செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஒலி கேட்டது

/files/16 2020-05-29 18:42:35.jpg

செவ்வாய் கிரகத்தில் ஒரு புதிய ஒலி கேட்டது

  • 18
  • 0

கடந்த மே மாதம் 5ஆம் தேதி நாசா விண்ணில் இன்சைட் விண்கலம் செலுத்தப்பட்டது. முதன்முதலாகச் செவ்வாய் கிரகத்திலியிருந்து ஒலி கேட்டதாக நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் வடிவமைக்கப்பட்ட முதல் ரோபோ விண்கலம் இன்சைட். இந்த ரோபோவை கடந்த மாதம் மே 5ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இன்சைட் விண்கலம் அதனின் பயணத்தை தொடர்ந்தது . 6 மாதங்கள் பிறகு நவம்பர் 26 ஆம் தேதி இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

இன்சைட் விண்கலம் மூலம், செவ்வாய் கிரகத்தில் முதன்முதலாக ஒலி கேட்டதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒலியை இன்சைட் விண்கலம் பதிவு செய்துள்ளது. இந்தச் சத்தம் காற்றின் அதிர்வலைகள் போல் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் வடமேற்கிலிருந்து தென் கிழக்கு நோக்கி 10 முதல் 25mph இந்த அதிர்வலை என்று தெரியவந்துள்ளது. இது காற்றின் ஒலி எனவும் பதிவாகியுள்ளது. 

இதுகுறித்து, நாசாவின் புரூஸ் பென்ர்ட் கூறியவாது, " நாங்கள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியுள்ள இன்சைட் அதிர்வலைகளையும், ஒலிகளையும் பதிவு செய்யும் தொழில்நுட்பம் கொண்டுள்ளது. இந்த மாதிரியான சின்ன சின்ன சத்தங்களும், கோள்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகப் பெரிய உதவியாக இருக்கும். இப்பொது இன்சைட் பதிவு செய்து அனுப்பியுள்ள ஒலியை நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை " என்று தெரிவித்துள்ளார். 

 இந்த இன்சைட் மிக முக்கியமான, அதிசயத்தக்க வேலைகளையும் செய்துள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது என்று ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.Leave Comments

Comments (0)