மக்கள் கலை இலக்கிய விழா – 2019 (சேலம், மேட்டூர்)

/files/20 2020-05-29 19:23:42.jpg

மக்கள் கலை இலக்கிய விழா – 2019 (சேலம், மேட்டூர்)

  • 9
  • 0

இந்த மானிடம் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு பரிமாண வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி கசப்பான வன்மங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த மானிடம் எல்லாத் துறைகளிலும் வெவ்வேறு பரிமாண வளர்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தாலும், நம்மைச் சுற்றி கசப்பான வன்மங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இவை அனைத்தையும் கடந்து தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த நகர்வை முன்வைக்க வேண்டிய சூழலில் நம் மனதில் தேங்கி நிற்கும் கரைகளை நீக்கி நம்மை மீண்டும் இயக்குதலுக்குள்ளாக்கும் பெரும் பங்கினை இந்த கலை இலக்கியம் செய்துவருவதை நம்மால் மறுக்கமுடியாது. ஆதலால்தான் ஐரோப்பாவின் தத்துவ மேதையான எகல் “கலை இலக்கியம் மனிதர்களுக்கு அவசியமான மருந்து” என்கிறார்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கலை இலக்கியத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தீராத பற்றுகொண்டு முனைப்போடு பல சிறந்த கலைஞர்களும், இலக்கிவாதிகளும் உருவாகிவருகிறார்கள். இருந்தும் இங்கு பல கலைகளும், கலைஞர்களும் நம் சமூகத்தில் நிரம்பி நிற்கும் சாதியத்தைப் போலவே தீண்டப்படாமல் கிடப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

நவீன காலத்தின் நெருக்கடியாலும், தொழில்நுட்பத்தின் அகோர வளர்ச்சியாலும் எல்லாத்துறைகளிலும் ஏற்படும் பெரும் பாதிப்பும் மாற்றமும் கலைத்துறையையும் விட்டுவைக்கவில்லை, ஆனாலும் அழிவுநிலையில் இருக்கும் நாட்டுப்புறகலைகளை தாங்கிக்கொண்டிருக்கும் கலைஞர்கள் இதில் தங்களுக்கு மிகப்பெரிய பொருளாதார லாபம் இல்லை என தெரிந்தும் இந்த கலையை விடமுடியாமல் பித்துப் பிடித்தவர்களைப்போல பற்றிக்கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள நாட்டுப்புற கலைகளையும், கலைஞர்களையும் ஆதரிக்கவோ அங்கீகரிக்கவோ யாரும் முன்வருவதில்லை. காரணம் இந்த கலைஞர்களை அங்கிகரிப்பதால் எந்தவொரு சுயலாபமும் அடையமுடியாது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கக்கூடும். இதே நிலைதான் எழுத்தாளர்களுக்கும் உள்ளது. பெரும்பாலும் சமரசமான கொள்கையோடு ஜனரஞ்சக நோக்கில் எழுதப்படும் படைப்புகள் மட்டுமே இங்கு அங்கிகரிக்கப்படுகிறது. 

இந்த நிலைபாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் கலை – இலக்கியத்தை கடைசி 12-வருடமாக ஏர்வாடி மேட்டூரில் “மக்கள் கலை இலக்கிய விழாவின் வாயிலாக தமிழ்நாட்டின் மூலைமுடிக்கில் வாழ்ந்து கொண்டிருக்கும் திறமையான நாட்டுப்புற கலைஞர்களையும், எழுத்தாளர்களையும் ஒன்றிணைத்து ஊக்கூவித்து மேலும் அவர்கள் கலைப்பணியை தொடர்ந்து செய்ய அவர்களுக்கு மரியாதையையும், விருதையும் வழங்கிக் கொண்டிருக்கும் சேலத்தை சேர்ந்த எழுத்தாளர் மு. ஹரிகிருஷ்ணன் அவர்களை போற்ற வேண்டியது நம் ஒவ்வொருடைய கடமையாக நான் கருதுகிறேன். Leave Comments

Comments (0)