பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர்  உள்பட 11 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது..!

/files/txting-2020-11-24-14:59:16.jpg

பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர்  உள்பட 11 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது..!

  • 14
  • 0

க. ஆனந்த்சென்னை வண்ணாரப்பேட்டையில், பெண் ஒருவர், கணவனை இழந்த நிலையில், தனது 13 வயது மகளுடன் தனியாக வசித்து வருகிறார்.  இரண்டு மாதங்களுக்கு முன், சிறுமியின் தாயின் அக்கா மகளான ஷாகிதா பானு, உடல்நலம் சரியில்லாத, தன்னை கவனித்துக் கொள்ள சிறுமியை அனுப்பும்படி கேட்டுள்ளார்.


ஷாகிதா பானு, மதன் குமார் என்பவரை மறு திருமணம் செய்து வியாசர்பாடியில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ஷாகிதா பானுவின் வீட்டிற்கு வந்த சிறுமியை, அவரது கணவர் மதன் குமார் பாலியல் அத்துமீறலில்  ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் ஷாகிதா பானு, மதன் குமார் மற்றும் பாலியல் தொழில் செய்துவரும் மதன் குமாரின் தங்கை சந்தியா ஆகியோர் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனர்.


இதற்கிடையே சந்தியாவின் நெருங்கிய நண்பர்களான, காசிமேடு பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி 

ராஜேந்திரனும், எண்ணூர் காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தியும் சிறுமியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.


இந்தநிலையில் தனது மகள் 2 மாதங்களாகியும் வீடு திரும்பாததால், கலக்கம் கொண்ட தாய். ஷாகிதா பானுவின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று. மகளை கேட்டு சண்டையிட்டுள்ளார் . இதையடுத்து சிறுமி தாயிடம் ஒப்படைக்கப்பட்டார்.


வீடு திரும்பிய சிறுமி, ll தாயிடம் நடந்த அனைத்தையும் கூறி அழுதுள்ளார். இதனை அடுத்து, வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையை தொடங்கிய காவல்துறையினர், முதற்கட்டமாக காவல் ஆய்வாளர் புகழேந்தி, பாஜக நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்ட 11 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்துள்ளனர்.


மேலும் இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுளார்களா?? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Leave Comments

Comments (0)