருனாநிதி, “எம்பி-க்கள் கூட இது தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் மத்திய அரசு தொடர்ந்து திசைதிருப்பி வருகிறது.போதிய அளவிற்கு தரவுகளை சேகரித்து எந்தளவிற்கு பிற்பட்ட வகுப்பினர் இடங்களை இழந்து வருகின்றனர் என நாங்கள் கூறிய பிறகே இப்பிரச்சனையில் கவனம் ஏற்பட்டது” என்கிறார்.

உதாரணமாக, 2017-ம் ஆண்டு, சாதிய இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது சம்மந்தமான கேள்விக்கு மக்களவையில் பதிலளிக்கும்போது, மருத்துவ கல்லூரிகளில் பிற்பட்ட வகுப்பினரின் நிலை என்ன என்பது குறித்து நேரடியாக எந்த பதிலும் மோடி அரசாங்கம் வழங்கவில்லை. “அனைத்து இந்திய ஒதுக்கீட்டின் கீழ் பட்டதாரி இடங்களுக்கு 15% மற்றும் முதுகலை இடங்களுக்கு 50% என பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கு நீதிமண்றத்தில் உள்ளதால்…..” என அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் சலோனி குமாரி என்பவர் தொடுத்த வழக்கை சுட்டி காட்டுகிறது அரசு.

திமுக ராஜ்ய சபா எம்.பி டிகே இளங்கோவன் கூறுகையில், “பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு போதிய இடஒதுக்கீடு இல்லை என ஒவ்வொருமுறை இந்தப் பிரச்சனையை எம்.பி-க்கள் எழுப்பும் போதும்,  இதுசம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாக கூறி விவாதத்தை முடித்து விடுகிறது மோடி அரசாங்கம். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தெளிவான சட்டம் உள்ளது. பின்பு எப்படி இந்த வழக்கை காரணம் காட்டி மறுக்க முடியும்? மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை முறையாக வழங்க வேண்டும் என அழுத்தம் கொடுக்கவே இந்த வழக்கு (சலோனி குமாரி) தொடுக்கப்பட்டுள்ளது.தீர்வு கிடைக்க வேண்டும் என போடப்பட்ட வழக்கை காரணம் காட்டியே அரசாங்கம் பிரச்சனையை மோசமாக்கி வருவது எவ்வுளவு முரணான விஷயம்”.

இந்தியாவில் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர வேண்டுமென்றால் கண்டிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டும் என 2016-ம் ஆண்டு கொண்டு வந்ததே இவை எல்லாவற்றுக்கும் காரணம் என்கிறார் இளங்கோவன்.

“இடஒதுக்கீடை பின்பற்ற அவர்கள் (மோடி அரசாங்கம்) விரும்பவில்லை. அதனால்தான் கல்லூரி சேர்க்கையை மையப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் மாநிலங்களில் கைகளிலிருந்து சாதிய இடஒதுக்கீட்டை எடுக்க முடியும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டபோது பலரும் இந்தப் பிரச்சனையை எழுப்பினர்” என்கிறார் இளங்கோவன்.

‘ஒருங்கிணைந்த முயற்சி’

“பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை மறுப்பது ஒன்றும் தற்செயலானது அல்ல. இது ஒரு வடிவம். பல பகுதிகளில் பிற்படுத்தப்படவர்களுக்கான இடஒதுக்கீடு கொஞ்சமாக அல்லது முற்றிலும் நடைமுறைப்படுத்தாமல் உள்ளது” என விளக்குகிறார் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கும் அரசியல் ஆய்வாளரான ஹரிஷ் வான்கடே.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடை நீர்த்துப்போக வைக்க தொடர்ந்து முயற்சிகள் நடக்கின்றன என்று கூறும் வான்கடே, “கிரீமி லேயரை –இடஒதுக்கீடு கோரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வருமான வரம்பை 1992-ம் ஆண்டு கொண்டு வந்தது உச்சநீதிமன்றம் -    உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார். இதனால் குறிப்பிட்ட நிலைக்கு மேலுள்ள இந்தச் சமூகத்தினர் இடஒதுக்கீடு பெற முடியாது. இது இடஒதுக்கீடு என்ற விஷயத்திற்கு முரணாக உள்ளது. இடஒதுக்கீடு என்பது சமூகத்தில் பிந்தங்கிய நிலை என்ற அடிப்படையில் வருவது, பொருளாதாரத்தால் அல்ல”.

“கிரீமி லேயர் என்ற கருத்துக்கு ஆதரவாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் எந்தப் பிரிவினரும் ஒன்று சேரவில்லை என்றாலும், இடஒதுக்கீடு என்ற பிரநிதித்துவ கொள்கையை நீர்க்கச் செய்து பிற்படுத்தப்பட்டோருக்கான சமூக நீதியை மறுக்கச் செய்வதில் குறியாக இருக்கிறார்கள்” மேல் சாதியினர் என விளக்கம் தருகிறார் வான்கடே

 “தலித் மற்றும் ஆதிவாசிகளுக்கன இடஒதுக்கீடுகளுக்கு நீண்ட வரலாறு – பிரிட்டிஷ் காலத்திலிருந்தே - உண்டென்பதால் அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் அதே வேகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் பிற்படுத்தபட்டோருக்கான இடஒதுக்கீடிற்கு பலமான அரசியல் சக்தி இல்லை என்பதால், நிர்வாகத்தில் பணியாளர்களாக உள்ள மேல் சாதியினர் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை மறுக்கவே எப்போதும் பார்க்கிறார்கள். எல்லா நேரங்களிலும் இப்படித்தான் நடக்கிறது” என வதிடுகிறார் வான்கடே.

 

Leave Comments

Comments (0)