மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட பங்கீடு இந்த ஆண்டு ரத்து. உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!!

/files/werr-2020-11-29-13:17:39.jpg

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட பங்கீடு இந்த ஆண்டு ரத்து. உச்ச நீதிமன்றம் உத்தரவு.!!!

  • 7
  • 0

-ஆனந்த்

மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இட பங்கீடை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு, தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது. தமிழக அரசு அந்த பதில் மனுவில் மருத்துவ முதுகலை படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத இட பங்கீடு அனைத்து பிரிவினருக்கானது என்றும், இது தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது என்று தெரிவித்திருந்தது.

இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்ட 50 சதவீத இட பங்கீடு இந்த ஆண்டு ரத்து செய்து உச்ச நீதி மன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

sorce: https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/27115343/2104468/Tamil-News-SC-not-allowed-50-quota-in-PG-courses-for.vpf


Leave Comments

Comments (0)