அடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்

/files/12.jpg

அடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்

  • 22
  • 0

நவம்பர் 29, 2018 அன்று பிலிம்ஸ்ட்ரக் சேவை நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதிலிருந்து எங்களுக்கு கிடைத்த ஆதரவு நம்பிகை அளிப்பதாகவும் மனதிற்கு இதமாகவும் உள்ளது. எங்களது குறிக்கோளும் திரைப்படமும் உங்களுக்கு எந்தளவிற்கு முக்கியமானது என்பதை உலகுக்கு தெரிவிப்பதற்காக மனுக்களில் கையெழுத்திட்டவர்கள், கடிதம் எழுதியவர்கள், பத்திரிக்கைகளில் கட்டுரை எழுதியவர்கள் மற்றும் இதற்காக தங்கள் குரல்களை எழுப்பியவரகள் ஒவ்வொருவருக்கும் இந்த சமயத்தில் எங்கள் நன்றியை கூறிக் கொள்கிறோம்.

பிலிம்ஸ்ட்ரக்கில் எங்கள் நண்பர்களோடு நாங்கள் தேர்வு செய்து வெளியிட்ட நிகழ்ச்சிகளை நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை கூறப் போகிறோம். ஆம், கிரிட்டீரியன் (Criterion) சேகரிப்பு குழு 2019-ம் ஆண்டு எந்தவொரு நிறுவனத்தின் உதவியும் இன்றி சுயாதீன சேவையாக கிரிட்டீரியன் சேனலை தொடங்கவுள்ளது.

ஏதாவது வித்தியாசமாக கொடுக்க வேண்டும் என்று கடந்த இரண்டு வருடங்களாக முயற்சித்து வந்தோம், அதன் விளைவே திரைப்பட விரும்பிகளுக்கான இந்த ஸ்ட்ரீமிங் சேவை. தேர்ந்தெடுத்த கருப்பொருள் சார்ந்த நிகழ்ச்சிகள், சினிமாவின் வரலாறு, புதிய தலைமுறை இயக்குனர்கள் மற்றும் திரைப்பட விரும்பிகள் இதில் பழைய படங்களையும் அரிதான படங்களையும் காணலாம். மேலும் இங்கு பல்துறை நிபுணர்கள், ஆய்வாளர்கள், திரைத்துறை மேதைகள் ஆகியோரிடம் இருந்து புதுவரவினர் எளிதாக வழிகாட்டுதல்களை பெறலாம்.

பழைய சேவை எங்கே விட்டதோ அங்கிருந்தே கிரிட்டீரியன் சேனல் ஆரம்பிக்கவுள்ளது. குறிப்பாக, முக்கியமான ஹாலிவுட் மற்றும் சர்வதேச திரைப்பட நாயகர்களின் நினைவலைகள், உலகம் முழுதும் உள்ள எளிதில் கிடைக்கப்பெறாத திரைப்படங்கள், வர்ணனைகள், திரைப்படத்திற்கு பின்னால் உள்ள காட்சி துணுக்குகள், ஆவணப்படங்கள். மேலும் எங்களது தொடர்களான Adventures in Moviegoing, Art-House America, Split Scree, Met the Filmmakers, Ten Minutes or Less section ஆகியவையும் ஒளிபரப்பப்படும். அதுமட்டுமல்லாமல், Tuesday’s Short + Feauture மற்றும் Friday Night Double Feature, எங்களின் வழக்கமான மாதாந்திர 15 நிமிட திரைப்பட வகுப்பான Observation on Film Art ஆகியவையும் ஒளிபரப்பப்படும். 

இந்த புது சேவையின் முழு உரிமையும் கட்டுப்பாடும் கிரிட்டீரியன் கலெக்‌ஷன் உடையதே. ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் கனடாவில் சேவையை தொடங்கு நாங்கள், போகப் போக வேறு நாடுகளுக்கும் எங்கள் சேவையை எடுத்துச் செல்வோம்.

அடுத்த வருடம் புதிதாக தொடங்கவுள்ள வார்னர் மீடியாவின் வாடிக்கையாளர் தளத்திலும் எங்களது உள்ளடக்கத்தை பெறலாம். ஆக, இரண்டு சேவையும் தொடங்கிய பிறகு, தாங்கள் விரும்பும் படங்களை பல வழிகளில் இருந்து கிரிட்டீரியன் ரசிகர்கள் பெறலாம்.

ஒன்றுமில்லாமல் எந்தவொரு சந்தாதாரர்களும் இல்லாமல் முதற்படியிலிருந்து இந்த சேவையை தொடங்கியுள்ளோம். ஆகையால் உங்கள் உதவி எங்களுக்கு தேவைப்படுகிறது. எங்களுக்கு நீங்கள் உதவக்கூடிய மதிப்புமிக்க காரியம் என்றால் இதில் go to Criterion.com/channel and sign up to be a Charter Subscriber தயவுசெய்து சேருங்கள். இது பற்றி உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள். பிலிம்ஸ்ட்ரக் சந்தாதாரர்கள் அல்லது மனுவில் கையெழுத்திட்டவர்கள், ட்வீட் செய்தவர்கள் மற்றும் கடிதம் எழுதியவரக்ள் என அனைவரும் எங்களுக்கு தேவைப்படுகிறார்கள். நீங்கள் இல்லாமல் எங்களால் எதுவும் செய்ய முடியாது.
Leave Comments

Comments (0)