DARK DRAVIDIAN - PROUD TAMIZHAN
April 18, 2022 - selvamani T
May 16, 2022,6:37:37 PM
தவ.செல்வமணி
கடந்த 2018 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் பெண் பத்திரிகையாளர்களை பற்றி மிகவும் இழுவாக பதிவிட்டு இருந்தார்.
அதற்க்கு எதிராக பெண்கள் மற்றும் சனநாயக அமைப்புகள் அவரை கைது செய்யகோரி போராட்டங்கள் நடத்தின,அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பற்றி பார்ப்போம் !
பத்திரிக்கையாளர்களாகிய பெண்கள் ஒரு சில அட்ஜெஸ்ட் மென்ட் செய்து கொண்டால் தான் உயரிய பதவிகளில் உட்கார முடிகிறது என்று நடிகர் எஸ் வி சேகர் பேசுகிறார் என்றால் இந்த ஆண் மைய சமூகத்தின் ஆதிக்கத்தின்,பார்ப்பனிய திமிரின்,பெண்களை சக மனிதர்களாக கூட பார்க்காததின் வெளிப்பாடே அத்தகைய பேச்சு !
என்றும் அத்தகைய மிக மோசமான பெண்களுக்கு எதிரான இந்த வன்மம் நிறைந்த பேச்சுக்கு எத்தனை நாள் அவர் சிறைவாசம் அனுபவித்தார் எனவும் பலர் சமூக வலைத்தளங்களில் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
2018 யில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பல நாட்கள் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள் என்று செய்திகளும் உலா வந்தன.
ஆனால் இந்த வழக்கை ரத்து செய்யகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் எஸ் வி சேகர் மனு தாக்கல் செய்தார் கிட்ட்த்தட்ட மூன்று வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு தொடர்பாக ஒருமுறை கூட எஸ் வி சேகர் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை,போலீசாரால் அவர் கைது செய்யப்படவும் இல்லை.
தற்போது ஏப்ரல் 2 ஆம் தேதி 2022 யில் மத்திய குற்றப்பிரிவு போலீசில்,விசாரணைக்கு ஆஜராகும் படி நீதிபதி உத்தரவிட்டார்,அதன் படி ஆஜாராகிய எஸ் வி சேகர் அவர்கள் அந்த பதிவை அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் முகநூலில் போட்டு இருந்தார் அதையே நானும் பதிவு செய்தேன் என்னை மன்னித்து விடுங்கள் என்று பொது மன்னிப்பு கேட்டுள்ளார்.
நீதிமன்றம் இந்த வழக்கை ஏப்ரல் 18 ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.
யாருடைய பதிவாக இருந்தாலும் அதை அவருடைய விருப்பத்தின் பேரில் தானே பதிவு செய்துள்ளார் என்றும்,
பெண் பத்திரிக்கையாளர்களை பற்றி இத்தகைய இழிவாக பேச்சு வெளிப்பட்டும் அவரை காவல்துறையால்,சட்டத்தாலும் தண்டிக்க இயலவில்லையே என்று பலரும்,இதற்கெல்லாம் காரணம் அவர் பார்ப்பனர் எனவும் யார் அதிகாரத்திற்கு வந்தாலும் இந்திய அரசியலமைப்பு பார்ப்பனிய பயங்கவாத சித்தாந்தத்துக்கு கட்டுப்பட்டது என பலரும் பலவாறு கருத்து தெரிவிக்கின்றனர்.
எப்படி உலகம் முழுக்க முதலாளித்துவம் ஆட்டிப்படைக்கிறதோ ! அதனுடன் சேர்ந்து இந்தியாவில் பார்ப்பனீயம் தலைவிரித்தாடுகிறது எனவும் பார்ப்பனர்களுக்கு மட்டும் தனி நீதியான மனு நீதி இன்னும் தொடரும் அவலம் நடந்தேறிக்கொண்டே உள்ளது எனவும் பலர் கூறி வருகிறார்கள்.
காப்புரிமை © 2021 கருஞ்சிறுத்தை. All Right Reserved.
Leave Comments